எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

செவ்வாய், செப்டம்பர் 28, 2010

நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் - 17 செப்டம்பர் 2010

கடந்த 17 செப்டம்பர் 2010 அன்று மாலை 5.10 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டல மர்கஸில் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நடைபெற்றது.


இக்கூட்டம் சகோ. ஏனங்குடி அலாவுதீன் தலைமையில் அவர்களின் துவக்கவுரையுடன் ஆரம்பிக்கப்பட்டது. காதியானிகளின் தோற்றமும் அவர்களின் சந்தர்ப்பவாதங்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து கடந்த மாத மினி்ட்டை செயலாளர் வாசித்தார். மேலும் நாகை (வடக்கு) மாவட்டத்திலிருந்தும் கிளைகளிலிருந்தும் வந்திருந்த நோன்புப் பெருநாள், ஃபித்ரா விநியோகம் மற்றும் கடந்த மாதத்தில் நடைபெற்ற சமுதாயப் பணிகள் குறித்த செய்திகள் வாசிக்கப்பட்டது.

கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட சில முக்கிய அம்சங்கள்

உம்முல் முஃமினீன் பெண்கள் மதரஸா வளர்ச்சிக்கு உதவுவது குறித்துவானாதிராஜபுரம் மற்றும் அரசூர் டிஎன்டிஜே கிளைகளிலிருந்து வந்திருந்த கோரிக்கை மனுக்கள் குறித்துகூட்டமைப்பிற்கு உறுப்பினர்களை அதிகம் சேர்ப்பது குறித்து

அல்லாஹ்வின் கிருபையால் மக்ரிப் தொழுகைக்குப்பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பிறகு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக