எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

திங்கள், ஜூன் 24, 2013

நாகை மாவட்ட (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு ஜுன் மாதக் கூட்டம்

நாகை (வடக்கு) மாவட்ட கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் ரியாத் TNTJ மர்கஸில் 21.06.2013 அன்று மாலை 4.30 மணிக்கு அதன் பொறுப்பாளர் சகோ. பெரியகூத்தூர் சகோ. ஹாஜா அலாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 இதில்  இறை நினைவு என்ற தலைபில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பேசப்பட்டு, மாவட்ட கடிதம் வாசிக்கப்பட்டது.

மாவட்ட சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.


கிளியனூரில் மீண்டு(ம்) வந்த அடக்கஸ்தல பிரச்சனை

தவ்ஹீத் சகோதரர் வீட்டு இறப்புச்செய்தி என்றாலே! நாகை மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊர்பொதுமக்களுக்கு ஒருவித பதற்றம் ஏற்படத்தான் செய்கின்றது.
நாகைவடக்குமாவட்டம், தரங்கம்பாடிதாலுகா,கிளயனூர் கிராமத்தில் ஜம்ஜம் நகரில் வசித்து வரும் சகோதரர் ஜெகபர்சாதிக் அவர்களின் பாட்டி 14ஜூன் 2013 அன்று இரவு சுமார் 9:30 மணியளவில் மரணமடைந்து விடுகின்றார்கள். இச்செய்தி காற்றுத்தீப்போல் மாவட்டம் முழுவதும் விரைவாக பரவுகின்றது. ஏனென்றால் இவ்வூரில்தான் சில மாதங்களுக்கு முன்பு இறந்த பச்சிளம் குழந்தையை குடும்பத்தாரின் அனுமதியின்றி பிடிங்கி அடக்கம் செய்து, பிணத்தைவைத்து பணம் மற்றும் புகழ்தேடும் ஊராக அனைவராலும் அறியப்பட்டதால் இப்பொழுது என்ன ஆகுமோ என்ற பீதியில் அவ்வூர் இளைஞர்கள் மற்றும் வியாபாரிகள் கூட கடையைத் திறக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.இன்று முழுவதும் கடையை திறக்க்க்கூடாது என்று ஊர்நிர்வாகிகளால் வியாபாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
அடுத்தநாள் பொழுதுவிடிந்த பொழுது ஊர் சுன்னத்வல் ஜமாத் நிர்வாகிகளை, கிளியனூர் கிளை தவஹீத் நிர்வாகிகள்சந்தித்து இறப்புச் செய்தியை தெரிவித்து, இறந்தவரின் உறவினர் நான் நபிவழிப்படி தான் தொழுகை நடத்துவேன் எனக்கூறியதை எடுத்துக்கூறியதும், அவர்களோ எதைப்பற்றியும் சட்டைச் செய்யாமல் எங்களின் விருப்பப்படித்தான் செய்வோம் என்று கூறிவிட்டு தங்களின் சகாக்களான அ.இ.அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு நாகை மாவட்ட செயலாளர் S.M.சம்சுதீன், துணை செயலாளர் கிளியனூரை சார்ந்தஷபிர் இவர்களின் தலைமையில்,  DMK வை சார்ந்த அரங்க‌குடி முசாவுதீன், SDPI, லீக், வட்டாரஜமாத் என்ற போர்வையில் வலம் வரும் ரவுடிகும்பல், ம.ம.க‌ மற்றும் சுற்றுவட்ட ஊர்களின் நிர்வாகி களை கலந்தாலோசனை செய்ய சென்றுவிட்டார்கள்.
இதற்கிடையில் தவ்ஹீத் கிளைச் சகோதரர்கள் காவல்துறைக்கு செய்திகளை தெரிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யுமாறு கடிதம் அனுப்பினர்.தவ்ஹீத் சகோதர்ரின் குடும்பத்தில் ஏற்பட்ட இறப்பிற்கு கலந்துக்கொள்ள நாகை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து 1000 ற்கு மேற்பட்ட சகோதரர்கள் ஜனாஸாவை அடக்கம் செய்யும் நேரம்வரையில் வந்துக்கொண்டே இருந்தனர்.
காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கள ஆய்வுசெய்து, அமைதிபேச்சுவார்த்தைக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தது. இருதரப்பினரிடமும் பேசியதில் முடிவு ஏதும் எட்டப்படாததால், தாசில்தார் சுன்னத்வல் ஜமாத்தினரிடம் ஒரு தரப்பினரின் பிரேதத்தை அடக்கும் முறையில் யாரும் தடுக்க இயலாது என்பதை விளக்கி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். அரசுதரப்பினரிடமிருந்து. தமக்கு ஏதும் அதரவுகிட்டாததாலும், உள்ளூர்மக்களின் ஆதரவும் கிடைக்காமல் சுமார் 350பேர்கள் மட்டும் திரண்டு அதுபோதாமல் அரசியல்வாதிகளின் செல்வாக்கும் தங்களுக்கு எந்தவித சாதக நிகழ்வு நடைபெறாத்தால் சமாதான குழுவை அனுப்பி தவ்ஹீத்ஜமாஅத்தினரை சரிகட்ட நினைத்தனர்.
தவ்ஹீத்ஜமாஅத்தினர் நபிவழியே உயிர்மூச்சி என்றிருந்ததால் இவர்களின் அனைத்து வித தந்திரங்களும் நம்மிடம் எடுபடாமல் போனது. இவர்களின் ஒவ்வொரு தந்திரங்களும் நமக்கு எதை ஞாபகப்படுத்தியது என்றால். நபி (ஸல்) கூறியதுபோல்,“ஒருமூமின் ஒருமுறைக்கு மேல் புற்றில் கை விடமாட்டான்” என்ற நபிமொழிதான் நினைவில்வந்தது.
தங்களுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தநிலையில் இறுதியாக சங்கு போட்டு மக்களை கூட்ட நினைத்து அதுநிறைவேறாததால், ஜெயலலிதா அம்மாவின் இலவசமிக்ஸி, கிரைன்டர்வழங்க இருப்பதாக அறிவிப்புச் செய்து பெரும்பான்மை பெண்களைக்கூட்டி அவர்களை திருமணமண்டபத்தில் அடைத்து வைத்து இருந்தனர். நாம் ஜனாஸாவை அடக்கவரும் தருணத்தில் பெண்களை வெளியேற்றி குழப்பம் விளைவிக்க நினைத்ததை அறிந்த நம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் திடீரென ஒரு திட்டத்தை அரசுதுறையினரிடம் தெரிவித்தனர். அதுதான் நம் சகோதரர் ஒருவரின் மனையைமையவாடியாக பயன்படுத்தலாமா என கேட்கப்பட்டு உடனடியாக அரசு அதிகாரிகள் அவ்விடத்தை பார்வையிட்டு, அனைத்துதரப்பினரின் கருத்து கேட்கப்பட்டு சம்மத முடிவு அறிவிக்கப்பட்டு அதற்கான அதிகார ஆணையையும்வழங்கினர். இதனைப்பெற்றுக் கொண்ட தவ்ஹித் சகோதரர்கள். இரவு சுமார் 9:00மணியளவில் இறந்தவரின் கடனைதான் ஏற்றுக்கொள்வதாக பேரன் அறிவிக்க உடனடியாக நமது தவ்ஹீத் மர்கஸின் தெருவெளியில் 1000ற்கும் மேற்பட்டோர் தொழுகையில் கலந்துக்கொண்டனர். தொழுகையை இறந்தவரின் பேரனால் நபிவழிமுறைப்படி நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.தவ்ஹீத் சகோதரர்களுக்காக நாகைமாவட்டத்தில் முதன்முறையாக கிடைக்கப்பெற்ற மையவாடியாகும் எல்லாப்புகழும்அல்லாஹ்விற்கே.
அ.தி.மு.க சிறுபான்மைப்பிரிவு செயலாளர் வடகரை-அறங்கக்குடியைச் சேர்ந்த எஸ்.எம்.சம்சுதீன் தனதூரிலும் தவ்ஹீதின் வளர்ச்சியைத் தடுக்க கிளியனூரில் ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டார். அறங்கக்குடியில், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முத்தவல்லி பொறுப்பை 14ஆண்டுகளாக ஆக்ரமித்து வைத்துக்கொண்டு தவ்ஹீதின்வளர்ச்சி தன் ஆட்சியை ஆட்டம் காணவைத்துவிடுமோ என்ற அச்சத்தில் தனது ஊரில் தவ்ஹீத்பிரச்சாரமோ, போஸ்டர் மற்றும் பிட் நோட்டீஸ் வினியோகமோ செய்யவிடாமல் தடுத்து வந்தார். மிஹ்ராஜூம் தவரான வழிமுறைகளும் என்ற பிட் நோட்டீஸ் தவ்ஹீத் சகோதரர்களால் வீடு, வீடாக சென்று வெளியிடப்பட்டதை வஞ்சகமாகக் கொண்டு கிளியனூர் நிகழ்வை தனக்கு சாதகமாக ஆக்க நினைத்து கரியை பூசிக்கொண்டதுதான் மிச்சம்.




செவ்வாய், ஜூன் 18, 2013

பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பெரியார்பாளையம் கிளை


நாகை வடக்கு மாவட்டம் பெரியார்பாளையம் கிளை சார்பாக கடந்த 09-06-2013 அன்று பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்ரும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

 

 

மயிலாடுதுறை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற லாவன்யா







நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் கடந்த 10-06-2013 அன்று லாவன்யா  என்ற சகோதரி தன் வாழ்க்கை நெறியாக தூய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை யாஸ்மின் என மாற்றிக்கொண்டார்….

”கல்வியில் பின்தங்கியுள்ள முஸ்லிம்கள்” – துளசேந்திரபுரம் கிளை தெருமுனை பிரச்சாரம்”


நாகை மாவட்டம் வடக்கு துளசேந்திரபுரம் கிளை சார்பாக கடந்த 08.06.2013 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடை பெற்றது. ஜியாவுதீன்  அவர்கள் கல்வியில் பின்தங்கியுள்ள முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரையாற்றினர். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

துளசேந்திரபுரம் கிளை சார்பாக நோட்டீஸ் வினியோகம்

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளை சார்பாக கடந்த 5/6/2013 அன்று மிஃராஜூம் தவறான நம்பிக்கைகளும் என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்து தஃவா செய்யப்பட்டது.


பொறையார் நகரக் கிளை சார்பாக கல்வி உதவி

நாகை வடக்கு மாவட்டம் பொறையார் நகர கிளை சார்பாக சகோதரர் ஒருவரின் மகளின் கல்வி உதவிக்காக ரூபாய் 2000 ஐ கிளை தலைவர் தமீமு அன்சாரி அவர்களால் வழங்கப்பட்டது.


திங்கள், ஜூன் 10, 2013

ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்திய ஏர்டெல் நிறுவனம்

ஏகத்துவ எழுச்சியில் மற்றுமொரு மைல்கல்!

ஏகத்துவ காலர் ட்யூன்களை ஏற்கனவே பிஎஸ்என்எல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியிருந்தன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் முன்னணி செல்ஃபோன் நிறுவனங்களான ஏர்டெல் நிறுவனமும் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியுள்ளது இது பிறமத மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துவைக்க உதவும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை பெற….
ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கக் கூடியவர்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் உங்களுக்கு விருப்பமான ஏகத்துவ காலர் ட்யூனுக்கு உண்டான எண்ணை உங்களது செல்பேசியிலிருந்து டயல் செய்தால் உங்களுக்கு ஏகத்துவ காலர் ட்யூன்கள் ஆக்டிவேட் செய்யப்படும்.
காலர் ட்யூன் பெயர் ஆல்பம் எண்
அல்லாஹ் தேவைகளற்றவன் Arthamulla Islam 5432112620174
அல்லாஹ்வுக்கு ஓய்வில்லை Arthamulla Islam 5432112620175
தர்கா வழிபாடு இஸ்லாத்தில் இல்லை Arthamulla Islam 5432112620176
ஏகத்துவம் 1 Arthamulla Islam 5432112620177
ஏகத்துவம் 2 Arthamulla Islam 5432112620178
ஏகத்துவம் 3 Arthamulla Islam 5432112620179
இறைதூதர்கள் Arthamulla Islam 5432112620180
இஸ்லாமிய கடமை Arthamulla Islam 5432112620181
இஸ்லாமிய மார்க்கம் Arthamulla Islam 5432112620182
கடமைகள் Arthamulla Islam 5432112620183
மறுமை Arthamulla Islam 5432112620184
மறுமை 1 Arthamulla Islam 5432112620185
மறுமை 2 Arthamulla Islam 5432112620186
முஹம்மது நபி 1 Arthamulla Islam 5432112620187
முஹம்மது நபி 2 Arthamulla Islam 5432112620188
முஹம்மது நபி 3 Arthamulla Islam 5432112620189
முஹம்மது நபி 4 Arthamulla Islam 5432112620190
ஓரிறைக் கொள்கை Arthamulla Islam 5432112620191
வட்டி Arthamulla Islam 5432112620192
யாரையும் பெறவில்லை Arthamulla Islam 5432112620193

எத்தனையோ பாடல்களையும், தேவையற்ற வீணான சினிமா வசனங்களையும் தங்களது காலர் ட்யூன்களாக வைத்து சீரழியும் சமுதாய மக்களை இஸ்லாமிய மார்க்கம் குறித்து சிந்திக்கத் தூண்டும் விதத்தில் இந்த ஏகத்துவ காலர் ட்யூன்கள் பயன்படும். இதை நமது சகோதரர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி ஏகத்துவ அழைப்புப்பணி செய்ய வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

நன்றி : www.tntj.net

ஞாயிறு, ஜூன் 09, 2013

நாகை மாவட்ட TNTJ ரியாத் சகோதரர்கள் கூட்டம்

நாகை வடக்கு மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் கூட்டம் கடந்த 24-05-2013 வெள்ளியன்று மாலை 4.30 மணிக்கு ரியாத் மண்டல மர்கஸில் பொறுப்பாளர் சாகுல் ஹமீது தலைமையிலும்  பொறுப்பாளர் ஹாஜா அலாவுதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.

சகோ.ஹாஜா அலாவுதீன் இம்மையா மறுமையா என்ற தலைப்பில் நம்முடைய ஈமான் எப்படி இருக்கவேண்டும் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்தில் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தாயகத்திலிருந்து வந்திருந்த கடிதம்  வாசிக்கப்பட்டது. மாவட்ட செயல்பாடுகள் பற்றிய செய்திகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.
கூட்டமைப்பு நிர்வாகம் தொய்வின்றி நடக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டன.உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் பதியப்பட்டன்.
கூட்டத்திற்கு நாகை மாவட்ட சகோதரர்கள் மற்றும் ஆர்வலர்கள் வந்திருந்தனர்.மக்ரிப் தொழுகைக்கு முன்னர் கூட்டம் துஆவுடன் நிறைவுற்றது.

Foreigners told to get exit/re-entry visas for dependents online

சவூதியில் ஃபேமிலி விசாவில் உள்ளவர்களுக்கு தாயகம் சென்று வர "எக்ஸிட் ரி என்ட்ரி / Exit Re Entry" அடிக்க ஜவ்ஸாத் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆன்லைன் மூலமே உள்துறை அமைச்சக இணையதளம் (Ministry of Interior - MOI.GOV.SA) மூலம் எக்ஸிட் ரி என்ட்ரி அடித்துக் கொள்ள வேண்டும்.

செயல்முறை:
1. ஜவ்ஸாத்தில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்களில் (KIOSK) சென்று, தங்களது இக்காமா எண்ணை கொடுத்தால், தங்களது விரல்களை ஃபிங்கர் பிரிண்ட் செய்யும்.

2. ஏற்கனவே தாங்கள் ஃபிங்கள் பிரிண்ட் பதிவு செய்திருப்பதால், இந்த இக்காமா எண்ணுக்குரியவர் தாங்கள் தான் என உறுதி செய்த பிறகு, தங்களுக்கு ஒரு USER NAME & PASSWORD கொடுக்கும்.

3. எக்ஸிட் ரி என்ட்ரிக்கான தொகையான 200 ரியாலை வழக்கம் போல், ATM அல்லது வங்கிக்கணக்கு மூலம் கட்டி விட வேண்டும்.

4. அதன்பிறகு, தாங்கள் விரும்பும் இடத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும், MOI.GOV.SA இணையதளம் சென்று, LOGIN செய்து எக்ஸிட் ரி என்ட்ரி அடித்துக் கொள்ளலாம்.

5. மேற்கண்ட USER NAME & PASSWORD -ஐ தொடர்ந்து உபயோகிக்கலாம். மீண்டும் மீண்டும் ஜவ்ஸாத் செல்ல தேவையில்லை.


Foreigners told to get exit/re-entry visas for dependents online

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி – வடகரை  கிளை.

 

நாகை வடக்கு மாவட்டம்  வடகரை கிளை சார்பாக கடந்த 01-06-2013 அன்று காலை எதிர்பாராத விதத்தில் மின் கசிவு ஏற்பட்டு ஒருவருடைய‌ வீடு தீக்கிறையானது. இதனை அறிந்த நமது தவ்ஹீத் ஜமாஅத்
நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர்  உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.


சேந்தமங்கலம் கிளை பெண்கள் பயான்

 

 

நாகை வடக்கு மாவட்டம் சேந்தமங்கலம் கிளை சார்பாக கடந்த  02-06-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.