புதுப்பட்டினத்தில் முதல் முறையாக அக்கு பஞ்சர் மருத்துவ முகாம்
செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, August 21, 2010, 20:12
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டத்தில் முதல் முறையாக கடந்த 17.08.2010, அன்று புதுப்பட்டினம் அரசு பள்ளியில் அக்கு பஞ்சர் மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அக்கு பஞ்சர் முறை என்பது அனைத்து விதமான நோய்களையும் நாடி பார்த்து கண்டறிந்து உடம்பில் உள்ள சக்தியோட்ட பாதைகளை மூலம் சரி செயப்படுகிறது.
காந்த ஊசிகள் மூலம் காற்றலைகளிள் உள்ள மின் அலைகளை கொண்டு மருந்தில்லாமல் இறைவனின் நாட்டப்படி நோயை குணம் ஆக்குவதே அக்கு பஞ்ஜர் மருத்துவ முறையாகும்.
அக்கு பஞ்சர் மருத்துவ முறையில் மாவட்ட மருத்துவ அணி செயளாலர் DR ஜெகபர் சாதிக் இலவசமாக சிகிச்சை அளித்தார்.
நிகழ்ச்சியை புதுப்பட்டினம் மன்சூர் நல்ல முறையில் ஏற்பாடு செய்து இருந்தார். மாவட்ட நிர்வாகிகள் அரசூர் ஃபாரூக், நிஜாம், நகர நிர்வாகிகள் மஹ்ரூஃப் நசுரதீன் கிளை நிர்வாகிகள் அப்துல் ஹமிது ராஜா ஆகியோர் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டர். சீர்காழி நகரமும் புதுப்பட்டினம் கிளையையும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக