எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

புதன், ஆகஸ்ட் 17, 2011

மயிலாடுதுறை கிளையில் ரமளான் சிறப்பு தொடர் சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.

கடந்த 13-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு ஏகத்துவம் வளர்ந்த வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்!

வடகரை-அறங்கக்குடி கிளையில் ரூபாய் 15 ஆயிரம் மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை வடக்கு மாவட்டம், வடகரை-அறங்கக்குடி கிளை சார்பாக கடந்த 11-8-2011 அன்று ஏழை சகோதரியின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 15 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.


மயிலாடுதுரை கிளையில் ரூபாய் 1750 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுரை கிளையில் கடந்த 3-8-2011 அன்று ரூபாய் 1750 மதிப்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது.


மயிலாடுதுறையில் புத்தகம் விநியோகம் & சஹர் நேர ஸ்டிக்கர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் கடந்த 1-8-2011 அன்று தராவீஹ் ஒர் ஆய்வு என்ற புத்தம் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. இதில் 100 புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 2-8-2011 மெகா டிவி ரமளான் சஹர் நேர நிகழ்ச்சி குறித்து ஆட்டோ விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.



மயிலாடுதுறை கிளையில் கேபில் டிவியில் ஏகத்துவ நிகழ்சசிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 1-7-2011 அன்று முதல் ரமளான் மாதம் முழுவதும் உள்ளுர் கேபில் டிவி தொலைக்காட்சியில் பி.ஜே அவர்கள் ஆற்றிய இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது

அரசூர் கிளையில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் கடந்த 31.07.2011 அன்று பெண்கள் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

அல்-நூர் மதரஸா முதலாம் ஆண்டு மாணவி ஆயிஷா இறையச்சம் என்ற தலைப்பிலும், அதைத் தொடர்ந்து ஜன்னத் நிஷா ஆலிமா நோன்பு என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினார்கள்.

இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

மயிலாடுதுறை கிளையில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் கடந்த 23 ஜூலை 2011 அன்று மாலை 6 மணிக்கு கூறைநாடு சின்னப்பள்ளிவாசல் தெருவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
சகோதரி நசீம் பானு.M.A.,B.Ed.,M.Phil., அவர்கள் கலந்துக்கொண்டு இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

வடகரை-அறங்கக்குடி கிளையில் இலவச நோட்டு புத்தகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் வடகரை-அறங்கக்குடி கிளையில் கடந்த 23 ஜூலை 2011 அன்று ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி அதை தொடர்ந்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஜன்னத் நிஹா அவர்கள் ”கல்வியில் சிறந்தது? உலகக் கல்வியா?
மார்க்கக் கல்வியா?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
மேலும் தொலைபேசி மூலம் ”பித்அத் ஒரு கேடு” என்ற தலைப்பில் சகோதரர் கபுர் மிஸ்பாஹி உரையாற்றினார்கள்.
மற்றும் தாசின் என்ற சிறுவன் ”இன்றைய பெண்களின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
52 ஏழை மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.


நாகை வடக்கு எலந்தங்குடி பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் எலந்தங்குடி பகுதியில் கடந்த 17-7-2011  அன்று TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.





புதுபட்டினம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் புதுபட்டினம் கிளையில் 23-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.