எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

சனி, மார்ச் 19, 2011

குத்தாலம் கிளையில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் குத்தாலம் கிளையில் கடந்த 04-03-2011 அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் மாவட்ட தலைவர் தொழுகை நடத்தினார்கள்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

திருவாளபுத்தூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் திருவாளபுத்தூர் கிளையில் கடந்த 06.03.2011 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, மார்ச் 06, 2011

துளசேந்திரபுரம் கிளையில் இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 22.02.2011, அன்று நாகை மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாமில் 170 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.




13 நபர்களுக்கு அறுவை சிகிச்சைகான ஏற்பாடு செய்யப்பட்டது. DR. பூபேஸ் மற்றும் அவரது குழுவினர் நல்ல முறையில் ஒத்துழைப்பு நல்கினர்.



மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ஜகபர் சாதிக், வந்திருந்த அனைவருக்கும், அக்கு-பஞ்சர் முறையில் இலவசமாக மருத்துவம் செய்தார்கள்.



ஊராட்சி ஒன்றிய தலைவர் எஹ்சான் பீவி கமாலுதீன், மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




குத்தாலம் கிளையில் TNTJ வின் புதிய மர்க்கஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை வடக்கு மாவட்டம், குத்தாலம்  கிளையில் கடந்த 27.02.2011 அன்று புதிய மர்கஸ் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் கோவை R. ரஹமத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு ஏகத்துவ எழுச்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


மேலும் இதில் மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





செவ்வாய், மார்ச் 01, 2011

நாகை வடக்கில் ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மல்லியத்தை சேர்ந்த ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு கடந்த 25.02.2011 அன்று 1500 ரூபாய் வழங்கப்பட்டது.

இதை மாவட்ட செயலாளர் வழங்கினார்கள்.

உயிருடன் இருந்தவரை பிணவரைக்கு கொண்டு சென்ற மருத்துவர்கள் – களமிறங்கிய நாகை வடக்கு TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமணையில் SS நல்லூரை சார்ந்த மாற்று மத சகோதரர் மாணிக்கத்திற்கு கடந்த 21.02.2011, அன்று நடந்த அவலம் இனி யாருக்கும் நடக்ககூடாது.




மாணிக்கம் இறந்து விட்டார் எனக் கூறி மருத்துவர்கள் அவரை பிணவரைக்கு கொண்டு சென்று விட்டனர்.  இச்செய்தியை TNTJ சகோதரர்கள் அறிந்து மருத்துவமணையின் பிணவரை சென்று பார்த்தபோது, முக்கல் முனங்களுடன் கிடந்த மாணிக்கத்தின் அவல நிலையைக் கண்டு கரையாத மணமும் கலங்கிவிடும்.



அவரை அங்கிருந்து அப்புறபடுத்தி, வார்டுக்கு கொண்டுவந்து மேற்கொண்டு மருத்துவத்திற்கான ஏற்பாட்டை செய்ய நம் சகோதரர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து மாணிக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நிதானத்திற்கு வந்தார்.



இனி என்னை இங்கு வைத்து இருந்தீர்கள் என்றால் என்னை இந்த பாவிகள் பிணமாகத்தான் அனுப்புவார்கள் என்று கூறி மாணிக்கம் பயந்தார்.  ஆகையால், அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து கும்பகோணம் மருத்துவமணைக்கு நம் சகோதரர்கள் அவரை அனுப்பி வைத்தனர். புகழ் அனைத்தும் ஏகனுக்கே.



மருத்துவமணையின் டீனை சந்தித்து கேட்டபோது, இனி இதுபோல் நடக்காது என்று வழக்கமான பல்லவியையே பாடினார். தொடர்ந்து இதுபோன்று மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமணை ஊழியர்கள் திருந்தவில்லை எனில், உங்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராடும் நிலையை உறுவாக்காதீர்கள் என எச்சரிக்கப்பட்டது.