எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

ஞாயிறு, அக்டோபர் 25, 2009

50 ஆண்டுகளாக மருத்துவச் சேவை செய்த மருத்துவருக்குப் பாராட்டு

50 ஆண்டுகளாக மருத்துவச் சேவை செய்துவரும் மயிலாடுதுறையைச் சேர்ந்த மருத்துவருக்கு தொண்டு அமைப்புகள் பாராட்டு தெரிவித்தன.

மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் ராமமூர்த்தி. இவர் கடந்த 50 ஆண்டுகளாக ஒரே இடத்தில் மருத்துவச் சேவை செய்து வருகிறார். இவருடைய மருத்துவ கட்டணம் இரண்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை  மட்டுமே இவருடைய 50 வருட கால சேவையில் உயர்த்தப்பட்ட கட்டணமாகும். ஏழைகளைக் கண்டாலும், பழகியவர்களைக் கண்டாலும் இவர் அவர்களிடம் மருத்துவ கட்டணம் வாங்குவது இல்லை. மாதக்கணக்கில் உட்கொள்ளுமாறு மருந்துக்கள் தருவது இல்லவே இல்லை. இப்படிப்பட்ட மருத்துவரை எக்காலத்திலும் காண்பது இயலாது.

இவரது சேவையின் 50 -வது ஆண்டு நிறைவையொட்டி, மயிலாடுதுறையில் உள்ள சேவை சங்கங்கள், வர்த்தகர் சங்கம், இந்திய மருத்துவக் கழகம் மற்றும் தொண்டு அமைப்புகள் இவருக்கு பாராட்டு தெரிவித்தன.

நாமும் இவருக்கு பாராட்டு தெரிவிக்கலாமே.

டாக்டர் ராமமூர்த்தியின் தொலைதொடர்பு எண். 0091 4364 223461.


நன்றி.


 

சனி, அக்டோபர் 24, 2009

மெக்காவிற்கு புனித ஹஜ் பயணம்

23 அக்டோபர் 2009 அன்று மெக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றது. முதல் கட்டமாக 464 பயணிகள் சென்றனர். இவர்கள் விமான நிலையத்தில் சோதனைக்காக காத்து இருக்கும் படத்தினை கீழ் காண்கின்றீர்கள்.

(உள் படம் அமைச்சர் மைதீன்கான் ஹஜ் பயணிகளை வழி அனுப்பி வைத்தார்).



நன்றி: தினகரன் (24 அக்டோபர் 2009).

கல்லூரி மாணவர்களுக்கு உதவித் தொகை: விண்ணப்பம் பெற அக்டோபர் 31 கடைசி நாள்

நன்றி: தினமணி (24 அக்டோபர் 2009)

புதன், அக்டோபர் 21, 2009

ரியாத் TNTJ சார்பாக மருத்துவ உதவி

பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் என்ற ஊரைச் சேர்ந்த 37 வயதான அன்வர்தீன் என்பவர் தையல் தொழில் செய்து வந்தார். இவருக்கு ஒரு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு, திடீரென வலது கை செயலிழந்து விட்டதால், தற்போது தொழில் செய்ய இயலாத சூழ்நிலையில் இருக்கிறார். இப்பொழுது இவரது மனைவிதான் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார்.

 

இன்னிலையில் இவருக்கு, இருதய கோளாறு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால், ரியாத் மண்டல நியூ செனையா கிளை மூலம் ரியாத் TNTJ வை அணுகினார். ரியாத் TNTJ மர்கஸில், கடந்த 16  அக்டோபர் 2009 வெள்ளிக்கிழமை அன்று நடந்த இஷா தொழுகைக்குப் பிறகான கூட்ட அமர்வில், கொள்கைச் சகோதரர்கள் உதவியளித்ததின் பேரில், அவருடைய உறவினர் கே. அக்பர் அலியிடம், ரூ 7000 மதிப்புக்கான சவூதி ரியாலை மருத்துவ உதவித் தொகையாக ரியாத் மண்டலம் சார்பில் வழங்கப்பட்டது.

 

மண்டலச் செயலாளர் சகோ. நூருல் அமீன்  உதவித் தொகையை வழங்கினார். முன்னதாக, சகோ. மவுலவி இனாமுல் ஹசன் MISc அவர்கள் "ஷிர்க்கான (மவ்லூது) கவிதைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 

திரைத்துறையினரின் தொடர் தீவிரவாதம் - தூங்கும் சென்சார் ...

திரைத்துறையினரின் தொடர் தீவிரவாதம் - தூங்கும் சென்சார் ...


இந்தியன் படத்தில் லஞ்சம் வாங்குபவர்கள் ஒவ்வொருவரையும் தீர்த்துக்கட்டும் கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் அதன் வெற்றியை தொடர்ந்து அதே பார்முலாவில் இன்னொரு படத்தையும் தந்துள்ளார். வழக்கமாக அர்ஜூன் அல்லது விஜய்காந்த் நடிக்கும் படங்கள் தான். முஸ்லிம்களை தீவிரவாதிகளாக்கும் அந்த ஃபார்முலாவை இப்போது கமலஹாசன் கையில் எடுத்துள்ளார்.



படத்தில் வரும் காட்சிகள் சில...


அப்துல்லாஹ் - அல்காயிதாவின் டைரக்ட் காண்டாக்ட். 42 இடங்களில் டிரையினிங் காம்ப் நடத்தி தீவிரவாதிகளுக்கு ஜிஹாத் பயிற்சி கொடுத்தவன். அதில் 20 காம்ப் இந்தியாவில் உள்ளது. கிட்டத்தட்ட 1000 பேருக்கு மேல் அவனிடம் டிரையினிங் ஆகி இருக்காங்க. எல்லோரும் 16 முதல் 20 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.


அஹமதுல்லாஹ் - இவன் தாலிபான். கந்தகாரில் பயிற்சி பெற்றவன். அப்துல்லாவின் வலது கை. ஹமாஸ், ஹிஸ்புல் முஜாஹிதீன் குரூப்புடன் இவனுக்கு கனெக்ஷன் உண்டு. லஷ்கர் இ தய்யிபா டெர்ரரிஸ்டின் மாஸ்டர் மைண்ட்டான முஸம்மிலுக்கு இவன் வெரி குளோஸ்.

இனாயதுல்லாஹ் - ஜமாஅத்து தவா வின் ஏரியா டெபுடி கமாண்டர். லஷ்கர் இ தய்யிபாவின் பொலிடிக்கல் விங்க். சாப்ட்வேர் எஞ்சினியர். படத்துக்குள்ளே தகவலை ஒளித்து வைப்பதில் இவன் கில்லாடி. பல டெர்ரரிஸ்ட் அமைப்பின் வெப்சைட்டிற்கு இவன் தான் டிசைனர்.

கரம்சந்த்லாலா - இந்து. ஏ.கே.47, ஆர்.டி.எக்ஸ் போன்ற எதுவாக இருந்தாலும் காசு கிடைத்தால் எங்கு வேண்டுமானாலும் சப்ளை செய்வான்.

கமல்ஹாசன் பல இடங்களில் வெடிகுண்டுகளை வைத்து விட்டு கமிஷனர் மோகன்லாலை மிரட்டி சிறையிலிருக்கும் இந்த நான்கு தீவிரவாதிகளை விடுவிக்க சொல்கிறார். இவர்களில் இருவர் கோவையில் வெடிகுண்டு தாக்;குதல் நடத்தியதற்காக கமிஷனரால் கைது செய்யப்பட்டவர்கள்.


இந்த படம் முற்றிலும் முஸ்லிம்களுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள படம். அதாவது கோவை கலவரத்தில் பாதிப்படைந்த ஒரு முஸ்லிம் குண்டுவைத்து அப்பாவி மக்களை கொன்றதால் கைது செய்யப்பட்டது போலவும் குஜராத் கலவரத்தில் பாதிப்படைந்த ஒரு முஸ்லிம் அதன் காரணத்தால் தீவிரவாதியாகி இந்துக்களை கொல்ல குண்டு வைத்ததாகவும் இவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றவர்கள். ஹமாஸ், லக்ஷர் தெய்பா, ஜம்அத்தே தவா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவர்கள் என்று போலீஸ் அதிகாரி கூறுவதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவென்றால் பாலஸ்தீனத்தில் சொந்த மண்ணை மீட்க போராடிவரும் ஹமாஸ் என்ற ஜனநாயக அமைப்பையும் இந்தப் படம் தீவிரவாதிகள் லிஸ்டில் சேர்த்துள்ளது.


இந்த 4 தீவிரவாதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் நகரத்தில் வைக்கப்பட்டுள்ள வெடிகுண்டுகள் வெடிக்கும் என கமல் மிரட்டுவதால் அதன் காரணமாக அவர்களை விடுவிக்க போலீஸ் ஒத்துக் கொள்கின்றது. அந்த தீவிரவாதிகளை ஒப்படைக்க கொண்டு செல்லும் இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவர் முஸ்லிம். பெயர் ஆரிப்.


நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஆரிப் இருந்தாலும் அவரையும் கண்காணிக்கும் படி கமிஷனர் சொல்லி அனுப்புகிறார். மொத்தத்தில் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்று இந்த சினிமா சொல்கிறது. அந்த தீவிரவாதிகள் போலீஸ் அதிகாரியாக இருக்கும் ஆரிபை நக்கலடிப்பது போலவும் ஆரிபை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்வது போலவும் காண்பிக்க படுகின்றது.


இந்த நான்கு தீவிரவாதிகளில் முஸ்லிமான மூன்று பேரும் அப்பாவி மக்களை கொல்பவர்கள். ஆனால் இந்துவான கரம் சந்தோ யாரையும் கொல்வதில்லை. காசுக்காக ஆர்.டி.எக்ஸ் சப்ளை பண்ணுபவன், அவ்வளவு தான். தவறுக்கு வருந்துபவன், ஆனால் முஸ்லிம்களோ காபிர்களை கொல்ல வேண்டுமென்று துடிப்பவர்கள் போல் காட்சிகள் இருக்கின்றன.


இந்த நால்வரையும் விடுவித்த கமல் அவர்களை வேறு இடங்களுக்கு கொண்டு செல்வது போல் ஜீப்பில் ஏறச் சொல்ல அதில் கமல்ஹாசனால் வைக்கப்பட்ட வெடிகுண்டின் மூலமாக அந்த நால்வரும் சாகின்றனர். இது தான் கதை.


முஸ்லிம் தீவிரவாதிகளை போலீஸ்காரர்கள் கூட விட்டுவிடுகின்றனர். எனவே அவர்களை நாமே கொல்வது சிறந்தது என்கிறார் கமல். ஏற்கனவே கமலை அடையாளம் காட்டியவர் கூட கமல் செய்தது சரி எனக்கருதி அவரை அடையாளம் சொல்ல மறுக்கிறார். அவர் இருக்கும் இடத்தை கம்பியூட்டர் மூலம் கண்டுபிடிக்கும் ஒரு ஐ.டி மாணவன், கமலை காட்டிக் கொடுக்க மறுக்கிறான். இறுதியாக கமல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கமிஷனர் மோகன்லால் கூட கமல்தான் குண்டு வைத்தவர் என்பதை அறிந்தும் அவரைப் போக செய்வது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.


ஒரு இந்துத்துவ வெறியுடன் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சென்சார் போர்டு எவ்வாறு அனுமதித்தது என நமக்கு புரியவில்லை. இந்த படம் சென்சார் போர்டுக்கு செல்லாமல் வந்திருக்க வேண்டும், அல்லது லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது அங்கும் காவிசிந்தனை ஊடுருவி இருக்க வேண்டும்.


இதை சமீபத்திய கோர்ட் தீர்ப்பு உண்மைபடுத்துகின்றது. வக்கீல்களை மோசமாக சித்தரித்ததாக கூறி விஜய் மற்றும் சிவகாசி பட தயாரிப்பாளர்கள் மீது போடப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ரகுபதி தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.


வக்கீல்களை மோசமாக சித்தரிப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. சினிமா துறையில் உள்ளவர்கள் தங்களுக்கு எந்த கட்டப்பாடும் கிடையாது, தாங்கள் விரும்பியதை திரையிடலாம் எனக் கருதக்கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் தணிக்கை துறையையும் சாடியுள்ளார்.

சென்சார் போர்டு செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், தணிக்கை துறையினர் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சென்சார் போர்டு ஒப்புக்கு செயல்படுகிறது, உண்மையாக செயல்படவில்லை என்ற கருத்துக்கு உறுப்பினர்கள் இடம் கொடுக்கக் கூடாது. சமூக நலன் கருதி ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு தகுந்த திருத்தங்களை கொண்டு வர வேண்டும்.


சினிமாவில் மற்றவர்களை அவதூறாக, மோசமாக மற்றும் ஆபாசமாக சித்தரிக்காமல் இருக்கும்படி செய்வதற்கு மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவதூறான காட்சிகளை பொழுதுபோக்கு எனும் பெயரில் எடுக்கக்கூடாது. தகுந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


ஒரு சமுதாயத்தின் மீது அவதூறு கூறுவதை எவ்வாறு தணிக்கை துறை அனுமதித்தது. இலங்கையில் பயங்கரவாதம் செய்தும் இந்தியாவில் ராஜீவ் காந்தியை கொலையும் செய்த விடுதலை புலிகள் எனும் தீவிரவாதிகளை காண்பித்திருந்தாலும் ஏற்றிருக்கலாம். அவர்கள் இந்துக்கள் என்பதால் கமல் அவர்களை விட்டுவிட்டாரா?


மாலேகான் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் வைத்து அப்பாவி மக்களை கொன்ற சன்னியாசி பிரக்யா சிங், லெப்டினென்ட் புரோகித் உட்பட உள்ளவர்களை தீவிரவாதியாக காண்பித்து இருந்தாலும் இது உண்மை எனக் கூறலாம். தீவிரவாதிகள் அபினவ் பாரத், ஆர்,எஸ்,எஸ், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளில் பயிற்சி பெற்றதாக கூறினாலும் அது உண்மையானது. ஆனால் முற்றிலும் அதை மூடி மறைத்துவிட்டு இந்து தீவிரவாதிகள் செய்த செயல்களையெல்லாம் முஸ்லிம்கள் செய்ததாக காண்பித்திருக்கிறார்கள்.


இதை திரையாக்கியவனின் கையை ஒடித்து அல்லது திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் சென்று திரையை கிழித்து தியேட்டரை தரைமட்டமாக்கினால் இனி எவனும் இது போன்ற திரைப்படத்தை எடுக்கமாட்டான். போட்ட பணம் கூட வராது என்ற நிலையில் அது தடுக்கப்படும். ஆனால் அது ஆர்.எஸ்.எஸ், சிவசேனா போன்ற சங்பரிவாரின் செயல்.


ஆனால் முஸ்லிம்கள் அதை செய்யமாட்டார்கள் எனும் தைரியத்தில் தான் இவ்வாறு சினிமா எடுக்கப்படுகின்றது. அதுவும் அவர்கள் மீது அவதூறி கூறி. அராஜகம் செய்ய இஸ்லாத்தில் இடமில்லை. அதனால்தான் முஸ்லிம்கள் மௌனமாக இருக்கின்றனர். இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் வழக்குகள் தொடரப்பட வேண்டும். இந்த படம் தடைசெய்யப்பட வேண்டும்.


அத்துடன் இதற்கு அனுமதி வழங்கிய சென்சார் போர்டின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முஸ்லிம்களை நேரடியாக தாக்குவதையும் வன்முறையை ஊக்குவிப்பதையும் ஒருபோதும் அனுமதிக்கலாகாது. முஸ்லிம்களும் நடுநிலைவாதிகளும் சமூக ஆர்வலர்களும் அதற்கு முன்வர வேண்டும்.


நன்றி : உணர்வு



அ. நூருல் அமீன்

திங்கள், அக்டோபர் 19, 2009

வயர் இல்லா (wireless) எலக்ட்ரிசிட்டி

கையடக்கத்தொலைபேசி, WLAN போன்ற தொடர்பாடற்றுறையில் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த கம்பியில்லாத் தொழில்நுட்பம் இப்போது மின்னியலுக்கும் (Electricity) வந்துவிட்டது. விஞ்ஞானிகளின் இரண்டு நூற்றாண்டு கால ஆராய்ச்சியின் முடிவாக இப்போது வயரினைப் பயன்படுத்தாது மின்னைப்பாய்ச்சி மின் சாதனங்களை இயக்குவதில் வெற்றி கண்டுள்ளனர். கடந்த வருடமே (2008) இது சாத்தியமாகியுள்ளது.

60W உள்ள ஒரு மின்குமிழை 7 அடி தூரத்திலுள்ள ஒரு மின்சாதனத்திலிருந்து காற்று மூலமாக மின்னைப்பாய்ச்சி அதை பிரகாசமாக ஒளிரவும் செய்துள்ளனர். இவ்வாறு காற்றினூடு மின்னைப் பாய்ச்சுவதற்கு ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

வாயால சத்தம்போட்டு ஒரு கண்ணாடிக் குவளையை உடைக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். நாம் போடும் சப்தத்தின் அதிர்வெண்ணும், அந்தக் கண்ணாடிக்கவளைக்கு இருக்கின்ற அதிர்வெண்ணும் சமமா இருக்கும் போது இது நடைபெறும்.

இதை ஆங்கிலத்தில் Resonance என்று குறிப்பிடுவர். இதை தான் இங்கேயும் பயன்படுத்துகின்றனர்.

இரண்டு ஒரே மாதிரியான செப்புச் சுருள்களை எடுத்துக் கொண்டு. அதில ஒன்றை மின் சாதனத்திலயும், மற்றோன்றை மின்னோட தொடுத்து சுற்றிலும் பொருத்துகின்றனர்.

அது மின்னை மின்காந்த அலை வடிவில காத்தில பரவச்செய்கின்றது. அந்த அதிர்வெண்ணும், மின்சாரத்தில் இருக்கின்ற செப்புச் சுருளின் அதிர்வெண்ணும் சமமாக வரும் போது இரண்டு செப்புச் சுருளுக்கும் இடையில மின் காற்றினுடு பாய ஆம்பின்றது.

எதிர்காலத்தில இதப் பயன்படுத்தி, விண்ணில இருக்கிற Satelliteல இருந்து சூரியனோட ஒளியில இருந்து மின் எடுத்து பூமிக்கு அனுப்பலாம். சந்திரனில இருந்தும் மின் எடுக்கலாம் என கூறப்படுகின்றது.

இவ்வாறு மின்காந்த அலைகளை வளியினூடு கடத்தும்போது அதனால் மனிதனுக்கோ, ஏனய உயிரினங்களுக்கோ எந்தவித பாதிப்புக்களும் ஏற்படாது. இதுதொடர்பான மேலதிக தகவல்கள் அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.


நன்றி: www.tntj.net

ஞாயிறு, அக்டோபர் 18, 2009

நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் அக்டோபர் 2009 மாதக் கூட்டம்



அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அன்புடையீர்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.


16 அக்டோபர் 2009 அன்று ரியாத் மண்டலத்தில் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் அக்டோபர் 2009 மாத செயற்குழு கூட்டம் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். தாயகம் சென்று வந்த பொதுச் செயலாளர் அறங்கக்குடி ஹபிபுல்லா மற்றும் தனிக்கையாளர் நாகூர் இத்ரீஸ் ஆகியோர் நமது மாவட்டச் செயற்பாடுகளை பற்றி தெளிவாக விளக்கினார்கள். நமது தாயகச் செய்திகளை அறிவதில் கூட்டமைப்பு  உறுப்பினர்கள் பெரும் ஆவல் கொண்டிருந்தனர். அதன் பிறகு தங்களது கொள்கை முடிவுக்கு ஏற்ப பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் துஆவுடன் முடித்துக் கொள்ளப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.


சனி, அக்டோபர் 17, 2009

வெளிநாடுகளில் முறையான ஆவணம் இல்லாமல் இருக்கலாமா?








அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்புடையீர்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.




முன்னுரை

வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வோர் தன்னுடைய அடையாளச் சான்றுகளை பாதுகாப்பாகவும், எப்பொழுதும் தன்னுடனே இருக்கும்படி வைத்துக் கொள்வதில் அலட்சியமாக உள்ளனர். கல்வியறிவு இல்லாதவர்கள் சவுதி அரேபியா, துபாய் போன்ற வளைகுடா நாடுகளுக்குச் செல்வோர்களிடம் இப்படிபட்ட போக்கு அதிகம் காணப்படுகின்றது. அதிலும் குறிப்பாக தனது வேலை பார்க்கும் இடத்தை விட்டு சட்டவிரோதமாக வெளியேறி வேலை பார்ப்போர் தன்னுடைய அடையாளச் சான்றுகளை பாதுகாப்பது கிடையாது. இதனால் ஏற்படுகின்ற பிரச்னைகளை நாம் இங்கு காண்போம்.

ஆவணம் இல்லாமையால் ஏற்பட்ட இன்னல்கள்

கடந்த 04 அக்டோபர் 2009 அன்று மாலை சுமார் 4 மணிக்கு ரியாத் மண்டலத்தில் உள்ள நியு செனையா என்ற ஏரியாவில் உள்ள TNTJ கிளை சகோதரர்களுக்கு, சகோதரர் கமால் என்பவர் மூலம் போன் கால் வந்தது, நியு செனையாவிலிருந்த 20 கிலோமீட்டருக்கு அருகில் உள்ள ஓல்டு செனையா என்ற இடத்தில் நடந்த விபத்தில் ஒரு சகோதரர் இறந்து விட்டார் அவரிடம் அக்காமா (அடையாள அட்டை) இல்லை மேலும் கஃபீல் (முதலாளி) வந்து பார்க்க மறுக்கின்றார். எனவே, நீங்கள் வந்து உதவி செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில் TNTJ அமைப்பைச் சேர்ந்த எரவாஞ்சேரி ஹாஜா என்ற சகோதரரின் தலைமையில் ஒரு குழு புறப்பட்டு கஃபீல் வசிக்கும் இடமான அல் மாரியா என்ற இடத்திற்கு போய் கஃபிலிடம் பேசியதற்கு இறந்த சகோதரர் அமானத் அவர்கள் சவுதிக்கு புதியதாக வந்து 20 மாதமாகிறது, அவர் என்னிடம் இரண்டு மாதம் மட்டுமே வேலை பார்த்தார் அதன் பிறகு அவர் என்னிடம் இருந்து சட்டவிரோதமாக வெளியேறிவிட்டார், இதனால் நான் போலிஸில் புகார் கொடுத்து விட்டேன். இப்பொழுது நான் இதில் தலையிட முடியாது. எனவே, நீங்கள் எது பேசுவதாய் இருந்தாலும் போலிசிடம் பேசிக் கொள்ளவும் என கூறி எங்களை தவிர்க்க பார்த்தார். அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் TNTJ கிளை சகோதரர்களின் விடாமுயற்சியால் மிக நீண்ட விளக்கத்திற்கு பிறகு தனது சகோதரர் ஃபஹத் அலி சுலைமான் அல்கர்னி என்பவரை மறுநாள் அனுப்பி இது சம்பந்தமாக தேவையான உதவிகள் செய்வதாகக் கூறி எங்களை அனுப்பி வைத்தார்.

05 அக்டோபர் 2009 அன்று காலையில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யத் தேவையான ஆவணங்களை தயார் செய்வதற்காக ஓல்டு செனையா ஃபய்சல்யா போலீஸ் ஸ்டேசன், மலஸ் மரூர் போலீஸ் ஸ்டேசன், இந்தியத்தூதரக அலுவலகம் மற்றும் சுமேசி மருத்துவமனை ஆகிய இடங்களுக்கு அலைந்து அனைத்து பார்மாலிட்டிகளும் முடிப்பதற்கு 8 நாட்கள் ஆகிவிட்டது. அதன் பிறகு 13 அக்டோபர் 2009 அன்று அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அனைத்து ஏற்பாடுகளும் முடிக்கப்பட்டது. இதன் பிறகு இறந்தவரின் சொந்தங்கள் வரவேண்டும் என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தாமதித்து 15 அக்டோபர் 2009 (வியாழன்) அன்று மதியம் அஸருக்குப் பிறகு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்தவரின் பெயர் அமானத்துல்லாஹ், ஊர் வட கீரனூர் சங்கராபுரம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு சப்னா பானு என்ற மனைவியும், இரண்டு வயதில் அப்சர் என்ற மகனும் உள்ளார். அவருடைய மறுமை வாழ்வுக்காக துவாச் செய்யுங்கள். நல்லடக்கத்திற்கு வந்திருந்த சொந்தங்கள் ரியாத் TNTJ வின் உதவிகள் மற்றும் அவர்கள் ஆற்றிய பணிகளை பார்த்து மிகவும் பாராட்டினார்கள் மற்றும் நல்லடக்கத்தின் போது வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் அங்குள்ள சவுதிகளே பார்த்துக் கொண்டார்கள். இந்நேரத்தில் அச்சவுதிவாசிகளின் பணி எங்களுக்கு மன ஆறுதலைத் தந்தது. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.

நல்மனம் படைத்த முதலாளி

இந்த விஷயத்தை பொறுத்தவரை காலதாமதம் ஆனதற்க்கு ஸ்பான்சரின் அனுமதி இல்லாமலும், இக்காமா (அடையாள அட்டை) இல்லாமலும் வேலை பார்த்ததுதான் காரணம் ஆகும். இவ்வாறு இருந்தும் இறந்தவரின் கஃபில் அவரின் ஒரு மாதச் சம்பளம் மற்றும் இன்சூரன்ஸ் பணமும் வாங்கி தருவதாய் கூறி உள்ளார். ஜெசக்கல்லாஹூ ஹைர்.

விபத்திற்கான காரணம்

சம்பவம் நடந்த அன்று இறந்தவர் மெக்கானிக் என்பதால் 03 அக்டோபர் 2009 அன்று மாலை வழக்கம் போல் பெரிய டிரைலரை நிறுத்தி வேலை பார்த்து கொண்டு இருந்தார், அப்பொழுது உதவியாளர் கேரளாவைச் சேர்ந்த சாஜுவின் தவறுதலான அணுகு முறையால் ஆக்ஸிலேட்டரை அழுத்தி விட்டார் வாகனங்கள் நிறுத்துவதற்கான சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால் கிழே படுத்து பழுதுபார்த்துக் கொண்டு இருந்த சகோதரர் அமானத்துல்லாஹ்வின் தலையில் சக்கரம் ஏறி அங்கேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜூஊன். தற்போது அந்த உதவியாளர் சாஜு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார், தேவையான நஷ்ட ஈடு தரப்படும் வரையில் உதவியாளர் சாஜு ஜெயிலை விட்டு வரமுடியாது என்பது இன்றைய நிலை.

மெக்கானிக் மற்றும் ஓட்டுனர்களின் கவனத்திற்கு

நமது மெக்கானிக்குகள் மற்றும் ஓட்டுனர்கள் கவனக் குறைவாகவும், அலட்சியப் போக்காகவும் வாகனங்களை நிறுத்தும் போதோ அல்லது பழுது பார்க்கும் போதோ சக்கரத்தில் பாதுகாப்புக் கருதி எந்தவொரு தடுப்பும் (முட்டு) கொடுக்காமல் மேட்டுப்பாங்கான இடத்தில் ரிப்பேர் பண்ணுவது அல்லது வாகனத்தை நிறுத்துவதால், இது போன்ற விபத்துகள் நடக்க காரணமாய் அமைந்துவிடுகிறது. பொதுவாக இந்திய தொழிலாளிகள் வேலையின் போது முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து கொள்வது கிடையாது. மற்றும் சிலர் முறையான ஆவணங்கள் இல்லாமலும் வேலைப் பார்க்கின்றார்கள். முடிந்தவரை கண்டிப்பாக இதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

முடிவுரை

வெளிநாடுகளில் வேலை பார்க்கும் அனைத்து தொழிலாளிகளும் முறையான ஆவணங்களுடனும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும், சட்ட விரோதச் செயல்பாடுகளில் ஈடுபடாமல் வேலை பார்ப்பதனால் இப்படிப்பட்ட இன்னல்கள் இல்லாமல் நமக்குள்ள உரிமைகளைச் சரியாக பெறமுடியும். (அல்லாஹ் போதுமானவன்)

ரியாத்திலிருந்து அரசூர் ஃபாரூக்