எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

சனி, செப்டம்பர் 18, 2010

பெரியகூத்தூர் கிளை TNTJ செயளாலர் ஹபீப்புல்லாஹ் மரணம்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] பெரியகூத்தூர் கிளை செயளாலர் ஹபீப்புல்லாஹ் அவர்கள் 11.09.2010, அன்று மரணம் அடைந்தார். இவருக்கு வயது 35, அண்ணாருக்கு மனைவியும், 6 வயதில் ஒரு பெண்குழந்தையும் உள்ளன.


அவர் கடந்த இரண்டு வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார், இறுதியாக சென்னைக்கு சென்று மருத்துவம் பார்த்தார். கிட்னி பழுது அடைந்ததன் காரணமாய் இறந்து விட்டார்.


கிளை சகோதரர்கள் பெரியகூத்தூர் ஜமாத்தார்களை அனுகி நபி வழியில் நல்லடக்கம் செய்வதர்க்கு முயற்ச்சித்தனர், மறுத்து வந்த ஜமாத்தினரை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசிய பின், மையத் கொள்ளையை திறந்து விட்டு அடக்கம் செய்து கொள்ள அனுமதித்தனர். அமைதியான முறையில் நல்லடக்கம் முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.


இந்த நடைமுறைகளை மற்ற ஜமாத்தினரும் பின்பற்றினால் பிரச்சனைகள் பல தவிற்க்கப்படும். மேலும் மருத்துவத்திற்காக கடன்பட்டு இருந்தார், ஜனாஸாத் தொழுகையின் போது மண்ணிப்பவர்கள் மண்ணித்து விடுங்கள் அல்லது மாவட்ட நிர்வாகிகளை தொடர்புக் கொண்டால் இன்ஷா அல்லாஹ் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என அறிவிப்புச் செய்யப்பட்டன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக