எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

வெள்ளி, செப்டம்பர் 11, 2009

மயிலாடுதுறை மர்கஸில் ஜூம்மாத் தொழுகை - 11 செப்டம்பர் 2009

அல்லாஹ்வின் திருப்பெயரால்…







11 செப்டம்பர் 2009 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை (வடக்கு) மாவட்டம் மயிலாடுதுறை நகர மர்கஸில் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் ஜூம்மா தொழுகை புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடைபெற்றது. இதில் M. அன்சார் கான் MISc, (இஸ்லாமிக் காலேஜ் – ஈரோடு) ஜூம்மா பயான் நடத்தினார்கள். அதில் சிறப்புரையாக நபி (ஸல்) அவர்களின் சஹாபாக்கள் எந்த அளவிற்கு மார்க்கப் பற்றுள்ளவர்களாகவும், மார்க்கத்தை அறிந்துக் கொள்வதில் அவர்களின் ஆவல்களைப்பற்றி தெளிவாக விளக்கினார்கள்.

இரண்டாவது அமர்வில் ரமளான் மாத இரவுத் தொழுகை ஜமாத்தாக தொழுவதினால் ஏற்படும் நன்மைகளும், தனியாகத் தொழுவதால் ஏற்படும் நன்மைகளையும் தெளிவாக விளக்கினார்கள் மற்றும் இரவுத் தொழுகைக்குரிய பெயர்களான கியாமுல் லைல், சலாத்துல் லைல் மற்றும் தஹ்ஜத் போன்ற பெயர்களைப்பற்றியும் அதன் விளக்கத்தையும் மக்களுக்கு தெளிவாக விளக்கினார்கள்.

இன்றைய ஜூம்மாவில் 50 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர்.

தொழுகைக்குப்பின்பு நாகை (வடக்கு) மாவட்டத் தலைவர் புகாரி அவர்கள் ரமளான் மாத கடைசிப்பத்தின் இரவுத் தொழுகைக்கு சஹர் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதைப்பற்றி விரிவாக விளக்கினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக