எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

செவ்வாய், ஜூலை 09, 2013

நாகை வடக்கு-மயிலாடுதுறை கிளை-”பெண்கள் பயான்”


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 07-07-2013 அன்று மாலை 4.30 மணியள‌வில் மயிலாடுதுறை கிளை தலைவர் முஹம்மத் அலி அவர்களின் இல்லத்தில் “பெண்கள் பயான்” நடைபெற்றது. 

இதில் சகோதரி ஆயிஷா (அந்நூர் மதரஸா) “ரமலானை வரவேர்ப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து பயன்பெற்றனர்.

இதில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் ஏகத்துவம்,தீண்குல பெண்மணி,உணர்வு மற்றும் மனனம் செய்வோம் ஆகிய புத்தகங்கள் கிளை சார்பாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 

எல்லா புகழும் இறைவனுக்கே…….
 
 

நாகை வடக்கு மாவட்டத்தின் TNTJ அலுவலகம் திறப்பு

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத் நாகை வடக்கு மாவட்டத்தின் அலுவலகம் மயிலாடுதுறை கிளையில் அமைத்து மாவட்டத்தின் அனைத்து செயல்பாடுகளும் கடந்த 30-06-2013 (மாவட்ட தர்பியா)அன்று முதல் செயல்பட தொடங்கியது.

அதனடிப்படையில் 07-07-2013 அன்று காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் அழைப்பு விடுத்து மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் மயிலாடுதுறை மர்கஸில் செயற்குழு கூட்டப்பட்டது. இதில் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ர‌மலான் மாதத்தில் செய்யவேண்டிய தாவா பணிகளை பற்றி பேசப்பட்டது.

இந்த செயற்குழு முடிந்தவுடன் மாவட்ட நிர்வாகக்குழு மாவட்ட அலுவலகத்தில் சகோ.  இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது.  இதில் இதர மாவட்ட பொறுப்பாள‌ர்களும் அணி செயலாள‌ர்களும் கலந்துகொண்டனர்.






எல்லா புகழும் இறைவனுக்கே…….

நாகை (வடக்கு) மாவட்ட தர்பியா

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா'அத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக கடந்த 30-06-2013 அன்று மாவட்ட தர்பியா நடைபெற்றது. இதில் மாநில துணை பொதுச் செயலாளர் சகோதரர் யுசுஃப் "தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு" என்ற தலைப்பிலும் ,மாநில செயளாலர் சகோதரர்ஆவடி இப்ராஹிம் நிர்வாகவியல் என்ற தலைபிலும் மற்றும் மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோதரர் தவ்ஃபிக் தவ்ஹீத் ஜமாத்தின் தனித்தன்மை என்ற தலைப்பிலும் தர்பியா நடைபெற்றது.

இதில் பெரும் திரளான மக்கள் கலந்துகொன்டு பயனடைந்தனர். மேலும் தர்பியாவின் இறுதியில் மாநில நிர்வகிகள் முன்னிலையில் மாவட்ட பொருப்பாளர்கள் முஹம்மத் இப்ராஹிம் தலைமையில் கீழ் காணும் பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

1.அப்துல் ஹமீத்-9865068438
2.ஜெகபர் சாதிக்-9791386950
3.ஹாஜா-8883231076
4.நசுரூதீன்-9524433000
5.பத்ருதீன்-9486718275
6.இர்ஃபான் (மாணவரணி)-8122835694
7.ந‌வ்சாத் (மருத்துவரணி)-8012299964

மேலும் தலைமையினால் நடத்தப்பட்ட மண்டல தர்பியாவில் வைத்து தரப்பட்ட மனனம் செய்வோம்,ரமளானின் சிரப்புகள்,மாமனிதர் நபிகள் நாயகம் (ஆங்கில பிரதி) ஆகியவை கிளைவாரியாக மாவட்டதின் அனைத்து கிளைகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

எல்லா புகழும் இறைவனுக்கே.....








பொறையார் மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி


நாகை வடக்கு மாவட்டம் பொறையார் நகரம் சார்பாக கடந்த 23.06.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 2.30 மணி வரை பொறையார் மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது .

அது சமயம் சென்னை வடக்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் முஹம்மது ஒலி அவர்கள் தொழுகை பயிற்சிகளும் சட்டங்களும் என்ற  தலைப்பில் உரை நிகழ்த்தி  மேலும் ஜனாசாவிர்கான பயிற்சிகளும் அளித்தார்கள். 
அடுத்து நாகை தெற்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் யாசர் ரிஸ்வான் அவர்கள் இறை அச்சம் என்ற தலைப்பில் மார்க்க உரை ஆற்றினார்கள். 

அடுத்து கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது .
 



 

திங்கள், ஜூன் 24, 2013

நாகை மாவட்ட (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு ஜுன் மாதக் கூட்டம்

நாகை (வடக்கு) மாவட்ட கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் ரியாத் TNTJ மர்கஸில் 21.06.2013 அன்று மாலை 4.30 மணிக்கு அதன் பொறுப்பாளர் சகோ. பெரியகூத்தூர் சகோ. ஹாஜா அலாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 இதில்  இறை நினைவு என்ற தலைபில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பேசப்பட்டு, மாவட்ட கடிதம் வாசிக்கப்பட்டது.

மாவட்ட சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.


கிளியனூரில் மீண்டு(ம்) வந்த அடக்கஸ்தல பிரச்சனை

தவ்ஹீத் சகோதரர் வீட்டு இறப்புச்செய்தி என்றாலே! நாகை மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊர்பொதுமக்களுக்கு ஒருவித பதற்றம் ஏற்படத்தான் செய்கின்றது.
நாகைவடக்குமாவட்டம், தரங்கம்பாடிதாலுகா,கிளயனூர் கிராமத்தில் ஜம்ஜம் நகரில் வசித்து வரும் சகோதரர் ஜெகபர்சாதிக் அவர்களின் பாட்டி 14ஜூன் 2013 அன்று இரவு சுமார் 9:30 மணியளவில் மரணமடைந்து விடுகின்றார்கள். இச்செய்தி காற்றுத்தீப்போல் மாவட்டம் முழுவதும் விரைவாக பரவுகின்றது. ஏனென்றால் இவ்வூரில்தான் சில மாதங்களுக்கு முன்பு இறந்த பச்சிளம் குழந்தையை குடும்பத்தாரின் அனுமதியின்றி பிடிங்கி அடக்கம் செய்து, பிணத்தைவைத்து பணம் மற்றும் புகழ்தேடும் ஊராக அனைவராலும் அறியப்பட்டதால் இப்பொழுது என்ன ஆகுமோ என்ற பீதியில் அவ்வூர் இளைஞர்கள் மற்றும் வியாபாரிகள் கூட கடையைத் திறக்காமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.இன்று முழுவதும் கடையை திறக்க்க்கூடாது என்று ஊர்நிர்வாகிகளால் வியாபாரிகள் மிரட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.
அடுத்தநாள் பொழுதுவிடிந்த பொழுது ஊர் சுன்னத்வல் ஜமாத் நிர்வாகிகளை, கிளியனூர் கிளை தவஹீத் நிர்வாகிகள்சந்தித்து இறப்புச் செய்தியை தெரிவித்து, இறந்தவரின் உறவினர் நான் நபிவழிப்படி தான் தொழுகை நடத்துவேன் எனக்கூறியதை எடுத்துக்கூறியதும், அவர்களோ எதைப்பற்றியும் சட்டைச் செய்யாமல் எங்களின் விருப்பப்படித்தான் செய்வோம் என்று கூறிவிட்டு தங்களின் சகாக்களான அ.இ.அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு நாகை மாவட்ட செயலாளர் S.M.சம்சுதீன், துணை செயலாளர் கிளியனூரை சார்ந்தஷபிர் இவர்களின் தலைமையில்,  DMK வை சார்ந்த அரங்க‌குடி முசாவுதீன், SDPI, லீக், வட்டாரஜமாத் என்ற போர்வையில் வலம் வரும் ரவுடிகும்பல், ம.ம.க‌ மற்றும் சுற்றுவட்ட ஊர்களின் நிர்வாகி களை கலந்தாலோசனை செய்ய சென்றுவிட்டார்கள்.
இதற்கிடையில் தவ்ஹீத் கிளைச் சகோதரர்கள் காவல்துறைக்கு செய்திகளை தெரிவித்து பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யுமாறு கடிதம் அனுப்பினர்.தவ்ஹீத் சகோதர்ரின் குடும்பத்தில் ஏற்பட்ட இறப்பிற்கு கலந்துக்கொள்ள நாகை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து 1000 ற்கு மேற்பட்ட சகோதரர்கள் ஜனாஸாவை அடக்கம் செய்யும் நேரம்வரையில் வந்துக்கொண்டே இருந்தனர்.
காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கள ஆய்வுசெய்து, அமைதிபேச்சுவார்த்தைக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்தது. இருதரப்பினரிடமும் பேசியதில் முடிவு ஏதும் எட்டப்படாததால், தாசில்தார் சுன்னத்வல் ஜமாத்தினரிடம் ஒரு தரப்பினரின் பிரேதத்தை அடக்கும் முறையில் யாரும் தடுக்க இயலாது என்பதை விளக்கி அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். அரசுதரப்பினரிடமிருந்து. தமக்கு ஏதும் அதரவுகிட்டாததாலும், உள்ளூர்மக்களின் ஆதரவும் கிடைக்காமல் சுமார் 350பேர்கள் மட்டும் திரண்டு அதுபோதாமல் அரசியல்வாதிகளின் செல்வாக்கும் தங்களுக்கு எந்தவித சாதக நிகழ்வு நடைபெறாத்தால் சமாதான குழுவை அனுப்பி தவ்ஹீத்ஜமாஅத்தினரை சரிகட்ட நினைத்தனர்.
தவ்ஹீத்ஜமாஅத்தினர் நபிவழியே உயிர்மூச்சி என்றிருந்ததால் இவர்களின் அனைத்து வித தந்திரங்களும் நம்மிடம் எடுபடாமல் போனது. இவர்களின் ஒவ்வொரு தந்திரங்களும் நமக்கு எதை ஞாபகப்படுத்தியது என்றால். நபி (ஸல்) கூறியதுபோல்,“ஒருமூமின் ஒருமுறைக்கு மேல் புற்றில் கை விடமாட்டான்” என்ற நபிமொழிதான் நினைவில்வந்தது.
தங்களுடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தநிலையில் இறுதியாக சங்கு போட்டு மக்களை கூட்ட நினைத்து அதுநிறைவேறாததால், ஜெயலலிதா அம்மாவின் இலவசமிக்ஸி, கிரைன்டர்வழங்க இருப்பதாக அறிவிப்புச் செய்து பெரும்பான்மை பெண்களைக்கூட்டி அவர்களை திருமணமண்டபத்தில் அடைத்து வைத்து இருந்தனர். நாம் ஜனாஸாவை அடக்கவரும் தருணத்தில் பெண்களை வெளியேற்றி குழப்பம் விளைவிக்க நினைத்ததை அறிந்த நம் தவ்ஹீத் ஜமாஅத்தினர் திடீரென ஒரு திட்டத்தை அரசுதுறையினரிடம் தெரிவித்தனர். அதுதான் நம் சகோதரர் ஒருவரின் மனையைமையவாடியாக பயன்படுத்தலாமா என கேட்கப்பட்டு உடனடியாக அரசு அதிகாரிகள் அவ்விடத்தை பார்வையிட்டு, அனைத்துதரப்பினரின் கருத்து கேட்கப்பட்டு சம்மத முடிவு அறிவிக்கப்பட்டு அதற்கான அதிகார ஆணையையும்வழங்கினர். இதனைப்பெற்றுக் கொண்ட தவ்ஹித் சகோதரர்கள். இரவு சுமார் 9:00மணியளவில் இறந்தவரின் கடனைதான் ஏற்றுக்கொள்வதாக பேரன் அறிவிக்க உடனடியாக நமது தவ்ஹீத் மர்கஸின் தெருவெளியில் 1000ற்கும் மேற்பட்டோர் தொழுகையில் கலந்துக்கொண்டனர். தொழுகையை இறந்தவரின் பேரனால் நபிவழிமுறைப்படி நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.தவ்ஹீத் சகோதரர்களுக்காக நாகைமாவட்டத்தில் முதன்முறையாக கிடைக்கப்பெற்ற மையவாடியாகும் எல்லாப்புகழும்அல்லாஹ்விற்கே.
அ.தி.மு.க சிறுபான்மைப்பிரிவு செயலாளர் வடகரை-அறங்கக்குடியைச் சேர்ந்த எஸ்.எம்.சம்சுதீன் தனதூரிலும் தவ்ஹீதின் வளர்ச்சியைத் தடுக்க கிளியனூரில் ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டார். அறங்கக்குடியில், தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி முத்தவல்லி பொறுப்பை 14ஆண்டுகளாக ஆக்ரமித்து வைத்துக்கொண்டு தவ்ஹீதின்வளர்ச்சி தன் ஆட்சியை ஆட்டம் காணவைத்துவிடுமோ என்ற அச்சத்தில் தனது ஊரில் தவ்ஹீத்பிரச்சாரமோ, போஸ்டர் மற்றும் பிட் நோட்டீஸ் வினியோகமோ செய்யவிடாமல் தடுத்து வந்தார். மிஹ்ராஜூம் தவரான வழிமுறைகளும் என்ற பிட் நோட்டீஸ் தவ்ஹீத் சகோதரர்களால் வீடு, வீடாக சென்று வெளியிடப்பட்டதை வஞ்சகமாகக் கொண்டு கிளியனூர் நிகழ்வை தனக்கு சாதகமாக ஆக்க நினைத்து கரியை பூசிக்கொண்டதுதான் மிச்சம்.




செவ்வாய், ஜூன் 18, 2013

பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – பெரியார்பாளையம் கிளை


நாகை வடக்கு மாவட்டம் பெரியார்பாளையம் கிளை சார்பாக கடந்த 09-06-2013 அன்று பிற சமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்ரும் நூல்கள் வழங்கி தஃவா செய்யப்பட்டது.