எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

சனி, அக்டோபர் 17, 2009

வெளிநாடுகளில் முறையான ஆவணம் இல்லாமல் இருக்கலாமா?








அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புடையீர்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.




முன்னுரை

வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வோர் தன்னுடைய அடையாளச் சான்றுகளை பாதுகாப்பாகவும், எப்பொழுதும் தன்னுடனே இருக்கும்படி வைத்துக் கொள்வதில் அலட்சியமாக உள்ளனர். கல்வியறிவு இல்லாதவர்கள் சவுதி அரேபியா, துபாய் போன்ற வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர்களிடம் இப்படிபட்ட போக்கு அதிகம் காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக தனது வேலை பார்க்கும் இடத்தை விட்டு சட்டவிரோதமாக வெளியேறி வேலை பார்ப்போர் தன்னுடைய அடையாளச் சான்றுகளை பாதுகாப்பது கிடையாது. இதனால் ஏற்படுகின்ற பிரச்னைகளை நாம் இங்கு காண்போம்.

ஆவணம் இல்லாமையால் ஏற்பட்ட இன்னல்கள்

கடந்த 04 அக்டோபர் 2009 அன்று மாலை சுமார் 4 மணிக்கு ரியாத் மண்டலத்தில் உள்ள நியு செனையா என்ற ஏரியாவில் உள்ள TNTJ கிளை சகோதரர்களுக்கு, சகோதரர் கமால் என்பவர் மூலம் போன் கால் வந்தது, நியு செனையாவிலிருந்த 20 கிலோமீட்டருக்கு அருகில் உள்ள ஓல்டு செனையா என்ற இடத்தில் நடந்த விபத்தில் ஒரு சகோதரர் இறந்து விட்டார் அவரிடம் அக்காமா (அடையாள அட்டை) இல்லை மேலும் கஃபீல் (முதலாளி) வந்து பார்க்க மறுக்கின்றார். எனவே, நீங்கள் வந்து உதவி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் TNTJ அமைப்பைச் சேர்ந்த எரவாஞ்சேரி ஹாஜா என்ற சகோதரரின் தலைமையில் ஒரு குழு புறப்பட்டு கஃபீல் வசிக்கும் இடமான அல் மாரியா என்ற இடத்திற்கு போய் கஃபிலிடம் பேசியதற்கு இறந்த சகோதரர் அமானத் அவர்கள் சவுதிக்கு புதியதாக வந்து 20 மாதமாகிறது, அவர் என்னிடம் இரண்டு மாதம் மட்டுமே வேலை பார்த்தார் அதன் பிறகு அவர் என்னிடம் இருந்து சட்டவிரோதமாக வெளியேறிவிட்டார், இதனால் நான் போலிஸில் புகார் கொடுத்து விட்டேன். இப்பொழுது நான் இதில் தலையிட முடியாது. எனவே, நீங்கள் எது பேசுவதாய் இருந்தாலும் போலிசிடம் பேசிக் கொள்ளவும் என கூறி எங்களை தவிர்க்க பார்த்தார். அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் TNTJ கிளை சகோதரர்களின் விடாமுயற்சியால் மிக நீண்ட விளக்கத்திற்கு பிறகு தனது சகோதரர் ஃபஹத் அலி சுலைமான் அல்கர்னி என்பவரை மறுநாள் அனுப்பி இது சம்பந்தமாக தேவையான உதவிகள் செய்வதாகக் கூறி எங்களை அனுப்பி வைத்தார்.

05 அக்டோபர் 2009 அன்று காலையில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யத் தேவையான ஆவணங்களை தயார் செய்வதற்காக ஓல்டு செனையா ஃபய்சல்யா போலீஸ் ஸ்டேசன், மலஸ் மரூர் போலீஸ் ஸ்டேசன், இந்தியத்தூதரக அலுவலகம் மற்றும் சுமேசி மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு அலைந்து அனைத்து பார்மாலிட்டிகளும் முடிப்பதற்கு 8 நாட்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு 13 அக்டோபர் 2009 அன்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டது. இதன் பிறகு இறந்தவரின் சொந்தங்கள் வரவேண்டும் என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தாமதித்து 15 அக்டோபர் 2009 (வியாழன்) அன்று மதியம் அஸருக்குப் பிறகு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்தவரின் பெயர் அமானத்துல்லாஹ், ஊர் வட கீரனூர் சங்கராபுரம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சப்னா பானு என்ற மனைவியும், இரண்டு வயதில் அப்சர் என்ற மகனும் உள்ளார். அவருடைய மறுமை வாழ்வுக்காக துவாச் செய்யுங்கள். நல்லடக்கத்திற்கு வந்திருந்த சொந்தங்கள் ரியாத் TNTJ வின் உதவிகள் மற்றும் அவர்கள் ஆற்றிய பணிகளை பார்த்து மிகவும் பாராட்டினார்கள் மற்றும் நல்லடக்கத்தின் போது வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அங்குள்ள சவுதிகளே பார்த்துக் கொண்டார்கள். இந்நேரத்தில் அச்சவுதிவாசிகளின் பணி எங்களுக்கு மன ஆறுதலைத் தந்தது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

நல்மனம் படைத்த முதலாளி

இந்த விஷயத்தை பொறுத்தவரை காலதாமதம் ஆனதற்க்கு ஸ்பான்சரின் அனுமதி இல்லாமலும், இக்காமா (அடையாள அட்டை) இல்லாமலும் வேலை பார்த்ததுதான் காரணம் ஆகும். இவ்வாறு இருந்தும் இறந்தவரின் கஃபில் அவரின் ஒரு மாதச் சம்பளம் மற்றும் இன்சூரன்ஸ் பணமும் வாங்கி தருவதாய் கூறி உள்ளார். ஜெசக்கல்லாஹூ ஹைர்.

விபத்திற்கான காரணம்

சம்பவம் நடந்த அன்று இறந்தவர் மெக்கானிக் என்பதால் 03 அக்டோபர் 2009 அன்று மாலை வழக்கம் போல் பெரிய டிரைலரை நிறுத்தி வேலை பார்த்து கொண்டு இருந்தார், அப்பொழுது உதவியாளர் கேரளாவைச் சேர்ந்த சாஜுவின் தவறுதலான அணுகு முறையால் ஆக்ஸிலேட்டரை அழுத்தி விட்டார் வாகனங்கள் நிறுத்துவதற்கான சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் கிழே படுத்து பழுதுபார்த்துக் கொண்டு இருந்த சகோதரர் அமானத்துல்லாஹ்வின் தலையில் சக்கரம் ஏறி அங்கேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜூஊன். தற்போது அந்த உதவியாளர் சாஜு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார், தேவையான நஷ்ட ஈடு தரப்படும் வரையில் உதவியாளர் சாஜு ஜெயிலை விட்டு வரமுடியாது என்பது இன்றைய நிலை.

மெக்கானிக் மற்றும் ஓட்டுனர்களின் கவனத்திற்கு

நமது மெக்கானிக்குகள் மற்றும் ஓட்டுனர்கள் கவனக் குறைவாகவும், அலட்சியப் போக்காகவும் வாகனங்களை நிறுத்தும் போதோ அல்லது பழுது பார்க்கும் போதோ சக்கரத்தில் பாதுகாப்புக் கருதி எந்தவொரு தடுப்பும் (முட்டு) கொடுக்காமல் மேட்டுப்பாங்கான இடத்தில் ரிப்பேர் பண்ணுவது அல்லது வாகனத்தை நிறுத்துவதால், இது போன்ற விபத்துகள் நடக்க காரணமாய் அமைந்துவிடுகிறது. பொதுவாக இந்திய தொழிலாளிகள் வேலையின் போது முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து கொள்வது கிடையாது. மற்றும் சிலர் முறையான ஆவணங்கள் இல்லாமலும் வேலைப் பார்க்கின்றார்கள். முடிந்தவரை கண்டிப்பாக இதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

முடிவுரை

வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளிகளும் முறையான ஆவணங்களுடனும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், சட்ட விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடாமல் வேலை பார்ப்பதனால் இப்படிப்பட்ட இன்னல்கள் இல்லாமல் நமக்குள்ள உரிமைகளைச் சரியாக பெறமுடியும். (அல்லாஹ் போதுமானவன்)

ரியாத்திலிருந்து அரசூர் ஃபாரூக்

புதன், அக்டோபர் 14, 2009

பெண்களுக்கான பயான்


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை (வடக்கு) மாவட்டம், வடகரை - அறங்கக்குடி கிளையில் பெண்களுக்கான பயான் 18 செப்டம்பர் 2009 அன்று சகோதரர் ஹபிபுல்லா வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாகை ஷரிப் அவர்களின் மகள்கள் அல்நூர் மதரஸாவில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் ஆலிமாக்கள் பர்வின் மற்றும் யாஸ்மின் ஆகியோர் இறையச்சம் மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். இதில் 35 ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பலன் அடைந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

ஞாயிறு, அக்டோபர் 11, 2009

சனி, அக்டோபர் 10, 2009

நாத்தீகர்களுடன் விவாதம் - நேரடி ஒளிபரப்பு

இன்ஷா அல்லாஹ் சென்னை மாநகரத்தில் வருகின்ற 11 , 12 அக்டோபர் 2009 ஆம் தேதிகளில் நாத்தீக கொள்கையுடையவர்களுடன் நடைபெற இருக்கும் விவாதம் கீழ்கண்ட வலைத்தளத்தில் நேரடியாக ஒளிபரப்பாகும் என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.



நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மாலை 4:30 மணி முதல் இரவு 9:30 மணிவரை

விவாதத்தில் கலந்துகொள்வோர்:

தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக: பி. ஜைனுல் ஆபிதின் தலைமையில் 5 பேர்கள்.

பகுத்தறிவு இயக்கம் சார்பாக: சிற்பி ராஜன் தலைமையில் 5 பேர்கள்.

இது சம்பந்தமாக மேலதிக விபரங்களுக்கு கீழ்கண்ட தொலைதொடர்பாளரிடம் தொடர்பு கொள்ளவும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மாநிலச் செயலாளர்: அப்துல் ரஜ்ஜாக் . தொலைபேசி எண்: 0091 9952057222.

நன்றி: www.tntj.net

தவ்ஹீத் ஜமாஅத் VS பகுத்தறிவு இயக்கத்தினர் - மாபெரும் விவாதம்

தவ்ஹீத் ஜமாஅத்

VS

பகுத்தறிவு இயக்கத்தினர்

மாபெரும் விவாதம்

  • இறைவன் இருக்கின்றானா?

  • உலகம் தானாக தோன்றியதா?

  • மனிதன் குரங்கிலிருந்து வந்தானா?

  • திருக்குர்ஆன் இறைவேதமா?

  • முஹம்மது நபி இறைதூதரா?

  • சொர்க்கம் நரகம் உண்டா?

  • விதி என்பது உண்மையா?

  • மூட நம்பிக்கை நிறைந்தது பகுத்தறிவு இயக்கமே!

இன்ஷா அல்லாஹ் சென்னையில் வருகின்றது 11-10-2009 மற்றும் 12-10-2009 ஆகிய தேதிகளில் பகுத்தறிவு இயக்கத்தினருடன் விவாதம் நடைபெற உள்ளது.

விவாதத்தில் பங்கு பெற்று கேள்வி கேட்க விரும்புவோர்கள், மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் (+91 9952057222) அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

அனுமதிபெற்ற சகோதரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் அனுமதிபெற்ற சகோதரர்கள் விவாதம் துவங்கும் நேரத்திற்கு 15 நிமிடம் முன்னதாக வர வேண்டும்.


விவாதமும் குறுக்கு விசாரனையும்

11, 12 அக்டோபர் 2009 இறைவன் நாடினால்!

சென்னையில்..

இவண்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்