தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நாகை (வடக்கு) மாவட்டச் செய்திகள் மற்றும் மக்கள் நலச்செய்திகளை இங்கு காணலாம்.
எதிர்வரும் நிகழ்ச்சிகள்
வியாழன், செப்டம்பர் 16, 2010
பெருநாள் திடல் தொழுகை
லேபிள்கள்:
நாகை (வடக்கு) மாவட்டம்
அரசூர் கிளையில் இஃப்தார் விருந்து
இஃப்தார் விருந்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் [வடக்கு] அரசூர் கிளையில் 05.09.2010, அன்று மாணவர் அணி ஏற்பாடு செய்த மாபெரும் இஃப்தார் விருந்து நடைபெற்றது மாலை ஐந்து மணிக்கு கிளை மாணவர் அணிச் செயளாலர் S.ஃபைஜுல் [DCE] தலைமையில் நடைபெற்றது. H.M.புகாரி மாவட்டத் தலைவர் நவீனகாலத்து இளைஞர்கள் என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் உரை நிகழ்த்தினார் ,சங்கரன்பந்தல்,மாகனாம்பட்டு, போன்ற இடங்களில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர் பார்பதற்கு கல்வி மான்கள் மட்டுமே பங்கேற்ற விருந்து போல் அமைந்திருந்தன அரசூர் கிளை சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தன A.அபுதாஹீர் [BBA] கிளை மா.அ.து.செயளாலர் நன்றி உரையுடன் நிறைவுற்றன அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் [வடக்கு] அரசூர் கிளையில் 05.09.2010, அன்று மாணவர் அணி ஏற்பாடு செய்த மாபெரும் இஃப்தார் விருந்து நடைபெற்றது மாலை ஐந்து மணிக்கு கிளை மாணவர் அணிச் செயளாலர் S.ஃபைஜுல் [DCE] தலைமையில் நடைபெற்றது. H.M.புகாரி மாவட்டத் தலைவர் நவீனகாலத்து இளைஞர்கள் என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் உரை நிகழ்த்தினார் ,சங்கரன்பந்தல்,மாகனாம்பட்டு, போன்ற இடங்களில் இருந்து மாணவர்கள் வந்திருந்தனர் பார்பதற்கு கல்வி மான்கள் மட்டுமே பங்கேற்ற விருந்து போல் அமைந்திருந்தன அரசூர் கிளை சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தன A.அபுதாஹீர் [BBA] கிளை மா.அ.து.செயளாலர் நன்றி உரையுடன் நிறைவுற்றன அல்ஹம்துலில்லாஹ்.
செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010
உணவுக்காக
உணவுக்காக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] மாவட்டத்தில் 20.08.2010 அன்று குவைத் சகோதரர் DR நூர்முஹம்மது தந்த ரூபாய் 3000, ஆயிரத்தை [சகர்.இஃப்தார்] உணவுக்கான தொகையாக மாவட்ட தலைவர் H.M.புஹாரி மயிலாடுதுறை சீனிவாசபுரத்தை சேர்ந்த உமர் அவர்களுக்கு வழங்கினார்.
லேபிள்கள்:
கல்வி உதவி,
செய்தி,
நாகை (வடக்கு) மாவட்டம்
இலவச கண் சிகிச்சை முகாம்
இலவச கண் சிகிச்சை முகாம்
புதுப்பட்டினத்தில் கடந்த 17.08.2010, அன்று தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] சீர்காழி நகரமும் புதுப்பட்டினம் கிளை மற்றும் நாகை மாவட்ட பார்வை இழப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பயன் அடைந்தனர் 20 து நபர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான எற்பாடு செய்யபட்டன மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுப்பட்டினத்தில் முதல் முறையாக அக்கு பஞ்சர் மருத்துவ முகாம்
புதுப்பட்டினத்தில் முதல் முறையாக அக்கு பஞ்சர் மருத்துவ முகாம்
செய்தி வெளியிடப்பட்ட நாள் Saturday, August 21, 2010, 20:12
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டத்தில் முதல் முறையாக கடந்த 17.08.2010, அன்று புதுப்பட்டினம் அரசு பள்ளியில் அக்கு பஞ்சர் மருத்துவ முகாம் நடைப்பெற்றது.
இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அக்கு பஞ்சர் முறை என்பது அனைத்து விதமான நோய்களையும் நாடி பார்த்து கண்டறிந்து உடம்பில் உள்ள சக்தியோட்ட பாதைகளை மூலம் சரி செயப்படுகிறது.
காந்த ஊசிகள் மூலம் காற்றலைகளிள் உள்ள மின் அலைகளை கொண்டு மருந்தில்லாமல் இறைவனின் நாட்டப்படி நோயை குணம் ஆக்குவதே அக்கு பஞ்ஜர் மருத்துவ முறையாகும்.
அக்கு பஞ்சர் மருத்துவ முறையில் மாவட்ட மருத்துவ அணி செயளாலர் DR ஜெகபர் சாதிக் இலவசமாக சிகிச்சை அளித்தார்.
நிகழ்ச்சியை புதுப்பட்டினம் மன்சூர் நல்ல முறையில் ஏற்பாடு செய்து இருந்தார். மாவட்ட நிர்வாகிகள் அரசூர் ஃபாரூக், நிஜாம், நகர நிர்வாகிகள் மஹ்ரூஃப் நசுரதீன் கிளை நிர்வாகிகள் அப்துல் ஹமிது ராஜா ஆகியோர் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டர். சீர்காழி நகரமும் புதுப்பட்டினம் கிளையையும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தன.
ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010
நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத் மண்டலம் - இஃப்தார் விருந்து
20 ஆகஸ்ட் 2010 அன்று மாலை 5 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டல மர்கஸில் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அல்லாஹ்வின் மாபெரும கிருபையால் நடைபெற்றது.
இக்கூட்டம் சகோ. ஏனங்குடி அலாவுதீன் அவர்களின் துவக்கவுரையுடன் துவங்கியது. இதில் நாகை மாவட்டச் சகோதரர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டமைப்பின் தலைவர், செயலாளர், 2 துணைச்செயலாளர்கள் பதவிகளுக்கு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வருகை தந்திருந்த அனைவருக்கும் இப்தார் ஏற்பாடு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது. மஃக்ரிப் தொழுகைக்குப்பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள்
தலைவர் சகோ. ஏனங்குடி அலாவுதீன்
செயலாளர் சகோ. எலந்தங்குடி பரித்
துணை செயலாளர்கள்
சகோ. சங்கரன்பந்தல் தவ்பிக் மற்றும் சகோ. கிளியனூர் ரஃபி
குறிப்பு:- இன்ஷா அல்லாஹ் அடுத்து செப்டம்பர் மாதக் கூட்டம் வழக்கம் போல் மாதத்தின் 3வது வாரம் வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் ரியாத் மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்தில் நடைபெறும். அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றது.
நாகை மாவட்டத் தவ்ஹீத் கூட்டமைப்பு
ரியாத். சவுதி அரேபியா.
செவ்வாய், ஆகஸ்ட் 17, 2010
நாகை (வடக்கு) TNTJ மர்க்கஸில் இஃப்தார் விருந்து
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] மயிலாடுதுறை மர்கஸில் கடந்த 12.08.2010, முதல் [இஃப்தார்] நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொள்கின்றனர் மயிலாடுதுறை சிறு வியாபாரிகள் மற்றும் கடை ஊளியர்களுக்கு மிகுந்த பயன் தருவதாக கூறுகின்றனர். இன்ஷா அல்லாஹ் நோன்பு 20, முதல் [சகர்] இரவு உணவும் ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
லேபிள்கள்:
மாவட்டச்செய்திகள்- ரியாத்திலிருந்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)