எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

திங்கள், பிப்ரவரி 14, 2011

ஜனாஸா நல்லடக்கம் - அடாவடி ஜமாஅத்தின் கொட்டம் அடங்கியது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை (வடக்கு) குத்தாலத்தை சேர்ந்த சகோ.சர்புதீன் அவர்களின் தந்தை ஹசன் முஹம்மது அவர்கள் 13-02-2011 அன்று மரணமடைந்துவிட்டார்கள் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்). அவருடைய ஜனாஸாவை நபிவழியில் நல்லடக்கம் செய்ய ஜமாத்தார்கள் மறுத்து விட்டனர். பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படாததால் ஆம்புலன்ஸ் மூலம் உடலை எடுத்துச்சென்று பள்ளிவாசலின் வெளியே வைத்து சர்புதீன் தனது தந்தைக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து போலிஸ் பாதுகாப்புடன் பள்ளியின் அடக்கஸ்தலத்தில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டதுடன் அடாவடி ஜமாஅத்தின் கொட்டமும் அடக்கப்பட்டது. அல்லாஹு அக்பர்.



1 கருத்து: