தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நாகை (வடக்கு) மாவட்டச் செய்திகள் மற்றும் மக்கள் நலச்செய்திகளை இங்கு காணலாம்.
எதிர்வரும் நிகழ்ச்சிகள்
வியாழன், பிப்ரவரி 24, 2011
புதன், பிப்ரவரி 23, 2011
நாகை மாவட்டத் தவ்ஹீத் கூட்டமைப்பு பிப்ரவரி கூட்டம் ரியாத்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 18.02.2011 அன்று நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம், சகோ. அரசூர் பாருக் அவர்கள் துவக்கவுரையுடன் மாலை 5:00 மணிக்கு TNTJ ரியாத் மண்டல மர்கஸில் துவங்கியது. எதைச் செய்தாலும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கமாக உரை நிகழ்த்தினார்கள்.
சென்ற மாத மினிட் மற்றும் நாகை வடக்கிலிருந்து வந்தி்ருந்த செயல்பாடுகள் குறித்த செய்திகள் கூட்டமைப்பின் செயலாளர் சகோ. ஃபரீத் அவர்கள் வாசித்தார்கள். இதில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மாணவிகளை கல்விக் கூடத்திற்கு அனுப்ப வேண்டாம் என்ற நோட்டீஸ் வினியேகிக்கப் பட்டது என்று அறிந்தோம். இனி வரும் காலங்களில் மாணவர்களையும் கண்காணிக்க வேண்டும் என்ற வாசகத்தை இந்த நோட்டிஸில் குறிப்பிட வேண்டும் என்ற யோசனையும் முன் வைக்கப்பட்டது.
நாகை மாவட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மஃக்ரிபு தொழுகைக்குப் பின், இக் கூட்டம் இனிதே துவாவுடன் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.....

செவ்வாய், பிப்ரவரி 22, 2011
ஞாயிறு, பிப்ரவரி 20, 2011
திங்கள், பிப்ரவரி 14, 2011
ஜனாஸா நல்லடக்கம் - அடாவடி ஜமாஅத்தின் கொட்டம் அடங்கியது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை (வடக்கு) குத்தாலத்தை சேர்ந்த சகோ.சர்புதீன் அவர்களின் தந்தை ஹசன் முஹம்மது அவர்கள் 13-02-2011 அன்று மரணமடைந்துவிட்டார்கள் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). அவருடைய ஜனாஸாவை நபிவழியில் நல்லடக்கம் செய்ய ஜமாத்தார்கள் மறுத்து விட்டனர். பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் ஆம்புலன்ஸ் மூலம் உடலை எடுத்துச்சென்று பள்ளிவாசலின் வெளியே வைத்து சர்புதீன் தனது தந்தைக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து போலிஸ் பாதுகாப்புடன் பள்ளியின் அடக்கஸ்தலத்தில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டதுடன் அடாவடி ஜமாஅத்தின் கொட்டமும் அடக்கப்பட்டது. அல்லாஹு அக்பர்.
லேபிள்கள்:
நாகை (வடக்கு) மாவட்டம்
ஞாயிறு, பிப்ரவரி 13, 2011
மயிலாடுதுறையில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை மர்கஸில் கடந்த 06-02-2011 அன்று, 10 மற்றும் +2 வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி என்ற நிகழ்ச்சி மாணவ மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் மாவட்ட மாணவரணி செயலாளர் ஃபாஸில் தலைமை தாங்கினார்கள் கலீலுர் ரஹ்மான் MBA சிறப்புரை ஆற்றினார்.
அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கும் பதிலளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)