50 ஆண்டுகளாக மருத்துவச் சேவை செய்துவரும் மயிலாடுதுறையைச் சேர்ந்த மருத்துவருக்கு தொண்டு அமைப்புகள் பாராட்டு தெரிவித்தன.
மயிலாடுதுறை பட்டமங்கலத்தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் ராமமூர்த்தி. இவர் கடந்த 50 ஆண்டுகளாக ஒரே இடத்தில் மருத்துவச் சேவை செய்து வருகிறார். இவருடைய மருத்துவ கட்டணம் இரண்டு ரூபாயிலிருந்து பத்து ரூபாய் வரை மட்டுமே இவருடைய 50 வருட கால சேவையில் உயர்த்தப்பட்ட கட்டணமாகும். ஏழைகளைக் கண்டாலும், பழகியவர்களைக் கண்டாலும் இவர் அவர்களிடம் மருத்துவ கட்டணம் வாங்குவது இல்லை. மாதக்கணக்கில் உட்கொள்ளுமாறு மருந்துக்கள் தருவது இல்லவே இல்லை. இப்படிப்பட்ட மருத்துவரை எக்காலத்திலும் காண்பது இயலாது.
இவரது சேவையின் 50 -வது ஆண்டு நிறைவையொட்டி, மயிலாடுதுறையில் உள்ள சேவை சங்கங்கள், வர்த்தகர் சங்கம், இந்திய மருத்துவக் கழகம் மற்றும் தொண்டு அமைப்புகள் இவருக்கு பாராட்டு தெரிவித்தன.
நாமும் இவருக்கு பாராட்டு தெரிவிக்கலாமே.
டாக்டர் ராமமூர்த்தியின் தொலைதொடர்பு எண். 0091 4364 223461.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக