பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் என்ற ஊரைச் சேர்ந்த 37 வயதான அன்வர்தீன் என்பவர் தையல் தொழில் செய்து வந்தார். இவருக்கு ஒரு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு, திடீரென வலது கை செயலிழந்து விட்டதால், தற்போது தொழில் செய்ய இயலாத சூழ்நிலையில் இருக்கிறார். இப்பொழுது இவரது மனைவிதான் கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார்.
இன்னிலையில் இவருக்கு, இருதய கோளாறு ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பதால், ரியாத் மண்டல நியூ செனையா கிளை மூலம் ரியாத் TNTJ வை அணுகினார். ரியாத் TNTJ மர்கஸில், கடந்த 16 அக்டோபர் 2009 வெள்ளிக்கிழமை அன்று நடந்த இஷா தொழுகைக்குப் பிறகான கூட்ட அமர்வில், கொள்கைச் சகோதரர்கள் உதவியளித்ததின் பேரில், அவருடைய உறவினர் கே. அக்பர் அலியிடம், ரூ 7000 மதிப்புக்கான சவூதி ரியாலை மருத்துவ உதவித் தொகையாக ரியாத் மண்டலம் சார்பில் வழங்கப்பட்டது.
மண்டலச் செயலாளர் சகோ. நூருல் அமீன் உதவித் தொகையை வழங்கினார். முன்னதாக, சகோ. மவுலவி இனாமுல் ஹசன் MISc அவர்கள் "ஷிர்க்கான (மவ்லூது) கவிதைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக