எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

ஞாயிறு, ஜூன் 19, 2011

வாணாதிராஜபுரம் கிளைக்கு மைக்செட், ஸ்பீக்கர், ஆம்ளிபயர் அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை (வடக்கு) வாணாதிராஜபுரம் கிளைக்கு கடந்த 12-06-2011 அன்று மைக்செட், ஸ்பீக்கர் மற்றும் ஆம்ளிபயர் வாங்கி அன்பளிப்பு செய்யப்பட்டது. இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை கூட்டமைப்பு (ரியாத்) 7700 ரூபாய் நிதியுதவி அளித்தது.

நாகை வடக்கு மாவட்ட பொதுக்குழு

2011 ஆம் வருடம் ஜூன் மாதம் 11 தேதி மாலை 5 மணிக்கு பொறையார் TNTJ மர்கசில் நாகை வடக்கு மாவட்ட பொதுக்குழு மாநில துணைத்தலைவர் கோவை அப்துர் ரஹீம் தலைமையிலும் மாநில பிரதிநிதி தௌபீக் முன்னிலையிலும் நாகை வடக்கு  மாவட்ட பொதுக்குழு  நடைப்பெற்றது. அதுசமயம் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம்

தலைவர் : சீர்காழி முஹம்மத் நாசர் - 9842063511


செயலாளர் : வடகரை முஹம்மத் இப்ராகிம் - 9786371146

பொருளாளர் : மங்கனாம்பட்டு நிஜாமுதீன் - 9787154700

துணைத்தலைவர் : ஆயப்பாடி அப்துல் ஹமீது - 9865068438

துணைசெயலாளர் : பொறையார் தமீமு அன்சாரி - 9952193717

துணைசெயலாளர் : துளசெந்திரபுரம் ராஜா முஹம்மத் - 9943319560

மருத்துவ சேவை அணி செயலாளர் : கிளியனூர் முஹம்மத் இயாஸ் - 9715022009

மாணவரணி செயலாளர் : கடலங்குடி முஹம்மத் பாசில் - 9940828257

பொறையார் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 12 06 2011 அன்று இரத்த தான முகாம் மற்றும் இரத்த பிரிவு கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 31 சகோதரர்கள் ரத்த தானம் செய்தனர்.

பொறையார் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 4 06 2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.




இதில் மேலகாவேரி அந்நூர் மதரசா ஆலிமாக்கள் கலந்துக் கொண்டு மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினர். மேலும் ஜனாஸா தொழுகை பயிற்சியும் வழங்கப்பட்டது. பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.



சங்கரன்பந்தல் கிளையில் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சங்கரன்பந்தல் கிளையில் கடந்த12.06.2011, அன்று JR கோல்டன் திருமண மஹாலில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது




இதில் முஸ்லிம்களின் கேள்விகளுக்கு மேலாண்மை குழு உறுப்பினர் M.அப்பாஸ் அலி Misc பதில் அளித்தார். இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !



 

கல்வி உதவி

தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் திருமங்கலத்தை சார்ந்த ஏழை சகோதரருக்கு மாவட்டம் சார்பாக கடந்த 03.06.11 அன்று ரூபாய் 15 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.

இஸ்லாம் தீவிரவாதத்தை வழர்க்கிறதா? நோட்டீஸ் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டத்தில் கடந்த1-6-2011 அன்று இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா என்ற நோட்டிஸ் 2, ஆயிரம் மாற்று மதத்தினர் மற்றும் சமுதாய சகோதரர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது