எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

ஞாயிறு, செப்டம்பர் 25, 2011

மயிலாடுதுறை கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சிங்காரவேல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 23.09.2011 அன்று மயிலாடுதுறை ரயில்வே காலனியை சேர்ந்த மாற்று மத சகோதரர் சிங்காரவேல் இஸ்லாம் மார்க்கத்தை உளபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.



அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், மாமனிதர் ,சொர்கம் நரகம், கொள்கை விளக்கம், தொழுகை சட்டங்கள், அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லாஹ் .




வியாழன், செப்டம்பர் 22, 2011

துளசியாபட்டிணம் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசியாபட்டிணம் கிளை சார்பாக கடந்த 4-9-2011 அன்று தர்பியா முகாம் நடைபெற்றது. இதில் மாவட்டதுணைச் செயலாளர் தலைமை தாங்கினார்கள்.

இதில் அரசூர், புதுபட்டினம், மாங்கனாம்பட்டு, மற்றும் துளசேந்திரபுறம் போன்ற கிளைகளிலிருந்து சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பொறையார் கிளையில் ரூபாய் 34350 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 150 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 34350 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.


வடகரை – அறங்கக்குடி கிளையில் ரூபாய் 32000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் வடகரை – அறங்கக்குடி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 163 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 32000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.




பொறையார் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.




அரசூர் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர்  கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

அரசூர் கிளையில் ரூபாய் 14950 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர்  கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 50 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 14950  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

துளசேந்திரபுரம் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.


மயிலாடுதுறை கிளையில் ரூபாய் 10000/- கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் கடந்த 2-9-0211 அன்று ஏழை மாணவனின் படிப்பு செலவிற்கு மாநில தலைமை மூலம் பெறப்பட்ட ரூபாய் 10000/- கல்வி உதவி வழங்கப்பட்டது.


மயிலாடுதுறை கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.




இதில் புஹாரி அவர்கள் உரையாற்றினார்கள்.




மயிலாடுதுறை கிளையில் ரூபாய் 25,975 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 110 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 25,975 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.




புதுபட்டினம் கிளையில் ரூபாய் 7500 மதிப்பில் ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் புதுபட்டினம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 30 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 7500 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

அரசூர் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கடந்த 27-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் பிதஹத்தும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.




மயிலாடுதுறை கிளையில் ரூபாய் 2 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக இன்று (22-08-2011) சகோதரி காயத்திரி அவர்களுக்கு கல்வி உதவியாக ரூ .2000/- வழங்கப்பட்டது.







மயிலாடுதுறை கிளையில் கேபில் டிவி கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 17-8-2011 புதன் அன்று சிறப்பு கேபில் டிவி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் கேள்விகள் கேட்டனர் அதற்கு மாநில செயலாளர் அஸ்ரபுதீன் பிர்தௌசி அவர்கள் பதில் அளித்தார்கள்.




புதன், ஆகஸ்ட் 17, 2011

மயிலாடுதுறை கிளையில் ரமளான் சிறப்பு தொடர் சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.

கடந்த 13-8-2011 அன்று நடைபெற்ற சொற்பொழிவில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு ஏகத்துவம் வளர்ந்த வரலாறு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்!

வடகரை-அறங்கக்குடி கிளையில் ரூபாய் 15 ஆயிரம் மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை வடக்கு மாவட்டம், வடகரை-அறங்கக்குடி கிளை சார்பாக கடந்த 11-8-2011 அன்று ஏழை சகோதரியின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 15 ஆயிரம் மருத்துவ உதவி வழங்கப்பட்டது.


மயிலாடுதுரை கிளையில் ரூபாய் 1750 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுரை கிளையில் கடந்த 3-8-2011 அன்று ரூபாய் 1750 மதிப்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்பட்டது.


மயிலாடுதுறையில் புத்தகம் விநியோகம் & சஹர் நேர ஸ்டிக்கர் விளம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் கடந்த 1-8-2011 அன்று தராவீஹ் ஒர் ஆய்வு என்ற புத்தம் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. இதில் 100 புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் கடந்த 2-8-2011 மெகா டிவி ரமளான் சஹர் நேர நிகழ்ச்சி குறித்து ஆட்டோ விளம்பர ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.



மயிலாடுதுறை கிளையில் கேபில் டிவியில் ஏகத்துவ நிகழ்சசிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 1-7-2011 அன்று முதல் ரமளான் மாதம் முழுவதும் உள்ளுர் கேபில் டிவி தொலைக்காட்சியில் பி.ஜே அவர்கள் ஆற்றிய இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி மதியம் 1 மணி முதல் 2 மணி வரை ஒளிபரப்பப்படுகின்றது

அரசூர் கிளையில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் கடந்த 31.07.2011 அன்று பெண்கள் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

அல்-நூர் மதரஸா முதலாம் ஆண்டு மாணவி ஆயிஷா இறையச்சம் என்ற தலைப்பிலும், அதைத் தொடர்ந்து ஜன்னத் நிஷா ஆலிமா நோன்பு என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினார்கள்.

இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

மயிலாடுதுறை கிளையில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளையில் கடந்த 23 ஜூலை 2011 அன்று மாலை 6 மணிக்கு கூறைநாடு சின்னப்பள்ளிவாசல் தெருவில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
சகோதரி நசீம் பானு.M.A.,B.Ed.,M.Phil., அவர்கள் கலந்துக்கொண்டு இறையச்சம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

வடகரை-அறங்கக்குடி கிளையில் இலவச நோட்டு புத்தகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் வடகரை-அறங்கக்குடி கிளையில் கடந்த 23 ஜூலை 2011 அன்று ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி அதை தொடர்ந்து பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஜன்னத் நிஹா அவர்கள் ”கல்வியில் சிறந்தது? உலகக் கல்வியா?
மார்க்கக் கல்வியா?” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
மேலும் தொலைபேசி மூலம் ”பித்அத் ஒரு கேடு” என்ற தலைப்பில் சகோதரர் கபுர் மிஸ்பாஹி உரையாற்றினார்கள்.
மற்றும் தாசின் என்ற சிறுவன் ”இன்றைய பெண்களின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
52 ஏழை மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.


நாகை வடக்கு எலந்தங்குடி பகுதியில் TNTJ வின் புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் எலந்தங்குடி பகுதியில் கடந்த 17-7-2011  அன்று TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.





புதுபட்டினம் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் புதுபட்டினம் கிளையில் 23-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.



புதன், ஜூலை 20, 2011

பொறையார் கிளை மணிகண்டன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 16 07 2011 அன்று மணிகண்டன் என்ற மாற்று மத சகோதருக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்காக திருக்குரான் தமிழாக்கமும், மார்க்க விளக்க புத்தகங்களும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


திங்கள், ஜூலை 11, 2011

அரசூர் கிளையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு அரசூர் கிளையில் கடந்த 03.07.2011 அன்று மாவட்ட தலைவர் தலைமையில் தர்பியா முகாம் நடைபெற்றது.




அரசூர் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தொழுகை விளக்க முறை. ஏகத்துவம் என்றால் என்ன? கேள்வி பதில் நிகழ்ச்சி மற்றும் இஸ்லாத்தில் உள்ள பித்அத்தான விசயங்கள் குறித்து கோட்டைபட்டினம் சகோ.மஃதூம் வகுப்பு எடுத்தார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.


பொறையார் கிளையில் ரூபாய் 3 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 18-6-2011 மற்றும் 19-6-2011 ஆகிய தேதிகளில் ஏழை மாணவி ஒருவரக்கு ரூபாய் ஆயிரமும் ஏழை மாணவன் ஒருவனுக்கு ரூபாய் 2 ஆயிரமும் கல்வி உதவி வழங்கப்பட்டது.

பொறையார் கிளையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 22-6-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் இப்ராஹீம் உமரி , முஹம்மது தீன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் வாங்கிய வரதட்சனையை இறைவனுக்கு அஞ்சி பெண் வீட்டாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.




மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தம் வழங்கும் நிகழ்ச்சி , கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



சகோதர சகோதரிகள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.
 
 


மயிலாடுதுறையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த 27-6-2011 அன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ அப்துல் கபூர் மிஷ்பாஹி அவர்கள் உரையாற்றினார்கள்.




மேலும் கடந்த 25-6-2011 அன்று நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்தில் அப்துல் கபூர் மிஷ்பாஹி இஸ்லாமிய அடிப்படை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.



துளசேந்திரபுரம் கிளையில் எளிய மார்க்கம் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 18-6-2011 அன்று கொள்ளிடம் M.S. திருமண மண்டப்பத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கேள்விகளுகுக்கு சகோ. பக்கீர் முஹம்மது அல்தாபி பதில் அளித்தார்கள். மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.


மேலும் உம்முள் மு.’.மினீன் பெண்கள் கல்வியகத்தில் பயின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோடைக்கால பயிற்சி முகாமில் பயின்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
 



ஞாயிறு, ஜூன் 19, 2011

வாணாதிராஜபுரம் கிளைக்கு மைக்செட், ஸ்பீக்கர், ஆம்ளிபயர் அன்பளிப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை (வடக்கு) வாணாதிராஜபுரம் கிளைக்கு கடந்த 12-06-2011 அன்று மைக்செட், ஸ்பீக்கர் மற்றும் ஆம்ளிபயர் வாங்கி அன்பளிப்பு செய்யப்பட்டது. இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை கூட்டமைப்பு (ரியாத்) 7700 ரூபாய் நிதியுதவி அளித்தது.

நாகை வடக்கு மாவட்ட பொதுக்குழு

2011 ஆம் வருடம் ஜூன் மாதம் 11 தேதி மாலை 5 மணிக்கு பொறையார் TNTJ மர்கசில் நாகை வடக்கு மாவட்ட பொதுக்குழு மாநில துணைத்தலைவர் கோவை அப்துர் ரஹீம் தலைமையிலும் மாநில பிரதிநிதி தௌபீக் முன்னிலையிலும் நாகை வடக்கு  மாவட்ட பொதுக்குழு  நடைப்பெற்றது. அதுசமயம் தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகள் விபரம்

தலைவர் : சீர்காழி முஹம்மத் நாசர் - 9842063511


செயலாளர் : வடகரை முஹம்மத் இப்ராகிம் - 9786371146

பொருளாளர் : மங்கனாம்பட்டு நிஜாமுதீன் - 9787154700

துணைத்தலைவர் : ஆயப்பாடி அப்துல் ஹமீது - 9865068438

துணைசெயலாளர் : பொறையார் தமீமு அன்சாரி - 9952193717

துணைசெயலாளர் : துளசெந்திரபுரம் ராஜா முஹம்மத் - 9943319560

மருத்துவ சேவை அணி செயலாளர் : கிளியனூர் முஹம்மத் இயாஸ் - 9715022009

மாணவரணி செயலாளர் : கடலங்குடி முஹம்மத் பாசில் - 9940828257

பொறையார் கிளையில் இரத்த தான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 12 06 2011 அன்று இரத்த தான முகாம் மற்றும் இரத்த பிரிவு கண்டறியும் முகாம் நடைபெற்றது. இதில் 31 சகோதரர்கள் ரத்த தானம் செய்தனர்.

பொறையார் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளை சார்பாக கடந்த 4 06 2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.




இதில் மேலகாவேரி அந்நூர் மதரசா ஆலிமாக்கள் கலந்துக் கொண்டு மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினர். மேலும் ஜனாஸா தொழுகை பயிற்சியும் வழங்கப்பட்டது. பெண்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.



சங்கரன்பந்தல் கிளையில் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சங்கரன்பந்தல் கிளையில் கடந்த12.06.2011, அன்று JR கோல்டன் திருமண மஹாலில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது




இதில் முஸ்லிம்களின் கேள்விகளுக்கு மேலாண்மை குழு உறுப்பினர் M.அப்பாஸ் அலி Misc பதில் அளித்தார். இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !



 

கல்வி உதவி

தமிநாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் திருமங்கலத்தை சார்ந்த ஏழை சகோதரருக்கு மாவட்டம் சார்பாக கடந்த 03.06.11 அன்று ரூபாய் 15 ஆயிரம் கல்வி உதவி வழங்கப்பட்டது.

இஸ்லாம் தீவிரவாதத்தை வழர்க்கிறதா? நோட்டீஸ் வினியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டத்தில் கடந்த1-6-2011 அன்று இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா என்ற நோட்டிஸ் 2, ஆயிரம் மாற்று மதத்தினர் மற்றும் சமுதாய சகோதரர்களிடம் விநியோகம் செய்யப்பட்டது

சனி, மார்ச் 19, 2011

குத்தாலம் கிளையில் நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் குத்தாலம் கிளையில் கடந்த 04-03-2011 அன்று நபி வழி ஜும்ஆ தொழுகை ஆரம்பமானது. இதில் மாவட்ட தலைவர் தொழுகை நடத்தினார்கள்.

இதில் ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

திருவாளபுத்தூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் திருவாளபுத்தூர் கிளையில் கடந்த 06.03.2011 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, மார்ச் 06, 2011

துளசேந்திரபுரம் கிளையில் இலவச கண் சிகிச்சை முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 22.02.2011, அன்று நாகை மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணைந்து நடத்திய இலவச கண்சிகிச்சை முகாமில் 170 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.




13 நபர்களுக்கு அறுவை சிகிச்சைகான ஏற்பாடு செய்யப்பட்டது. DR. பூபேஸ் மற்றும் அவரது குழுவினர் நல்ல முறையில் ஒத்துழைப்பு நல்கினர்.



மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் ஜகபர் சாதிக், வந்திருந்த அனைவருக்கும், அக்கு-பஞ்சர் முறையில் இலவசமாக மருத்துவம் செய்தார்கள்.



ஊராட்சி ஒன்றிய தலைவர் எஹ்சான் பீவி கமாலுதீன், மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




குத்தாலம் கிளையில் TNTJ வின் புதிய மர்க்கஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை வடக்கு மாவட்டம், குத்தாலம்  கிளையில் கடந்த 27.02.2011 அன்று புதிய மர்கஸ் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் கோவை R. ரஹமத்துல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு ஏகத்துவ எழுச்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


மேலும் இதில் மாவட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





செவ்வாய், மார்ச் 01, 2011

நாகை வடக்கில் ரூபாய் 1500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மல்லியத்தை சேர்ந்த ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு கடந்த 25.02.2011 அன்று 1500 ரூபாய் வழங்கப்பட்டது.

இதை மாவட்ட செயலாளர் வழங்கினார்கள்.

உயிருடன் இருந்தவரை பிணவரைக்கு கொண்டு சென்ற மருத்துவர்கள் – களமிறங்கிய நாகை வடக்கு TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமணையில் SS நல்லூரை சார்ந்த மாற்று மத சகோதரர் மாணிக்கத்திற்கு கடந்த 21.02.2011, அன்று நடந்த அவலம் இனி யாருக்கும் நடக்ககூடாது.




மாணிக்கம் இறந்து விட்டார் எனக் கூறி மருத்துவர்கள் அவரை பிணவரைக்கு கொண்டு சென்று விட்டனர்.  இச்செய்தியை TNTJ சகோதரர்கள் அறிந்து மருத்துவமணையின் பிணவரை சென்று பார்த்தபோது, முக்கல் முனங்களுடன் கிடந்த மாணிக்கத்தின் அவல நிலையைக் கண்டு கரையாத மணமும் கலங்கிவிடும்.



அவரை அங்கிருந்து அப்புறபடுத்தி, வார்டுக்கு கொண்டுவந்து மேற்கொண்டு மருத்துவத்திற்கான ஏற்பாட்டை செய்ய நம் சகோதரர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து மாணிக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நிதானத்திற்கு வந்தார்.



இனி என்னை இங்கு வைத்து இருந்தீர்கள் என்றால் என்னை இந்த பாவிகள் பிணமாகத்தான் அனுப்புவார்கள் என்று கூறி மாணிக்கம் பயந்தார்.  ஆகையால், அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து கும்பகோணம் மருத்துவமணைக்கு நம் சகோதரர்கள் அவரை அனுப்பி வைத்தனர். புகழ் அனைத்தும் ஏகனுக்கே.



மருத்துவமணையின் டீனை சந்தித்து கேட்டபோது, இனி இதுபோல் நடக்காது என்று வழக்கமான பல்லவியையே பாடினார். தொடர்ந்து இதுபோன்று மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமணை ஊழியர்கள் திருந்தவில்லை எனில், உங்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராடும் நிலையை உறுவாக்காதீர்கள் என எச்சரிக்கப்பட்டது.



வியாழன், பிப்ரவரி 24, 2011

திருவாடுதுரையில் தர்பியா முகாம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக  திருவாடுதுரையில் கடந்த 20 -2 -2011 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில செயலாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு  ஜனாசாவின் சட்டங்கள் பற்றி விரிவாக உரை ஆற்றினார்கள் . ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

புதன், பிப்ரவரி 23, 2011

நாகை மாவட்டத் தவ்ஹீத் கூட்டமைப்பு பிப்ரவரி கூட்டம் ரியாத்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 18.02.2011 அன்று நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திரக் கூட்டம், சகோ. அரசூர் பாருக் அவர்கள் துவக்கவுரையுடன் மாலை 5:00 மணிக்கு TNTJ ரியாத் மண்டல மர்கஸில் துவங்கியது. எதைச் செய்தாலும் ஈடுபாட்டோடு செய்ய வேண்டும் என்பது பற்றி விளக்கமாக உரை நிகழ்த்தினார்கள்.




சென்ற மாத மினிட் மற்றும் நாகை வடக்கிலிருந்து வந்தி்ருந்த செயல்பாடுகள் குறித்த செய்திகள் கூட்டமைப்பின் செயலாளர் சகோ. ஃபரீத் அவர்கள் வாசித்தார்கள். இதில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, மாணவிகளை கல்விக் கூடத்திற்கு அனுப்ப வேண்டாம் என்ற நோட்டீஸ் வினியேகிக்கப் பட்டது என்று அறிந்தோம். இனி வரும் காலங்களில் மாணவர்களையும் கண்காணிக்க வேண்டும் என்ற வாசகத்தை இந்த நோட்டிஸில் குறிப்பிட வேண்டும் என்ற யோசனையும் முன் வைக்கப்பட்டது.



நாகை மாவட்ட வளர்ச்சி குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.



மஃக்ரிபு தொழுகைக்குப் பின், இக் கூட்டம் இனிதே துவாவுடன் நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.....

செவ்வாய், பிப்ரவரி 22, 2011

பொறையார் கிளையில் ரூபாய் 28 ஆயிரம் மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் பொறையார் கிளையில் கடந்த 18-2-11 அன்று ஏழை சகோதரரின் குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 28171 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.