எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

செவ்வாய், ஜூலை 06, 2010

நாகை வடக்கு வடகரை-அறங்கக்குடி கிளையில் ஜூலை 4 மாநாடு விளக்க கூட்டம்

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.


அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையினால் 18 ஜூன் 2010 அன்று நாகை (வடக்கு) மாவட்டம், வடகரை-அறங்கக்குடி கிளையில் ஜூலை 4 மாநாடு ஏன்? என்ற விளக்கக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதில் சகோதரர் கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் ஜூலை 4 மாநாடு பற்றி சிறப்புரையாற்றினார்கள் மேலும், சகோதரர் கொல்லுமாங்குடி நவ்சாத் அவர்கள் வெளிநாட்டு வேலையின் அவலங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர் ராஜா என்கின்ற சலாஹூதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். நாகை (வடக்கு) மாவட்டத் தலைவர் H.M. புகாரீ அவர்கள் இக்கூட்டத்தை வழிநடத்தினார்கள்.இதில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக