எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

செவ்வாய், அக்டோபர் 26, 2010

துளசேந்தி்ரபுரத்தில் சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] துளசேந்திரபுரம் கிளை சார்பாக 23.10.2010, அன்று பள்ளிவாசல் தெருவில் சமுதாய விழிப்புணர்வு மற்றும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மிகச் சிறப்பாக பொதுக்கூட்டம் போல் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்ச்சிக்கு தலைமை அரசூர் ஃபாரூக் மாவட்ட து.தலைவர், வரவேற்புரை அபுல்ஹசன் கிளைச் செயலாளர், முன்னிலை நிஜாம் மாவட்ட து.செயலாளர், துவக்க உரை மன்சூர் மாவட்ட பேச்சாளர்.

மேலும் சிறப்புரை சம்சுல்குதா ஆலிமா துளசேந்திரபுரம், அப்துல் கரீம், மாநில பேச்சாளர் நன்றியுரை சையது அலி கிளை தலைவர் துளசேந்திரபுரம்.

இதில் அதிகமான ஆன்கள் பெண்கள் கலந்துக் கொண்டு நிகழச்சி சிறப்புற வைத்தார்கள்.




வெள்ளி, அக்டோபர் 08, 2010

கண்டன ஆர்ப்பாட்டம்

          

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் [வடக்கு] சார்பாக மயிலாடுதுறை, முத்து வக்கில் சாலையில் 05.10.2010, அன்று நக்கீரன் இதழையும் நக்[கி]ரன் கோபாலையும் கண்டித்து காலை மணி 11.30க்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். தலைமை H.M.புஹாரி மாவட்ட தலைவர், முன்னிலை பஹ்ருதீன் மாவட்ட செயளாலர்,நிஜாம் மாவட்ட துணை செயளாலர் கண்டன உரை கோவை அப்துர் ரஹீம் மேலாண்மை குழு. நன்றி உரை அரசூர் ஃபாரூக் மாவட்ட துணை தலைவர் இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள் கலந்துக் கொண்டனர்.

செவ்வாய், செப்டம்பர் 28, 2010

தாஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] சார்பாக 21.09.2010, அன்று P. J. மொழி பெயர்த்த குர் ஆன் இலவசமாக DR. பூபேஸ் தர்மேந்திரா M.B.B.S., வட்டார மருத்துவ அலுவலருக்கு மாவட்ட. து. செயலாளர் A.நிஜாம்தீன் வழங்கினார்.



இலவச கண் சிகிச்சை முகாம் - திருமுல்லைவாசல்

நாகை [வடக்கு] தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் நாகை மாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம், இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மாவட்டம் சார்பாக 21.09.2010, அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 வரை திருமுல்லைவாசல் அரசு துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.

தலைமை அரசூர் ஃபாரூக் மாவட்ட துனைத் தலைவர், முன்னிலை A.M. சலீம் திருமுல்லைவாசல் A.M.மன்சூர் மாவட்ட பேச்சாளர் TNTJ. இதில் 75, நபர்கள் கலந்துக் கொண்டு 20, து நபர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமணையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் நன்றி உரை A.நிஜாம்தீன் மாவட்ட து.செயலாளர்.

நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் - 17 செப்டம்பர் 2010

கடந்த 17 செப்டம்பர் 2010 அன்று மாலை 5.10 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டல மர்கஸில் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது.


இக்கூட்டம் சகோ. ஏனங்குடி அலாவுதீன் தலைமையில் அவர்களின் துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. காதியானிகளின் தோற்றமும் அவர்களின் சந்தர்ப்பவாதங்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து கடந்த மாத மினி்ட்டை செயலாளர் வாசித்தார். மேலும் நாகை (வடக்கு) மாவட்டத்திலிருந்தும் கிளைகளிலிருந்தும் வந்திருந்த நோன்புப் பெருநாள், ஃபித்ரா விநியோகம் மற்றும் கடந்த மாதத்தில் நடைபெற்ற சமுதாயப் பணிகள் குறித்த செய்திகள் வாசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட சில முக்கிய அம்சங்கள்

உம்முல் முஃமினீன் பெண்கள் மதரஸா வளர்ச்சிக்கு உதவுவது குறித்துவானாதிராஜபுரம் மற்றும் அரசூர் டிஎன்டிஜே கிளைகளிலிருந்து வந்திருந்த கோரிக்கை மனுக்கள் குறித்துகூட்டமைப்பிற்கு உறுப்பினர்களை அதிகம் சேர்ப்பது குறித்து

அல்லாஹ்வின் கிருபையால் மக்ரிப் தொழுகைக்குப்பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் [வடக்கு] வடகரை கிளை சார்பாக வசூலித்த தொகை 16694,தலைமை மூலம் 8000,ம் மொத்தம் 24699, இதை 101 குடும்பங்களுக்கு ஒரு பையின் மதிப்பு 244.65,க்கு 09.09.2010, அன்று இரவு 10.30,மணிக்கு பெருநாள் தர்மமாக விநியோகிக்கப்பட்டது.




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] ஆக்கூர் கிளையில் கடந்த 09.09.2010, அன்று நோன்புப் பெருநாள் தர்மம் விநியோகம் செய்யப்பட்டது தலைமை மூலம் 6000,ம் உள்ளூர் வசூல் 14470, மொத்தம் 20470, ரூபாய் 83 குடும்பங்களுக்கு 247.50 விகிதத்தில் உணவுப் பொருள்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டன

பொறையார் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 23998 மதிப்பிற்கு 142 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.


நாகூரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.


நாகூரில் ரூபாய் 82 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் நகரத்தில் இந்த ஆண்டு 450 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 150 மதிப்புள்ள உணவுப் பொருட்களும் 100 ஏழை குடும்பங்களுக்கு 100 ரூபாய் வீதம் மொத்தம் ரூபாய் 82900 மதி்ப்பிற்கு ஃபித்ரா வழங்கப்பட்டது.


நாகப்பட்டிணம் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் நாகப்பட்டிணம் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது.




இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.


சனி, செப்டம்பர் 18, 2010

பெருநாள் தர்மம் - தொழுகை கிளியனூர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] கிளியனூர் கிளை சார்பாக கடந்த 09.09.2010, அன்று இரவு 11.00,மணிக்கு ஃபித்ரா விநியோகம்  செய்யப்பட்டன தலைமை மூலம் 5000,ம் வசூள் 9300, மொத்தம் 14300, ஒரு குடும்பத்துக்கு 220 வீதம் 65 து குடும்பத்திற்க்கு வழங்கப்பட்டது.







பெருநாள் தொழுகை
நாகை மாவட்டம் [வடக்கு] கிளியனூர் கிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 10.09.2010, அன்று தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைப் பெற்றது காலை 8.10 க்கு இறை அச்சம் என்ற தலைப்பில் நவ்சாத் உரை நிகழ்த்தினார் ஆண்கள் பெண்கள் கலந்துக் கொண்டனர்.

உதவித் தொகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] வடகரை கிளை சார்பாக கடந்த 12.09.2010, அன்று உதவித் தொகையாக ரூபாய் 2000,த்தை நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த ஹபீபுல்லாவின் மனைவிக்கு கிளை பொருளாலர் அலி வழங்கினார்.

ஆழியூர் கிளையில் பெருநாள் தொழுகை மற்றும் ஃபித்ரா வினியோகம்

ஆழியூர் கிளையில் பெருநாள் தொழுகை திடலில் தொழுவிக்கப்பட்டது.
கொள்கை சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு தொழும் காட்சியும், இந்த ஊரில் நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா) வினியோகமும் நடைபெற்ற காட்சி இத்துடன் போட்டோவுடன்...








பெரியகூத்தூர் கிளை TNTJ செயளாலர் ஹபீப்புல்லாஹ் மரணம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] பெரியகூத்தூர் கிளை செயளாலர் ஹபீப்புல்லாஹ் அவர்கள் 11.09.2010, அன்று மரணம் அடைந்தார். இவருக்கு வயது 35, அண்ணாருக்கு மனைவியும், 6 வயதில் ஒரு பெண்குழந்தையும் உள்ளன.


அவர் கடந்த இரண்டு வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார், இறுதியாக சென்னைக்கு சென்று மருத்துவம் பார்த்தார். கிட்னி பழுது அடைந்ததன் காரணமாய் இறந்து விட்டார்.


கிளை சகோதரர்கள் பெரியகூத்தூர் ஜமாத்தார்களை அனுகி நபி வழியில் நல்லடக்கம் செய்வதர்க்கு முயற்ச்சித்தனர், மறுத்து வந்த ஜமாத்தினரை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசிய பின், மையத் கொள்ளையை திறந்து விட்டு அடக்கம் செய்து கொள்ள அனுமதித்தனர். அமைதியான முறையில் நல்லடக்கம் முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.


இந்த நடைமுறைகளை மற்ற ஜமாத்தினரும் பின்பற்றினால் பிரச்சனைகள் பல தவிற்க்கப்படும். மேலும் மருத்துவத்திற்காக கடன்பட்டு இருந்தார், ஜனாஸாத் தொழுகையின் போது மண்ணிப்பவர்கள் மண்ணித்து விடுங்கள் அல்லது மாவட்ட நிர்வாகிகளை தொடர்புக் கொண்டால் இன்ஷா அல்லாஹ் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என அறிவிப்புச் செய்யப்பட்டன.



மயிலாடுதுறை மர்கஸ் பெருநாள் தொழுகை

பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை[வடக்கு] மாவட்டம் மயிலாடுதுறை மர்கஸ், தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் 10.09.2010, அன்று காலை 8.00, மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. நோன்பின் மான்புகள் என்னும் தலைப்பில் மாவட்ட தலைவர் H.M.புகாரி உரை நிகழ்த்தினார் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏறளமானோர் கலந்து கொண்டனர்

குடிநீர் சுத்தகறிப்பு சாதனம் அன்பளிப்பு

தமிழ்நாtடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம்[வடக்கு] மயிலாடுதுறை மர்கஸிற்காக குவைத் வாழ் சகோதரர்கள் DR நூர், அப்துல் அஜீஸ். ரூபாய் 9000, ஆயிரம் மதிப்புள்ள குடிநீர் சுத்தகறிப்பு சாதனத்தை கடந்த 20.08.2010, அன்று மாவட்டம் சார்பாக வழங்கினார்கள்.


இது ரமாளானில் மிகவும் பயான் அளிக்கும் வகையில் இருந்தது அல்ஹம்துலில்லாஹ்.

வியாழன், செப்டம்பர் 16, 2010

வாழ்வாதார உதவி


நாகை மாவட்டம் திருவெண்காடை சார்ந்த ஜாஃபர் உசேன் என்ற சகோதரர் குவைத்தில் கார் விபத்தில் கடந்த 25.12.08,அன்று பாதிக்கபட்டு சிகிச்சைக்காக வந்து பயன் அளிக்காமல் 15.05.10,அன்று திருவெண்காட்டில் மரணித்துவிட்டார் 33,வயதான அவருக்கு மனைவியும் சமீர் 4, வயது குழந்தையும் உள்ளார் வாழ்வாதார உதவியாக நாகை [வடக்கு] மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 12000,ம் ரூபாயை மரணித்தவரின் மைத்துனர் சகோ சாதிக்யிடம் மாவட்ட து.செ.நிஜாம் 14.09.2010, அன்று ஒப்படைத்தனர்.

நேரடி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] மயிலாடுதுறையில் தமிழ் டிவி என்னும் பெயரில் இயங்கும் கேபில் டிவியில் நோன்பின் மான்பை நோன்புக்கு பின்பும் பின் பற்றுவோம் என்று மாவட்டத் தலைவர் H.M.புஹாரி கடந்த 10.09.2010 அன்று காலை 11.00 மணி முதல் 12.00, வரை பேசினார் இந்த நிகழ்ச்சி நேரடியாக சுமார் 150, க்கும் மேற்ப்பட்ட ஊர்களுக்கு தெரியும் வகையில் ஒளிப்பரப்பானது.

ஃபித்ரா விநியோகம் - புதுப்படட்டிணம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] புதுபட்டிணம் கிளையில் 09.09.2010 அன்று இரவு 10, மணிக்கு ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம், தலைமை மூலம் 3000,ம் வசூல் 1590, மொத்தம் 4590,ரூபாய் 18, நபர்களுக்கு ஒருபை 255,பதிப்புக்கு வழங்கப்பட்டது.

ஃபித்ரா வினியோகம்

நாகை [வடக்கு] அரசூர் கிளை ஃபித்ரா வரவு செலவுகள்


1 அப்துல் ரஜாக் அரசூர் 250, 21 மஜிஹர்னிஷா சீர்காழி 200,

2 அபீப் அம்மாள் அரசூர் 250, 22 நிலவர்னிஷா சீர்காழி 150,

3 கலீல் அரசூர் 250, 23 இப்ராஹீம் சேந்தங்குடி 250,

4 அப்துல் வஹாப் அரசூர் 200, 24 சபினா அரசூர் 50,

5 ஃபாரூக் அரசூர் 400, 25 ஜக்கீருசேன் அரசூர் 100,

6 உம்மா சல்மா அரசூர் 50, 26 ஃபாத்திமா அரசூர் 50,

7 ஃபஜர் நிஷா சீர்காழி 100, 27 தருவுஸ் அரசூர் 50

8 ஹபீப்கனி அரசூர் 100, 28 சரீஃப் அரசூர் 100,

9 சுல்தான்பிவி அரசூர் 100, 29 பேபி அரசூர் 100,

10 புகாரி ஹசன் அரசூர் 100, 30 அப்துல் பாரி அரசூர் 300,

11 சரீஃப் நாகூர் 200, 31 அஃபிஸ் விழுப்புரம் 400,

12 அப்துல்லாஹ் சீர்காழி 150, 32 மன்சூர் குறிச்சிமலை 550,

13 முஹமது அன்வர் சிர்காழி 150, 33 யாக்கத்துனிசா அரசூர் 50,

14 மதினா அரசூர் 200, 34 ஜவகர்னிசா அரசூர் 100

15 சபீர் முஹம்மது அரசூர் 200, 35 நபிசா அரசூர் 150,

16 அப்துல்லாஹ் பாண்டிச்சேரி 150, 35 மாவட்டம் மயிலாடுதுறை 5000

17 செய்யது அலி அரசூர் 250, மொத்த வரவுகள்: 11150,

18 அப்துல் காதர் சீர்காழி 50, மொத்த செலவுகள்: 11150.

19 அஜ்மத்பிவி சீர்காழி 200,

20 மன்சூர் அலி சீர்காழி 200,

ஃபித்ராவுக்கு வினியோகித்த பொருள்கள் விலை உள்பட

1 ப. அரிசி 1,கிலோ 35 ரூபாய்

2 மசாலா பாக்கெட் 30,

3 டால்டா 100, கிராம் 7

4 ஜீனி 500 கிராம் 14

5 சன் ஆயில் 500 கிராம் 33

6 உப்பு 1, கிலோ 10

7 சேமியா 100 கிராம் 10

8 பட்,கிரா,ஏல,முந்,திரா 18

9 பெ வெங்காயம் 500 கி 8

10 உருழைகிழங்கு 500 கி 8

11 தக்காளி 500 கி 7

12 இஞ்ஜி பூண்டு 200 கி 15

13 கோழி 500 கிராம் 52. 50

பன்னிரெண்டு ரூபாய் ஐம்பது பைசா மீதி இருந்ததை பச்சை மிளகாய் வாங்கி பைகளில் போட்டு விட்டோம்.

மொத்தம் 45-ந்து பைகள் விநியோகிக்கப்பட்டது.





ஃபித்ரா வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் [வடக்கு] அரசூர் கிளையில் 09.09.2010, அன்று இரவு 11.45 க்கு தலைமை தந்த ரூபாய் 5000, கிளையில் வசூலித்த ரூபாய் 6150, மொத்தம் 11150,ரூபாய் தலைமையின் வழிகாட்டல் படி ஒரு பையின் மதிப்பு 247. ரூபாய் 50,பைசா மதிப்பிளான ஃபித்ரா என்னும் நோன்பு பெருநாள் தர்மம் 45 நபர்களுக்கு செய்யப்பட்டது.

பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] மாவட்டம் அரசூர் கிளையில் மஸ்ஜீத் அர் ரஹ்மான் எனும் தவ்ஹீத் பள்ளி வளாகத்தில், திடல் தொழுகை 10.09.2010, அன்று காலை 8.30,மணிக்கு நடைபெற்றது. அரசூர் ஃபாரூக் இஸ்லாம் கூறிய கடமைகள் என்னும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏறளமானோர் கலந்து கொண்டனர்.

அரசூர் கிளையில் இஃப்தார் விருந்து

இஃப்தார் விருந்து




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் [வடக்கு] அரசூர் கிளையில் 05.09.2010, அன்று மாணவர் அணி ஏற்பாடு செய்த மாபெரும் இஃப்தார் விருந்து நடைபெற்றது மாலை ஐந்து மணிக்கு கிளை மாணவர் அணிச் செயளாலர் S.ஃபைஜுல் [DCE] தலைமையில் நடைபெற்றது. H.M.புகாரி மாவட்டத் தலைவர் நவீனகாலத்து இளைஞர்கள் என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் உரை நிகழ்த்தினார் ,சங்கரன்பந்தல்,மாகனாம்பட்டு, போன்ற இடங்களில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர் பார்பதற்கு கல்வி மான்கள் மட்டுமே பங்கேற்ற விருந்து போல் அமைந்திருந்தன அரசூர் கிளை சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தன A.அபுதாஹீர் [BBA] கிளை மா.அ.து.செயளாலர் நன்றி உரையுடன் நிறைவுற்றன அல்ஹம்துலில்லாஹ்.

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

உணவுக்காக

உணவுக்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] மாவட்டத்தில் 20.08.2010 அன்று குவைத் சகோதரர் DR நூர்முஹம்மது தந்த ரூபாய் 3000, ஆயிரத்தை [சகர்.இஃப்தார்] உணவுக்கான தொகையாக மாவட்ட தலைவர் H.M.புஹாரி மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த உமர் அவர்களுக்கு வழங்கினார்

இலவச கண் சிகிச்சை முகாம்

       இலவச கண் சிகிச்சை முகாம் 
புதுப்பட்டினத்தில் கடந்த 17.08.2010, அன்று  தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] சீர்காழி நகரமும் புதுப்பட்டினம் கிளை மற்றும் நாகை மாவட்ட பார்வை இழப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர் 20 து நபர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான எற்பாடு செய்யபட்டன மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

புதுப்பட்டினத்தில் முதல் முறையாக அக்கு பஞ்சர் மருத்துவ முகாம்

புதுப்பட்டினத்தில் முதல் முறையாக அக்கு பஞ்சர் மருத்துவ முகாம்
செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, August 21, 2010, 20:12
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டத்தில் முதல் முறையாக கடந்த 17.08.2010, அன்று புதுப்பட்டினம் அரசு பள்ளியில் அக்கு பஞ்சர் மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அக்கு பஞ்சர் முறை என்பது அனைத்து விதமான நோய்களையும் நாடி பார்த்து கண்டறிந்து உடம்பில் உள்ள சக்தியோட்ட பாதைகளை மூலம் சரி செயப்படுகிறது.
காந்த ஊசிகள் மூலம் காற்றலைகளிள் உள்ள மின் அலைகளை கொண்டு மருந்தில்லாமல் இறைவனின் நாட்டப்படி நோயை குணம் ஆக்குவதே அக்கு பஞ்ஜர் மருத்துவ முறையாகும்.
அக்கு பஞ்சர் மருத்துவ முறையில் மாவட்ட மருத்துவ அணி செயளாலர் DR ஜெகபர் சாதிக் இலவசமாக சிகிச்சை அளித்தார்.
நிகழ்ச்சியை புதுப்பட்டினம் மன்சூர் நல்ல முறையில் ஏற்பாடு செய்து இருந்தார். மாவட்ட நிர்வாகிகள் அரசூர் ஃபாரூக், நிஜாம், நகர நிர்வாகிகள் மஹ்ரூஃப் நசுரதீன் கிளை நிர்வாகிகள் அப்துல் ஹமிது ராஜா ஆகியோர் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டர். சீர்காழி நகரமும் புதுப்பட்டினம் கிளையையும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தன.

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத் மண்டலம் - இஃப்தார் விருந்து





























20 ஆகஸ்ட் 2010 அன்று மாலை 5 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டல மர்கஸில் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அல்லாஹ்வின் மாபெரும கிருபையால் நடைபெற்றது.


இக்கூட்டம் சகோ. ஏனங்குடி அலாவுதீன் அவர்களின் துவக்கவுரையுடன் துவங்கியது. இதில் நாகை மாவட்டச் சகோதரர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டமைப்பின் தலைவர், செயலாளர், 2 துணைச்செயலாளர்கள் பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வருகை தந்திருந்த அனைவருக்கும் இப்தார் ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. மஃக்ரிப் தொழுகைக்குப்பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்

தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன்


செயலாளர் சகோ. எலந்தங்குடி பரித்


துணை செயலாளர்கள்


சகோ. சங்கரன்பந்தல் தவ்பிக் மற்றும் சகோ. கிளியனூர் ரஃபி


குறிப்பு:- இன்ஷா அல்லாஹ் அடுத்து செப்டம்பர் மாதக் கூட்டம் வழக்கம் போல் மாதத்தின் 3வது வாரம் வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் ரியாத் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தில் நடைபெறும். அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றது.

நாகை மாவட்டத் தவ்ஹீத் கூட்டமைப்பு

ரியாத். சவுதி அரேபியா.

செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010

நாகை (வடக்கு) TNTJ மர்க்கஸில் இஃப்தார் விருந்து

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] மயிலாடுதுறை மர்கஸில் கடந்த 12.08.2010, முதல் [இஃப்தார்] நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொள்கின்றனர் மயிலாடுதுறை சிறு வியாபாரிகள் மற்றும் கடை ஊளியர்களுக்கு மிகுந்த பயன் தருவதாக கூறுகின்றனர். இன்ஷா அல்லாஹ் நோன்பு 20, முதல் [சகர்] இரவு உணவும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.  

செவ்வாய், ஜூலை 06, 2010

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு மாநாட்டின் விளைவு

சந்திப்பு: பிரதமர், சோனியா காந்தி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள்

முஸ்லிம்களுக்குத் தனி இட ஒதுக்கீட்டை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வலியுறுத்தியதன் தொடர்ச்சியாக தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் இன்று 06-07-2010 பகல் 11.00 மணி முதல் 11.15 வரை பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து தனி இட ஒதுக்கீட்டை வலியுறுத்தினார்கள்.




பகல் 12.25 முதல் 12.35 வரை காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களையும் சந்தித்து இட ஒதுக்கீட்டை வலியுதித்தினார்கள்.



இது குறித்த முழு விபரம் வருமாறு:



மாநாட்டுக்கு முதல் நாள் ஜூலை மூன்றாம் தேதியன்று பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தனி இட ஒதுக்கீடு குறித்து வலியுறுத்துவதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு கோரும் இரு கடிதங்கள் தயார் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் மூலம் இருவருக்கும் சேர்ப்பிக்கச் செய்தோம்.



மாநாடு நடத்துவது மட்டும் போதாது. இட ஒதுக்கீடு தரும் இடத்தில் இருப்பவர்கள் உண்மையில் என்ன நினைக்கிறார்கள்? இட ஒதுக்கீடு தரும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா? இலட்சக்கணக்கான மக்களின் உணர்வுப்பூர்வமான மாநாடு மற்றும் பேரணி குறித்த தகவல்கள் அவர்களைச் சென்றடைந்துள்ளதா என்பதை அறிந்து கொள்வதற்காக இந்தச் சந்திப்பை விரும்பினோம்.



பிரதமரும் சோனியா காந்தி அவர்களும் நேரம் ஒதுக்குவார்கள் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அப்படியே நேரம் ஒதுக்கினாலும் இவ்வளவு சீக்கிரத்தில் நேரம் ஒதுக்குவார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவில்லை.



மாநாடு முடிந்த மறுநாளே ஆறாம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.



தமிழக வரலாறு காணாத அளவுக்கு இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் உணர்ச்சிப் பிளம்பாகக் கலந்து கொண்ட தகவல் உளவுத்துறை மூலமும் மாநாட்டில் கலந்து கொண்ட சகோதரர் ஜெ. எம். ஹாருன் அவர்கள் மூலமும் பிரதமருக்கும் காங்கிரஸ் தலைவருக்கும் செய்திகள் சென்றடைந்ததே இந்தச் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கக் காரணமாக இருந்தது. பிரதமரி சந்திப்பின் போது இதைக் கண்டு கொண்டோம்.



தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் சம்சுல்லுஹா, மேலாண்மைக் குழு உறுப்பினர் பி. ஜைனுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் எம். அப்துல் ஹமீது, மாநில துணைத் தலைவர் கோவை ரஹ்மத்துல்லா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம் ஹாரூன், தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அஹமது ஆகியோர் காலை 7.00 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு குறித்த நேரத்தில் பிரதமரை சந்திக்கச் சென்றோம். வழக்கமான பாதுகாப்பு சோதனை முடிந்தபின் பிரதமர் அலுவலகம் அழைத்துச் செல்லப்பட்டோம்.



அனைவரிடமும் பிரதமர் கைகுலுக்கி வரவேற்றார். திருக்குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பையும் மாமனிதர் நபிகள் நாயகம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பி. ஜே. வழங்கினார்கள். குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பிரித்துப் பார்த்து கண்களில் ஒற்றிக் கொண்ட பின் நன்றி நன்றி நன்றி எனக் கூறினார்.



இதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. எம். ஹாரூன் அவர்கள் பிரதமருக்கு சால்வை வழங்கினார்கள். தேசிய லீக் தலைவார் பஷீர் அஹமது அவர்கள் ஏல்க்காய் மாலை வழங்கினார்கள்.



இதன் பின்னர் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் லட்டர் பேடில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி எழுதப்பட்ட கோரிக்கை மனுவை வழங்கினோம்.



பிரதமருக்கு அருகில் பிரதமர் இருக்கை போல் ஒரு இருக்கையும் வலது இடது புறங்களிலும் எதிரிலும் சோபாக்கள் போடப்பட்டு இருந்தன.



தனது அருகில் போடப்பட்ட இருக்கையில் பி. ஜே. அவர்களை பிரதமர் அமரச் செய்தார்கள். இந்த இருக்கையில் மத்திய கேபினட் அமைச்சர் தவிர யாரும் அமர வைக்கப்பட மாட்டார்கள். இந்தக் கண்ணியத்தை பிரதமர் தங்களுக்கு மட்டும் வழங்கினார் என்று பின்னர் ஹாரூன் அவர்கள் பீஜேயிடம் கூறினார்கள். ஆனால் இது பீஜேவுக்கு வழங்கப்பட்ட கண்ணியம் அல்ல. மாநாட்டுக்கு வந்த இதற்காக உழைத்த துஆ செய்த அனைவருக்குமான கண்ணியமே இது என்று பீஜே கூறினார்.



பதினைந்து நிமிட நேரம் முஸ்லிம்களின் அவல நிலையையும், காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியையும் பி. ஜே. தமிழில் கூற, ஹாரூன் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறினார்கள்.



மாநாட்டைப் பற்றியும், கட்டுக்கடங்காமல் திரண்ட கூட்டத்தைப் பற்றியும் பி. ஜே. தெரிவித்த போது தெரியும், ரிப்போர்ட் வந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்கள்.



ஷம்சுல்லுஹா, அப்துல் ஹமீது, ரஹ்மத்துல்லா ஆகியோரும், பஷீர் அஹமது, ஹரூன் பாய் ஆகியோரும் ஆங்கலத்தில் இட ஒதுக்கீடு குறித்து பல வகையிலும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தார்கள்.



அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்ட பிரதமர் நீதிபதி மிஸ்ரா அவர்களின் அறிக்கை வந்தது முதல் அது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். இந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தருவோம் என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்கள்.



தவ்ஹீத் ஜமாஅத்துக்கு பிரதமர் தந்த மரியாதையும் முக்கியத்துவமும் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருந்தன. லட்சக்கணக்கான மக்கள் பட்ட கஷ்டமும் உழைப்பும் துஆக்களுமே இதற்குக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை.



நின்று கொண்டே மனுவை வாங்கிக் கொண்டு அனுப்பக் கூட நேரமில்லாத பிரதமர் நாங்களாக எழும் வரை கலகலப்பாகப் பேசிக்கொண்டே இருந்தார்கள். காரணம் தீவுத் திடலை நிறைத்த மக்கள் சக்தி தான் என்பதை நாங்கள் எங்களுக்குள் நினைவுபடுத்திக் கொண்டோம்.



அடுத்ததாக காங்கிரஸ் தலைமை அதிகார மையத்தின் நம்பர் ஒன் ஆகக் கருதப்படும் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களைச் சந்திக்கச் சென்றோம். ட்ராபிக்கில் மாட்டிக் கொண்டதால் குறித்த நேரத்தை விட ஐந்து நிமிடம் தாமதமாகி விட்டது.



எத்தனையோ வேலைப் பளுவில் இருக்கும் பெரும் தலைவர்கள் மற்றவர்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள். ஒரு விநாடி காலதாமதமானாலும் யாரையும் சந்திக்க மாட்டார்கள். இந்த அடிப்படையில் செக்யூட்டிகள் நமது சந்திப்பை கேன்சல் செய்து விட்டதாகக் கூறினார்கள். ஆனால் ஹாரூன் பாய் அவர்கள் தொடர்பு கொண்டு தாமதத்துக்கான காரணம் பற்றி தெரிவித்தவுடன் எங்கள் காலதாமதத்தைப் பொருட்படுத்தாமல் உடனே எங்களை வரச் சொன்னார்கள்.



சோனியா காந்தி அவர்களை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்தோம். அவருக்கும் குர்ஆன் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் அந்த மாமனிதா ஆங்கில மொழிபெயர்ப்பும் கொடுத்தோம். கோரிக்கை மனுவையும் அளித்தோம். பிரதமரிடம் எடுத்துச் சொன்னது போல் முழுமையாக கோரிக்கைகளை அவர்களுக்கும் விளக்கினோம்.



அபுல்கலம் ஆஸாத் அறக்கட்டளை மூலம் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவி உள்ளிட்ட திட்டங்களை எடுத்துக் கூறி முஸ்லிம்கள் மீது தமக்கு உள்ள அக்கரையை சோனியா விளக்கிக் கூறினார். இட ஒதுக்கீட்டைப் பொருத்தவரை எத்தனை சதவிகிதம் என்பதில் தான் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்கள்.



இருபெரும் தலைவர்களின் சந்திப்பும் இட ஒதுக்கீடு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.



சந்திப்பு இனிப்பாக இருந்தாலும், வாக்குறுதி நம்பும்படி இருந்தாலும் இட ஒதுக்கீடு தான் அடுத்த தேர்தலில் மையக் கருத்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.



இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றினால் அதன் பலனக் காங்கிரஸ் அறுவடை செய்யும். இட ஒதுக்கீடு அளிக்கத் தவறினால் இந்தச் சந்திப்பு எந்த வகையிலும் முஸ்லிம்களைத் திருப்திப் படுத்தாது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறோம்.



புது டில்லியில் இருந்து கோவை ரஹ்மதுல்லாஹ்



குறிப்பு ஜேஎம் ஹாரூன் அவார்களுக்கும் நமக்கும் கொள்கையில் வேறுபாடு இருந்தாலும் இந்த மாபெரும் மக்கள் திரளை சமுதாய நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதில் அவர் காட்டிய ஆர்வம் எங்கள் ஆர்வத்தை விட குறைந்ததாக இல்லை. மேலும் தேசிய லீக் தலைவர் பஷீர் அவர்கள் மாநாட்டூக் நீங்கள் அழைக்காவிட்டால் கூட நான் உரிமையுடன் வந்து கலந்து கொள்வேன் எனக் கூறி ஹாரூன் அவர்களுடன் சேர்ந்து இந்த சரித்திரம் காணாத மக்கள் சக்தியக் காட்டி மக்களூக்கு நம்மால் ஆன நன்மையைச் செய்ய வேண்டும் என்று முனைப்பு காட்டியது குறிப்பிடத் தக்கது.



நன்றி: http://www.tntj.net/?p=17406

நாகை வடக்கு வடகரை-அறங்கக்குடி கிளையில் ஜூலை 4 மாநாடு விளக்க கூட்டம்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.


அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையினால் 18 ஜூன் 2010 அன்று நாகை (வடக்கு) மாவட்டம், வடகரை-அறங்கக்குடி கிளையில் ஜூலை 4 மாநாடு ஏன்? என்ற விளக்கக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதில் சகோதரர் கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் ஜூலை 4 மாநாடு பற்றி சிறப்புரையாற்றினார்கள் மேலும், சகோதரர் கொல்லுமாங்குடி நவ்சாத் அவர்கள் வெளிநாட்டு வேலையின் அவலங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர் ராஜா என்கின்ற சலாஹூதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். நாகை (வடக்கு) மாவட்டத் தலைவர் H.M. புகாரீ அவர்கள் இக்கூட்டத்தை வழிநடத்தினார்கள்.இதில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.


ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வடகரை-அறங்கக்குடி கிளை

பிஸ்மில்லாஹ்...
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் சென்ற 15 ஜூன் 2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை (வடக்கு) மாவட்டம், வடகரை-அறங்கக்குடி கிளையில் சுமார் 50 ஏழை மாணவர்களுக்கான இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் கிளைத்தலைவர் பஜல் முஹம்மது மற்றும் ஏனைய கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர் மற்றும், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தாயகம் வந்திருந்த ரியாத்வாழ் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் . ஹபிபுல்லா மற்றும் அபுதாபிவாழ் நூருல்லாஹ் ஆகியோர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.

இப்படிக்கு,
நாகை தவ்ஹீத் கூட்டமைப்பு.

புதன், மார்ச் 24, 2010

சீர்காழியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அன்புடையீர்,   அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
 
14  மார்ச் 2010 அன்று சீர்காழி வெண்ணிலா திருமண மண்டபத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பெரும்பான்மை ஆண்களும், பெண்களும் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.
 
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.
 
 

நாகை (வடக்கு) மாவட்ட பொதுக் குழு சீர்காழியில் நடைபெற்றது


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
 
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை (வடக்கு) மாவட்ட பொதுக் குழு 14 மார்ச் 2010 அன்று அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.
 
எல்லாப் புகழும் வல்ல  அல்லாஹ்விற்கே.