எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

ஞாயிறு, ஜூன் 09, 2013

Foreigners told to get exit/re-entry visas for dependents online

சவூதியில் ஃபேமிலி விசாவில் உள்ளவர்களுக்கு தாயகம் சென்று வர "எக்ஸிட் ரி என்ட்ரி / Exit Re Entry" அடிக்க ஜவ்ஸாத் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆன்லைன் மூலமே உள்துறை அமைச்சக இணையதளம் (Ministry of Interior - MOI.GOV.SA) மூலம் எக்ஸிட் ரி என்ட்ரி அடித்துக் கொள்ள வேண்டும்.

செயல்முறை:
1. ஜவ்ஸாத்தில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்களில் (KIOSK) சென்று, தங்களது இக்காமா எண்ணை கொடுத்தால், தங்களது விரல்களை ஃபிங்கர் பிரிண்ட் செய்யும்.

2. ஏற்கனவே தாங்கள் ஃபிங்கள் பிரிண்ட் பதிவு செய்திருப்பதால், இந்த இக்காமா எண்ணுக்குரியவர் தாங்கள் தான் என உறுதி செய்த பிறகு, தங்களுக்கு ஒரு USER NAME & PASSWORD கொடுக்கும்.

3. எக்ஸிட் ரி என்ட்ரிக்கான தொகையான 200 ரியாலை வழக்கம் போல், ATM அல்லது வங்கிக்கணக்கு மூலம் கட்டி விட வேண்டும்.

4. அதன்பிறகு, தாங்கள் விரும்பும் இடத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும், MOI.GOV.SA இணையதளம் சென்று, LOGIN செய்து எக்ஸிட் ரி என்ட்ரி அடித்துக் கொள்ளலாம்.

5. மேற்கண்ட USER NAME & PASSWORD -ஐ தொடர்ந்து உபயோகிக்கலாம். மீண்டும் மீண்டும் ஜவ்ஸாத் செல்ல தேவையில்லை.


Foreigners told to get exit/re-entry visas for dependents online

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக