எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

புதன், ஜூலை 20, 2011

பொறையார் கிளை மணிகண்டன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 16 07 2011 அன்று மணிகண்டன் என்ற மாற்று மத சகோதருக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக திருக்குரான் தமிழாக்கமும், மார்க்க விளக்க புத்தகங்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


திங்கள், ஜூலை 11, 2011

அரசூர் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு அரசூர் கிளையில் கடந்த 03.07.2011 அன்று மாவட்ட தலைவர் தலைமையில் தர்பியா முகாம் நடைபெற்றது.




அரசூர் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொழுகை விளக்க முறை. ஏகத்துவம் என்றால் என்ன? கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் இஸ்லாத்தில் உள்ள பித்அத்தான விசயங்கள் குறித்து கோட்டைபட்டினம் சகோ.மஃதூம் வகுப்பு எடுத்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.


பொறையார் கிளையில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 18-6-2011 மற்றும் 19-6-2011 ஆகிய தேதிகளில் ஏழை மாணவி ஒருவரக்கு ரூபாய் ஆயிரமும் ஏழை மாணவன் ஒருவனுக்கு ரூபாய் 2 ஆயிரமும் கல்வி உதவி வழங்கப்பட்டது.

பொறையார் கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 22-6-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் இப்ராஹீம் உமரி , முஹம்மது தீன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் வாங்கிய வரதட்சனையை இறைவனுக்கு அஞ்சி பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.




மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தம் வழங்கும் நிகழ்ச்சி , கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.
 
 


மயிலாடுதுறையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 27-6-2011 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ அப்துல் கபூர் மிஷ்பாஹி அவர்கள் உரையாற்றினார்கள்.




மேலும் கடந்த 25-6-2011 அன்று நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் அப்துல் கபூர் மிஷ்பாஹி இஸ்லாமிய அடிப்படை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.



துளசேந்திரபுரம் கிளையில் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 18-6-2011 அன்று கொள்ளிடம் M.S. திருமண மண்டப்பத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேள்விகளுகுக்கு சகோ. பக்கீர் முஹம்மது அல்தாபி பதில் அளித்தார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


மேலும் உம்முள் மு.’.மினீன் பெண்கள் கல்வியகத்தில் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோடைக்கால பயிற்சி முகாமில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.