எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

சனி, ஜனவரி 22, 2011

இஸ்லாம் குறித்து பிற மத சகோதரரின் சந்தேங்களுக்கு விளக்கம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] மயிலாடுதுறையில் 21.01.2011, அன்று ராஜ் என்ற ஜெபஸ்டியனுக்கு கும்பகோணத்தில் பாதிரியார்களுடன் நடந்த விவாத சீடி மற்றும் PJ மெழிபெயர்த்த குர் ஆன் அன்பளிப்பாக மாவட்ட பொருளாளர் சாதிக் வழங்கினார்.

அவரின் சிலசந்தேகங்களுக்கு பதில் கூறப்பட்டது. எங்களது பாஸ்டரை அழைத்து வருகிறேன் என்று கூறி சென்றார்.

மயிலாடுதுறை TNTJ மர்க்கஸில் அழைப்புப் பணி



மயிலாடுதுறையில் கடந்த 23-11-2010 அன்று கார்திக் என்ற சகோதரருக்கு பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறையில் முஹர்ரம் நோன்பு திறக்க ஏற்பாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை மர்க்கஸ்ஸில்  நபி (ஸல்) அவர்கள் வழி முறைப்படி முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோன்பு வைத்தவர்களுக்காக, நோன்பு திறக்க வேண்டிய ஏற்பாடு செய்யப்பட்டது.


வியாழன், ஜனவரி 20, 2011

தமுமுக வில் இருந்து விலகிய பொறையார் நிர்வாகி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 09.01.2011, மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் துணைத் தலைவர் ரஹ்மதுல்லாஹ் ஒற்றுமை கோஷம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


இந்த சொற்பொழிவை கேட்ட தமுமுக பொறையார் நகர தொண்டர் அணி செயலாளர் யாசர் அரஃபாத் என்ற சகோதரர் பொதுக்கூட்டம் முடிந்ததும் நமது பொறையார் மர்க்கஸ்ர்க்கு வந்து ரஹமத்துல்லாவிடம் இது நாள்வரை நான் தமுமுகவில் பொறுப்பு வகித்துவந்தேன், இனி இப்பொருப்பிலிருந்து நீங்கி விடுகின்றேன் என கூறினார். அல்ஹம்துலி்ல்லாஹ்!

நலத் திட்ட உதவி - பொறையார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் நகரத்தில் தோல் விற்ற பணத்தில் கடந்த 09.01.2011, அன்று அனிஃபா என்ற சகோதரருக்கு 1500,ரூபாயும் ஃபைசல் என்ற சகோதரருக்கு 1000, ரூபாயும் வழங்கப்பட்டது.

நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு மாதாந்திரக் கூட்டம் - ரியாத்

அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் கடந்த 17.12.2010 அன்று நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம்,  தலைவர் ஏனங்குடி சகோ. அலாவுதீன் தலைமை உரையுடன் மாலை 4:45 மணிக்கு ரியாத் மண்டல TNTJ மர்க்கஸில் துவங்கியது.

இதில் நாகை மாவட்ட தவ்ஹீத் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் இனி வரும் கூட்டங்களுக்கு மாவட்டச் சகோதரர்களை அதிகம் கலந்து கொள்ளச் செய்வது என்ற கோரிக்கையுடன், மஃக்ரிபு தொழுகைக்குப் பின், இக் கூட்டம் இனிதே துவாவுடன் நிறைவுற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.....






புதன், ஜனவரி 19, 2011

நாகை வடக்கில் ஜனவரி 27 போராட்ட ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டத்தில கடந்த 05.01.2011, அன்று ஜனவரி 27 போராட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்ப்பாட்டக் குழு தலைவர் S.S.U.சைபுல்லாஹ் ஹாஜா தலைமை தாங்கினார்கள் . மாநிலச் செயலாளர் ஹாஜாநூஹ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.



மயிலாடுதுறை கூறைநாடு கிளையில் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மயிலாடுதுறை கூறைநாடு கிளையில் கடந்த 02.01.2011 அன்று மாவட்ட பொருளாளர் முஹம்மது சாதீக் தலைமையில் இஸ்லாமிய விழிப்புணர்வு பொதுக் கூட்டம் நடைப்பெற்றது




மாவட்ட தலைவர் புஹாரி துவக்க உரையாற்றினார்கள். கடலூர் மாவட்ட தலைவர் அப்துர் ரஜாக் ஜனவரி 27 என்ற தலைப்பிலும் மேலான்மை குழு தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி இஸ்லாமும் ஏகத்துவமும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.



மாவட்ட செயலாளர் பஹ்ருதீன் நன்றி உரைவுடன் இரவு 10 மணிக்கு கூட்டம் துஆவுடன் முடிந்தது.



இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் மற்றும் மாவட்ட, கிளை நிர்வகிகள் கலந்துக் கொண்டனர்.



மயிலாடுதுறையில் ஜனவரி 27 ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை மர்க்கஸில் கடந்த 01.01.2011, அன்று ஜனவரி 27 போராட்டம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் புகாரி தலைமை தாங்கினார்கள் பணிகள் முடிக்கிவிடப்பட்டு அதிகமான மக்களை கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டது