அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புடையீர்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
16 அக்டோபர் 2009 அன்று ரியாத் மண்டலத்தில் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் அக்டோபர் 2009 மாத செயற்குழு கூட்டம் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர். தாயகம் சென்று வந்த பொதுச் செயலாளர் அறங்கக்குடி ஹபிபுல்லா மற்றும் தனிக்கையாளர் நாகூர் இத்ரீஸ் ஆகியோர் நமது மாவட்டச் செயற்பாடுகளை பற்றி தெளிவாக விளக்கினார்கள். நமது தாயகச் செய்திகளை அறிவதில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பெரும் ஆவல் கொண்டிருந்தனர். அதன் பிறகு தங்களது கொள்கை முடிவுக்கு ஏற்ப பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கூட்டம் துஆவுடன் முடித்துக் கொள்ளப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக