எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2009

ரம்ஜான் நோன்பும் சர்க்கரை நோயும்!!

ரம்ஜான் நோன்பும் சர்க்கரை நோயும்!!


சமீபத்தில் நான் இணையத்தில் உலவும்போது கிடைத்த ஒரு நல்ல பதிவை உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன்.


சக்கரை நோயாளிகள் ரம்ஜான் நோன்பு வைக்கலாமா என்று பொதுவாகப் பலரும் கேட்கிறார்கள்.

இஸ்லாமியரின் வாழ்வில் மிக முக்கியமான கடமையாக புனித ரமலான் நோன்பு கருதப்படுகிறது. ரமலான் நோன்பு வைக்கும் சக்கரை நோயாளிகள் பற்றிப் பார்ப்போம்.

நோன்புக் காலத்தில் பகலில் உணவு உட்கொள்ளாது மாலையில் சாப்பிடுகிறார்கள். மீண்டும் காலையில்(சூரிய உதயத்திற்கு முன்பு) உணவு உட்கொள்கிறார்கள்.

பகலில் உண்ணாநோன்பு இருக்கும்போது உடலுக்கு சக்தி எவ்வாறு கிடைக்கிறது? நாம் சாப்பிடும் உணவானது உடலின் சரக்கு அறை போல் செயல்படும் கல்லீரலில் கிளைக்கோஜன் என்ற பொருளாக சேமித்து வைக்கப்படுகிறது. மேலும் உடலில் கொழுப்பாகவும் சேர்த்துவைக்கப்பட்டுள்ளது. நோன்பு இருக்கும் காலத்தில் இந்த சேமிப்புகளில் இருந்து உடல் பெற்றுக்கொள்கிறது. உடல் கொழுப்புக்கள் கூட சக்கரையாக மாற்றப்பட்டு உடலுக்கு சக்தியளிக்கிறது.

சக்கரை அதிகம் உள்ளவர்களுக்கு நோன்பின்போது உடலில் உள்ள சக்தி உபயோகப் படுத்தப்படுகிறது. உடலில் சேமித்து உள்ள கொழுப்புகளும் குறைகிறது.

1. நீண்ட நேரம் வேலை செய்யும் சக்கரை குறைப்பு மாத்திரைகள் நோன்பு நேரத்தில் சக்கரையை மிகவும் குறைத்துவிடுவதால் உண்ணக்கூடாது.

2.இன்சுலின்களும் சக்கரையை மிகவும் குறைத்துவிடும்.

3.குறைந்த நேரம் செயல்படும் புதிய வகை மத்திரைகள் உபயோகிக்கலாம்.

4.சக்கரை அதிகமானால் மட்டுமே செயல்படும் மாத்திரைகளை உபயோகிக்கலாம்.

5.சாப்பிட்டவுடன் அதிகமாகும் சக்கரையைக் குறைக்கும் இன்சுலின்கள் உபயோகிக்கலாம்.

மேலும் தகுந்த மருத்துவரிடம் உடல் பரிசோதனை, உணவுமுறைகள் பற்றிய ஆலோசனை பெற்று ரமலான் நோன்பைக் கடைப்பிடிக்கலாம்.

தகவல் அளித்தமைக்கு டாக்டர் அவர்களுக்கு நன்றி:

ஆக்கம் : டாக்டர் தேவக்குமார் (தமிழ்த்துளி)

ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்...

திங்கள், ஆகஸ்ட் 24, 2009

நாகை மாவட்ட தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்!

ரியாதில் நடைபெற்ற ரியாத் வாழ் நாகை மாவட்ட தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்!

ரியாதில் நடைபெற்ற ரியாத் வாழ் நாகை மாவட்ட தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்!ரியாதில் நடைபெற்ற ரியாத் வாழ் நாகை மாவட்ட தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்!ரியாதில் நடைபெற்ற ரியாத் வாழ் நாகை மாவட்ட தவ்ஹீத் சகோதரர்கள் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம்!


















21 ஆகஸ்ட் 2009 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டல மர்கஸில் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் மாதாந்திர செயற்குழு கூட்டம் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் நடைபெற்றது.

இக்கூட்டம் கூட்டமைப்பின் தலைவர் அரசூர் ஃபாரூக் தலைமையில் நடந்தது, அதில் தாயகத்திலிருந்து வந்திருக்கும் இனாமுல் ஹசன் MISc அர்சின் நிழலில் என்றத் தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அல்லாஹ்வின் அர்சின் நிழல் வேண்டும் என்றால் எவ்வாறு வாழவேண்டும் என்றும், இந்த ரமளானில் இறை அச்சத்தோடு எப்படியெல்லாம் நமது நல் அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மிகத்தெளிவாக விளக்கிக் கூறினார்.

அதன் பிறகு துணைச் செயலாளர் எலந்தங்குடி ஃபரீத் ஊரில் இருந்து வந்த கடிதங்களையும் தற்போது உள்ள செயல்பாடுகள் குறித்து தெளிவாக விளக்கினார்.

பொருளாளர் மயிலாடுதுறை சாகுல் ஹமிதுமாதாந்திர வரவு, செலவு கணக்குகளை வாசித்தார். இரவு 8 மணிக்கு துஆவுடன் கூட்டம் இனிதே முடிவடைந்தது.

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2009

ஆர்எஸ்எஸ் சந்தர்ப்பவாத அமைப்பாகிவிட்டது-ஜஸ்வந்த் சிங்.

Sunday, August, 2009
ஆர்எஸ்எஸ் சந்தர்ப்பவாத அமைப்பாகிவிட்டது-ஜஸ்வந்த் சிங். டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி:

ஜின்னா குறித்து அத்வானி என்ன சொன்னார். அதையே தான் என் புத்தகத்திலும் கூறியிருக்கிறேன். இதில் அத்வானிக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா?.

புத்தகம் எழுதியதற்காகத் தான் என்னை நீக்கினார்களா.. அல்லது வேறு காரணமா என்றெல்லாம் நான் யோசித்து நேரத்தை வீணாக்க விரும்பவி்ல்லை.

என்னை கட்சியைவிட்டு நீக்கி என்னை சிறுமைப்படுத்த முயன்றுள்ளனர். இதன்மூலம் கட்சியும் சிறுமைப்படுத்தப்பட்டதை அவர்கள் உணர வேண்டும்.


மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்றவுடன் நான் கட்சித் தலைமைக்கு எழுதிய கடிதத்தில், ''இந்துத்துவா என்றால் என்ன?, இந்துத்துவா என்ற பெயரில் நாம் எதை மக்களிடம் முன் வைக்கிறோம்? என்று கேள்வி எழுப்பியிருந்தன். கட்சி இப்படியே செயல்பட்டால் இனிமேல் கட்சி மிதமானவர்களிடம் இருக்காது. தீவிர மத சிந்தனை உடையவர்கள் வசம் போய்விடும் என்று அஞ்சுகிறேன் என்று கூறியிருந்தேன். இன்னும் நிறைய எழுதியிருந்தேன். அந்தக் கடிதத்தை இப்போது பொது மன்றத்தில் வெளியிடும் நேரம் வந்துவிட்டதாகக் கருதுகிறேன்.

இந்தக் கடிதத்தை நான் பாஜக தலைமையிடம் தந்தபோது, தேர்தல் தோல்வி குறித்து ஆராயக் கூடும் கூட்டத்தி்ல் இது குறித்து விவாதிப்போம் என்றனர். ஆனால், அந்தக் கூட்டத்தைக் கூட்டிய முதல் நாளிலேயே என்னை கட்சியை விட்டு நீக்கியுள்ளனர். இதன்மூலம் தோல்வி குறித்து விவாதிப்பதை தவிர்க்கின்றனர் என்பது புரிகிறது.

ஜின்னா குறித்து புத்தகம் எழுதுவதை அத்வானி, ராஜ்நாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரிடம் நான் முன்பே சொல்லிவிட்டேன். ஆனால், மக்களவைத் தேர்தல் முடியும் வரை அதை வெளியிடாதீர்கள் என்றனர். இதனால் நான் புத்தகம் எழுதியது இவர்களுக்குத் தெரியாது என்பதில்லை.

பாஜக மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ்சும் நிறைய மாறிவிட்டது. ஆட்சியில் இருந்ததால் பாஜகவுக்கு அதிகார போதை ஏறியது. அதே போல ஆர்எஸ்எஸ்சுக்கும் அதிகாரத்தில் ஆசை ஏறிவிட்டது. காரணம், ஆர்எஸ்எஸ் சங் சாலக், பிரபாகாரி ஆகியவர்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டத்திலும் நிர்வாகப் பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. இந்தப் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு அதிகார போதை வந்துவிட்டது. சந்தர்ப்பவாதிகளாக ('Suvidhavadi') மாறிவிட்டனர்.

உண்மையைச் சொன்னால், ஆர்எஸ்எஸ்சும் கிட்டத்தட்ட பாஜக போலவே மாறிவிட்டது. இதனால் தேர்தல் தோல்வி குறித்து பாஜக மட்டுமல்ல ஆர்எஸ்எஎஸ்சும் ஆராய வேண்டும். இதை அத்வானியிடம் மட்டுமல்ல, மோகன் பகவத்திடமே சொல்லியிருக்கிறேன்.


நான் எந்தக் காலத்திலும் ஆர்எஸ்எஸ்சில் இருந்ததில்லை. அவர்களைப் பொறுத்தவரை நான் வெளி ஆள். 15 வயதில் ராணுவத்தில் சேர்ந்தவன். தேசத்தையும் மக்களையும் நேசித்தவன். தவறு செய்தவர்களிடம் கேள்விகள் கேட்டதால் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளேன். இனி கட்சி நன்றாக வளரும் என்று அவர்கள் நினைத்தால், அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.

என்ன தான் சொல்கிறார் ஜஸ்வந்த் ஜின்னாவை பற்றி...........

இந்தியாவும், இந்தியர்களும் முழுமையாகவே ஜின்னா குறித்து தவறான கருத்தை வைத்துக்
கொண்டிருக்கிறோம். யாராவது ஒருவர் மீது பழியைப் போட வேண்டுமே என்பதற்காக
ஜின்னாவை பழித்துக் கொண்டிருக்கிறோம். இது தவறானது என்று பாஜகவலிருந்து
நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.


நேற்றுசிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியில் கரன் தாப்பரின் 'டெவில்ஸ் அட்வகேட்'
நிகழ்ச்சியில் ஜஸ்வந்த் சிங் அளித்துள்ள பேட்டியின் சில முக்கிய
பகுதிகள்...


ஜின்னாசுதந்திர இந்தியாவுக்காக இங்கிலாந்து ஆட்சியாளர்களை எதிர்த்து தீவிரவமாக
போராடியவர். அதேசமயம், இந்தியாவில் உள்ள முஸ்லீம்களின் நலனுக்காகவும்
போராடினார். அதற்காக இந்துக்களை ஜின்னா ஒருபோதும் வெறுத்ததில்லை.


அவர் ஒருபோதும் இந்துக்கள் மீது துவேஷம் கொள்ளவே இல்லை. காங்கிரஸ் கட்சியுடன்
மட்டுமே அவருக்கு கருத்து வேறுபாடு இருந்தது. இதை தனது கடைசிக்காலத்தில்
வெளியிட்ட அறிக்கைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலும்
அவர் தெளிவுபடத் தெரிவித்துள்ளார்.


மகாத்மா காந்தியுடன்தான் அவருக்கு மிகப் பெரிய கருத்து வேறுபாடு இருந்தது.
காந்தியை ஒரு அரசியல் சுயநலவாதி என்று அவர் விமர்சித்துள்ளார்.


ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ்
கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும்
தாண்டி அவர் உயர்ந்து நின்றார். உண்மையில் இவர்கள் இருவருமே ஜின்னாவை
விரும்பாதவர்கள்.


ஜின்னாவிடம் பல விஷயங்கள் எனக்குப் பிடிக்கும். அவர் சுயமாக வளர்ந்தவர். எந்தவித
பின்னணியும் இல்லாமல் கடுமையாக உழைத்து வளர்ந்தவர். ஆனால் காந்தி அப்படி
அல்ல. அவர் ஒரு திவானின் மகன்.


அதேபோல நேரு மிகப் பெரிய கோடீஸ்வரரின் வாரிசு. அவர்கள் எல்லாம் பெரும்
பணக்காரர்கள். ஆனால் ஜின்னா அப்படி அல்ல. தானே முயன்று, கடுமையாக உழைத்து
தனக்கென ஒரு அரசியல் வரலாற்றை படைத்தவர் ஜின்னா.


அவ்வளவு பெரிய மும்பையில், பரம ஏழையாகத்தான் அவரும் வாழ்ந்தார். அங்கு அவர்
தாக்குப்பிடிக்க காரணம் அவரது மன வைராக்கியம் மற்றும் கடுமையான
முயற்சிகளே.


மும்பையில் அவர் வாட்சன்ஸ் ஹோட்டலின் மொட்டை மாடியில் தான் ஒரு அறையில்தான் தங்கியிருந்தார்.


ஜின்னா என்றில்லை, சுயமாக உயர்ந்த, கடுமையாக உழைக்கக் கூடிய யாரையும் நான் பாராட்டவே செய்வேன், அவர்களை மதிப்பேன்.


1946ல் நடந்த தேர்தலில் ஜின்னாவின் முஸ்லீம் லீக் கட்சி அனைத்து முஸ்லீம்
தொகுதிகளிலும் வென்றது. ஆனால் அவர்களால் ஆட்சியில் அமர முடியாத நிலை.
காரணம், காங்கிரஸ் கட்சி ஒரு முஸ்லீம் வேட்பாளரைக் கூட நிறுத்தாமல்
பெரும்பாலான இடங்களில் வென்றிருந்தது. எனவே முஸ்லீம் லீக்கால் ஆட்சியில்
இடம் பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் அவர் தேர்தலில் நின்றால் மட்டும்
போதாது என்பதை ஜின்னா உணர்ந்தார்.


முஸ்லீம்களுக்கும் ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்பதை காங்கிரஸுக்கும் உணர்த்தினார்.
இதையடுத்தே இடஒதுக்கீடு உத்தரவாதம் தரப்பட்டது. முதலில் 25 சதவீதம் என்று
அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடு பின்னர் 33 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் இது
சரிவர கடைப்பிடிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டப்பட்டது, இது தான் நாடு
பிளவுபடக் காரணமானது.


நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும்
ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா
அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.


முஸ்லீம்களுக்கு அதிகாரம் வழங்க காந்தி ஒப்புக் கொண்டார். ஆனால் அதை நேரு விரும்பவில்லை.
இந்தியா பிரியும் வரை தனது கருத்தில் நேரு உறுதியாகவும், பிடிவாதமாகவும்
இருந்தார்.


இந்தத் தவறை பின்னால்தான் நேரு உணர்ந்தார், அதை ஒப்பும் கொண்டிருக்கிறார்.
இந்தியா இரண்டாகப் பிரிந்ததற்கு நேருவும், அதேபோல ஜின்னாவும்தான் முக்கிய
காரணம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.


இதை நான் குற்றச்சாட்டாக கூறவில்லை. உண்மையைப் பதிவு செய்கிறேன். அந்த
சமயத்தில் என்ன நடந்தது, எந்தச் சூழ்நிலை பிரிவினைக்கு இட்டுச் சென்றது
என்பதைக் கூறுகிறேன்.


எனது கருத்து என்னவென்றால் ஜின்னா மட்டுமே பிரிவினைக்குக் காரணம் அல்ல. அப்படிப்பட்ட கருத்தை நாம் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே.


மேலும் ஜின்னா பாகிஸ்தான் என்ற வார்த்தையை நெடுங்காலத்திற்கு பயன்படுத்தவில்லை.
முஸ்லீம்களுக்கு தனி இடம் வேண்டும் என்று மட்டுமே கோரினார். சில
மாகாணங்களை முஸ்லீம்களுக்காக ஒதுக்க வேண்டும். அவை இஸ்லாமிய மாகாணங்களாக
இருக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும், இந்திய நாடாளுமன்றத்தில்
மூன்றில் ஒரு பங்கு முஸ்லீம்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றார்.


சிறுபான்மையினருக்கும் அதிகாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தால்தான் பொருளாதார ரீதியாக,
அரசியல் ரீதியாக, சமுதாயத்தில் கெளரவத்துடனும், அதிகாரத்துடனும் இருக்க
முடியும் என அவர் நினைத்தார்.


அதுதான் அவரது முதன்மையான நோக்கமாக இருந்ததே தவிர பிரிவினை அவரது முதல் எண்ணமாக
இல்லை. அதாவது இந்தியாவுக்குள் சுயாட்சி கொண்ட ஒரு பாகிஸ்தானையே அவர்
விரும்பினார். அந்தக் கருத்து சாத்தியமானதுதான் என்றும் அவர் நினைத்தார்.


அதுதான் அவரது முதன்மையான நோக்கமாக இருந்ததே தவிர பிரிவினை அவரது முதல் எண்ணமாக
இல்லை. அதாவது இந்தியாவுக்குள் சுயாட்சி கொண்ட ஒரு பாகிஸ்தானையே அவர்
விரும்பினார். அந்தக் கருத்து சாத்தியமானதுதான் என்றும் அவர் நினைத்தார்.
அவரது எண்ணத்திற்கு மதிப்பளித்திருந்தால் பிரிவினையே ஏற்பட்டிருக்காது.



இந்துக்களை அவர் ஒருபோதும் வெறுத்ததில்லை. காங்கிரஸ் மீதும், காங்கிரஸ்
தலைமை மீதும்தான் அவரது கோபம் இருந்தது. இந்துக்களை நான் எதிரியாகவே
நினைக்கவில்லை என்று அவர் தொடர்ந்து கூறி வந்திருக்கிறார் என்பதை இங்கே
சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.


முதன் முதலாக காந்தியிடம் ஜின்னாவை கோகலே அறிமுகப்படுத்தியபோது, காந்தி சொன்ன
வார்த்தை இது- ''ஒரு முஸ்லீம் தலைவரை வரவேற்பதில் பெருமை அடைகிறேன்''.
அங்கேயே பிரிவினை வந்து விட்டது. ஜின்னாவை ஒரு முஸ்லீம் என்ற
கோணத்தில்தான் காந்தியே பார்த்திருக்கிறார். ஆனால் தான் ஒரு முழுமையான
இந்தியர் என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஜின்னா. தன்னை ஒரு முஸ்லீமாக
பார்ப்பதை அவர் விரும்பாதவர்.

ஜின்னாவுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஜின்னா ஒரு சிறந்த
பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, நாடாளுமன்ற அரசியலில் மிகுந்த
நம்பிக்கை கொண்டவர். பிரிவினைவாதத்தை எந்த நிலையிலும் அவர் ஏற்காதவர்.
ஆனால் காந்தி, தனது கருத்துக்களைக் கூற மதத்தைத் துணைக்கு அழைத்தவர்.
ஆனால் ஜின்னா மதம் என்ற சொல்லை கடைசி நேரத்தில்தான் கையில் எடுத்தார்.
ஆனால் காந்திக்கோ, அவரது அரசியலின் ஆரம்பத்திலிருந்தே மதமும் கலந்தே
இருந்தது. ஆனால் ஜின்னா, அரசியலில் மதம் கலக்கக் கூடாது என்று உறுதியாக
இருந்தவர்.


இந்திய, பாகிஸ்தான் பிரிவினையை நான் ஜின்னாவின் மாபெரும் வெற்றியாக கூற மாட்டேன்.
அதேபோல தான் நினைத்ததை ஜின்னாவும் சாதிக்கவில்லை. பாகிஸ்தான் உருவான சில
காலத்திலேயே ஜின்னாவின் கொள்கைகள், நோக்கங்கள் அடிபட்டுப் போய் விட்டன.
அந்த வகையில் காந்தியும் சரி, ஜின்னாவும் சரி தோல்வியடைந்தவர்கள் என்றே
கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.


இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை. அவர்களை
வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம். அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான்
என்ற தனி நாடு உருவானது. இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை
பிளவுபடுத்த வேண்டுமா?. இந்தியாவில் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு சம
உரிமையோடு வாழ அனுமதி வேண்டும். அதைச் செய்யாத வரை பிரச்சனைகள் தீராது.
முஸ்லீம்கள் குறித்த பாஜகவின் நிலை சரியல்ல என்று கூறியுள்ளார் ஜஸ்வந்த்
சிங்.


அன்று அனுமன்.. இன்று ராவணணா?:



இந் நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின் சிம்லாவில் இன்று
நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஒரு புத்தகம் எழுதியதற்காக
நீக்கியுள்ளார்கள். உண்மையில் என் புத்தகத்தை பாஜத தலைவர்கள் படித்துக்
கூட பார்க்கவில்லை.

என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக ராஜ்நாத்
சிங் தொலைபேசியில் கூறினார். இதை அத்வானியும் ராஜ்நாத் சிங்கும்
டெல்லியிலேயே நேரில் சொல்லியிருக்கலாம். சிம்லா கூட்டத்துக்கு வரச்
சொலிவிட்டு, இங்கு வைத்து கட்சியை விட்டு நீ்க்குவதாக போனில் சொன்னது தான்
வருத்தம்.


நான் இதுவரை பாஜகவின் அனுமனாக இருந்தேன். இப்போது என்னை பாஜக ராவணனாக
கருதுகிறது. நான் ராணுவத்திலிருந்து மக்கள் சேவைக்கு வந்தவன். நான்
பென்ஷன் வாங்கும் ஆசாமியும் அல்ல. 30 வருடமாக பாஜகவில் அரசியலில்
இருந்தேன். அதன் ஆரம்பகால உறுப்பினர் தான். கட்சியின் தலைவராகவும்
இருந்துள்ளேன். அது இப்படி முடிவுக்கு வரும் என்று நினைத்ததில்லை. என்
புத்தகத்தை வைத்து காங்கிரஸ் பிரச்சனை செய்தால் அதைப் புரிந்து கொள்ளலாம்.
காரணம் நாடு பிளவுபட காரணம் என்று நான் காங்கிரஸ் தலைவர்களைத் தான் அதில்
விமர்சித்துள்ளேன். ஆனால், பாஜக பிரச்சனை செய்தால் என்ன செய்வது?.
எல்லாவற்றையும் அரசியலாக்குவது தவறு. குறிப்பாக ஒருவரின் சிந்தனைகளுக்கு
தடை போடுவது பெரும் தவறு.


ஜின்னா குறித்தும், நாடு பிளவுபட்ட அந்த வலி மிகுந்த நாட்களையும் தான் நான்
புத்தகமாக்கினேன். அந்தப் புத்தகம் 5 வருட கடும் உழைப்பில் உருவானது.
புத்தகம் எழுதியதற்காக நான் வருதப்படவில்லை. அதை கவனமாகப் படித்துப்
பாருங்கள்.


இந்து-முஸ்லீகள் ஒற்றுமையின் தூதராக இருந்த ஜின்னா ஏன் பாகிஸ்தானின் தந்தையாக மாறினார்.
ஏன் நாடு பிளவுபடக் காரணமானார்.. அவரில் ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது..
என்பதை விளக்கும் நூல் தான் இது. இந்தப் புத்தகம் எழுதி நான் எந்தக்
குற்றமும் செய்யவில்லை.


அத்வானி எதிர்க் கட்சித் தலைவராக நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து அந்தக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும்.


இளைய தலைமுறையிடம் பொறுப்பைத் தருமாறு பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் அறிவுரை தந்துள்ளது
குறித்து கேட்கிறீர்கள். அது குறித்து நான் ஏதும் கூற விரும்பவில்லை. நான்
ஆரஎஸ்எஸ்சில் எந்தக் காலத்திலும் உறுப்பினராக இருந்ததில்லை. அவர்களது
கருத்துக்களுக்கு நான் எப்படி பதில் சொல்வது என்ற ஜஸ்வந்த் சங் பரிவார்

குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்


அபு ஹிஸ்ஸாம்

சனி, ஆகஸ்ட் 22, 2009

நோன்பு கால ச‌மைய‌ல் டிப்ஸ்....





நோன்பு கால ச‌மைய‌ல் டிப்ஸ்


ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்.



1. நோன்பு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது நோன்பு கஞ்சி தான்.

இதற்கு தேவையான அரிசி, பாசி பருப்பு, வெந்தயம் போன்றவற்றை முதலே திரித்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.
மொத்தமாக சிக்கன் (அ) மட்டன் கீமாவை அரை கிலோ அளவிற்கு தாளித்து வைத்து கொள்ளுங்கள்.
தினம் தாளித்த கீமாவை தேவைக்கு போட்டு கொதிக்க விட்டு கலந்து வைத்துள்ள அரிசியை தேவைக்கு ஊறவைத்து செய்து கொள்ளலாம்.
இல்லை கஞ்சி மொத்தமாக முன்று நாளைக்கு ஒரு முறை தயாரித்து வைத்து கொள்ளலாம்.


2. எண்ணையில் பொரிக்கும் அயிட்டத்தை கடைசி நேரத்தில் பொரிக்காதீர்கள்.

அது அவசரத்தில் கடைசி நேரத்தில் பொரிக்காதீர்கள்.பொரித்த எண்ணையை மறுநாள் சுடும் போது அதில் தண்ணீர் படாமல் முடிவைகக்வும். மறு நாள் பொரிக்கும் போது அதை வடி கட்டி கொள்ளுங்கள்.லேசாக தண்ணீர் பட்டாலும் அது உங்கள் முகத்தில் தான் தெரிக்கும்.
(ஒவ்வொரு முறையும் புது எண்ணையை உபயோகிப்பது உடல் நலத்துக்கு நல்லது) இப்படி ஒருவருக்கு முன்பு ஆகி இருக்கு கடைசி நேரத்தில் அவசரமா பொரிக்கும் போது மேலே தெரித்து உடனே அந்த நேரத்தில் ஹாஸ்பிட்டல் போய் இருக்கிறார்கள். குழந்தையை வைத்து கொண்டு செய்பவர்கள் ரொம்ப உஷாராக இருக்கவும்.நோன்பு நேரத்தில் இந்த டென்ஷன் வேறு தேவையா?

3. வடைக்கு மொத்தமாக முன்று நாளைக்கு சேர்த்து அரைத்து கை படாமல் எடுத்து முன்று பாகமாக பிரித்து வையுங்கள்.

4. சுண்டல் வகைகள் நிறைய செய்யலாம். அதையும் அரை கிலோ அளவில் ஊறவைத்து வேக வைத்து வைத்து கொண்டால் தேவைக்கு அன்றாடம் தாளித்து கொள்ளலாம்.

5. பாசி பருப்பு இனிப்பு சுண்டர். கொண்டைகடலை கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல், வேர்கடலை அவித்தும் சாப்பிடலாம்.


6. சோமாஸ், க‌ட்லெட் ச‌மோசா வ‌கைக‌ளை முன்பே த‌யாரித்து பிரீஜ் செய்து வைத்து கொள்ள‌லாம்.

7. ஜூஸையும் இர‌ண்டு நாட்க‌ளுக்கு சேர்த்து க‌ரைத்து வைத்து கொள்ள‌லாம்.
இத‌னால் நேர‌த்தை மிச்ச‌ ப‌டுத்தி கொள்ளலாம்.

8. கடல் பாசி ஒரே வகையில் செய்யாமல் நல்ல கலர் புல்லாக செய்து வைத்தால் பிள்ளைகளுக்கு நோன்பு நேரம் ரொம்ப பிடிக்கும், அதை செய்து அவர்களை கட் பண்ண்ண சொல்லுங்கள்.



9. வ‌யிறு கேஸ் பிராப்ள‌ம், அல்ச‌ர் உள்ள‌வ‌ர்க‌ள். வெள்ளை க‌ஞ்சி பூண்டு , தேங்காய் பால் சேர்த்து செய்து குடிக்க‌வும்.

10. தின‌ம் ஜ‌வ்வ‌ரிசி பாயாச‌ம், க‌ஞ்சி செய்து குடித்தால் அல்ச‌ர், வ‌யிறு பிராப்ள‌ம் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ரொம்ப‌ இதமாக‌ இருக்கும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
இல்லை ஜ‌வ்வ‌ரிசியை ஊற‌வைத்து வேக‌ வைத்து தின‌ம் பாலில் சேர்த்தும் குடிக்க‌லாம்.


11. பிரெஷ் பழ ஜூஸ்கள் தயாரித்து குடித்தால் உடல் தெம்பாக இருக்கும், புருட் சேல‌டும் கூட‌ அடிக்க‌டி செய்து சாப்பிட‌லாம்.

12. நோன்பு க‌ஞ்சியும் ஒரே மாதிரியாக‌ செய்யாம‌ல் சிக்க‌ன் க‌ஞ்சி, ம‌ட்ட‌ன் க‌ஞ்சி, வெள்ளை க‌ஞ்சி, ஸ்வீட் கார்ன் சிக்க‌ன் சூப், த‌க‌காளி சூப், பால‌க் சூப், ஓட்ஸ் சூப் என்று ப‌ல‌ வ‌கையாக‌ செய்து குடிக்க‌லாம்.

13. ப‌ஜ்ஜிக்கு காய் க‌ளை முத‌லே அரிந்து பிரிட்ஜில் வைத்து கொள்ள‌வும். இது சுடும் போது ரொம்ப‌ வ‌ச‌தியாக‌ இருக்கும். ப‌ஜ்ஜி யில் ப‌ல‌ வித‌மாய் சிக்க‌ன் ப‌ஜ்ஜி, வெங்காய‌ம், த‌க்காளி வெள்ள‌ரி, வாழக்காய், பேபி கார்ன் , க‌த்திரிக்காய் என்று ப‌ல‌ வித‌மாக‌ ப‌ஜ்ஜி செய்து சாப்பிட‌லாம்.


14. ப‌கோடா செய்யும் போது அதில் காய் க‌றிக‌ள் ம‌ற்றும் இஞ்சி சேர்த்து கொள்ளுங்க‌ள்.இது நெஞ்சி கரிக்காமல் இருக்கும், வழக்கம் போல் பூண்டும் தட்டி போட்டு கொள்ளுங்கள்


15.அப்பளம் , வத்தல் கூட கொஞ்சம் அதிகமா பொரித்து எண்ணை வடிந்ததும் அதை ஒரு கவரில் வைத்து பிரிட்ஜில் வைக்கலாம்.


16. லோ பிரெஷர் உள்ளவர்கள் பிரெஷ் ஆரஞ்ச் ஜூஸில், உபபு ஒரு சிட்டிக்கை, குளுக்கோஸ் சேர்த்து குடிக்கவும், அதே போல் லெமன் ஜூஸிலும். இது நல்ல எனர்ஜியை கொடுக்கும். அடிக்கடி மயக்கம் வருவதை த‌டுக்கும்.


17 .ஆள்வள்ளி கிழங்கு (மரவள்ளி) , சர்க்கரை வள்ளி கிழங்கு அவித்து சாப்பிடலாம் அதில் சர்க்கரை , நெய், தேங்காய் சேர்த்து உருண்டை பிடித்தும் சாப்பிடலாம்

18. வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை மாவு கலவையில் முக்கியதும் பிஞ்சி போகும் அதற்கு வெங்காயத்தை முதலே வட்ட வடிவமாக அரிந்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மாலை பொரிக்கும் போது நல்ல கிரிப்பாக இருக்கும், இதே போல் வாழக்காய், மற்றும் உருளையையும் செய்யலாம். பஜ்ஜியில் கண்டிப்பாக பூண்டு பொடி (அ) இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) பெருங்காயப்பொடி சேர்த்து செய்யவும். வயிறு உப்புசம் ஆகாது


ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்.
நன்றி: ஆல் இன் ஆல் ஜலீலா

ரமலான் வாழ்த்துக்கள்......

புதன், ஆகஸ்ட் 19, 2009

சுத்தமும், சுகாதாரமும்.......

ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்..

சுத்தமும் சுகாதாரமும் அற்ற குடியிருப்புப் பகுதி கள், பலதரப்பட்ட மக்கள் நெருக்கமாகக் கூடும் இடங் கள், சுகாதாரக் கேடு, பராமரிப்பு இல்லாத சுத்தமற்ற கழிவறைகள், நீண்ட நாள் மாசு பட்ட நீர்த் தேக்கம் போன்றவை வைரஸ் கிருமிகள் பரவும் இடங்களாகும்.
எலி வாய்வைத்த உணவுப் பொருட்களைத் தவறுதலாக மனிதர்கள் சாப்பிட்டாலோ, எலிகள் கலக்கிய நீரை மனிதர்கள் குடித்தாலோ எலிக் காய்ச்சல் ஏற்படும். இதுவும் வைரஸ் காய்ச்சல் வகை என்பதால் எளிதில் பரவக் கூடியதாகும்.
மூளைக் காய்ச்சல்கூட காற்றின் மூலம் பரவும் ஒரு வகை வைரஸ் பாதிப்புதான்.
வைரஸ் தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கூடுதல் கவனத்துடன் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்.
வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் தற்காலிகமாக மூக்குக் கவசம் அணிவது எல்லோருக்குமே நல்லது. அவர்கள் இருமும்போது கைக்குட்டையால் வாயை மூடிக்கொண்டு தும்ம வேண்டும்.
வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் உப்பு கலந்த வெந்நீரால் வாய் மற்றும் தொண்டைப் பகுதியை அடிக்கடி கொப்பளித்தால் வைரஸ் கிருமி மற்றவர் களுக்குப் பரவாது.

வைரஸ் கிருமி பெரும்பாலும் காற்று மற்றும் குடிநீர் மூலம் எளிதில் பரவும். குடிநீரைக் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் பிரச்னை இல்லை. பாக்கெட் குடிநீரைத் தவிர்ப்பது நல்லது.
சுகாதாரமற்ற சாலையோர கையேந்தி பவன்கள், தள்ளுவண்டி குளிர்பானங்கள், கலர் ஐஸ்கள் எல்லாம் வைரஸின் வரவேற்பறைகளாகும்.
தொற்றுநோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர் களைக் குணப்படுத்த தமிழக அரசு பல ஊர்களில் நவீன வசதிகள்கொண்ட சுகாதார மையங்களைத் திறந்துவைத்துள்ளது. இங்கே தொற்றுநோய்க் கிருமிகள் பரவாமல் இருக்க தடுப்பு ஊசிகள் மற்றும் ஆலோசனை கள் வழங்கப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொற்றுக் கிருமிகள் நம்மை நெருங்காமல் இருக்க தினம் இருமுறை பல் துலக்க வேண்டும். சுத்தமான குளியலும் ஆடைகளும் கிருமிகளுக்கு எதிரிகளாகும். நகங்கள் கிருமிகளின் கிடங்காக இருக்கக் கூடாது. சாப்பிடுவதற்கு முன் கையைச் சுத்தப்படுத்திக்கொள்வது நல்லது. எப்போதும் உணவில் சத்துள்ள காய்கள், கீரை வகைகள், பருப்பு போன்றவற்றைச் சேர்த்து வந்தால் வைரஸ் வில்லனிடமிருந்து ஓரளவாவது தப்பிக்கலாம்!

மனதின் பிடியிலிருந்து சுதந்திரம்.

19 Aug. 2009
ஏக இறைவனின் சாந்தி நம் அனைவர்களின் மீதும் உண்டாக இறைஞ்சியவனாக!

அன்பார்ந்த வாசகர்களே.

நாம் அனைவரும் ஏதாவது சில விஷயங்களில் சாதனை படைக்க, குறிக்கோளை அடைய விரும்பிகிறோம்.

ஆனால் நம் விருப்பத்தின் படி சாதனை சிகரத்தை தொட்டவர்கள் மிகச்சிலரே.

அதற்குக் காரணம் என்ன என்று பார்த்தால் நமது குறிக்கோளின் பால் நமது எண்ணங்கள் சரியான அளவு ஒரு முகப்படுத்தாமை அல்லது தன்னம்பிக்கையின்மை என்பது தெளிவாக தெரிய வரும்.

நம் உள் மனதில் கொண்டிருக்கும் நம்மை பற்றிய பழைய நம்பிக்கைகளின் பிடியிலுள்ளோம் நாம்!

அந்த மட்டுப் படுததப் பட்ட நம்பிக்கைகள் தான் நமது சாதனைகளுக்கு தடையாக உள்ளன.

பழைய எண்ணங்களை மாற்றுவோம்! (தவறுகள் செய்த மனிதன் தான் செய்திருந்த தவறுக்காக இறைவனிடம் இறைஞ்சி பாவமண்ணிப்பு கோரி அந்தத் தவரிலிருந்து விடுபட வேண்டும்.)

மனதின் பழைய தன்னம்பிக்கை அற்ற தடத்திலிருந்து விடுபடுவோம்.

மனதின் பிடியிலிருந்து சுதந்திரம் அடைவோம்!

புதிய நல்ல, தன்னமிபிக்கை தரும் எண்ணங்களை மட்டும் மனதில் விதைப்போம்!

செயல்கள் அனைத்தும், எண்ணத்தைப் பொருத்தே அமைகின்றன என்று அல்லாஹ்வின் தூதா நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் நூல் புகாரி.

எனவே எண்ணங்களின் அபார ஆற்றல் நம்மை சிறந்த முறையில் செயல் பட வைத்து வெற்றிகளை குவிக்கும் என்பது நிச்சயம்!

அபு ஹிஸ்ஸாம்

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2009

பழக்கத்தின் மாபெரும் ஆற்றல்..!

Aug 18, 2009
பழக்கத்தின் மாபெரும் ஆற்றல்..!

ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவனிடம் 'வாழைப்பழம்' என்று சொல்லிக் கொடுத்த போது அவன் "வாயப் பயம்" என்று சொல்ல அவனை திருத்த அவனது தந்தையிடம் விஷயத்தை சொன்ன போது
"எங்க பயக்க வயக்கமே அப்படி தாங்க.." என்று சொல்லப் படும் நகைச்சுவை துணுக்கை கேட்டிருக்கிறோம்.

இது வெறும் நகைச்சுவை துணுக்கு மட்டும் இல்லை. சிந்திக்க வேண்டிய சங்கதி.

பழக்கம் எவ்வாறு மனதை ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம்.

ஆகவே தான் சிறு வயது முதல் நல்ல பழக்கத்தை பழகு என்று வழக்கமாக பெரியவர்கள் சொல்லுகிறார்கள்.

பழக்கம் என்பது சாதாரண விஷயமில்லை.

நமது வெற்றியை, தோல்வியை நிர்ணயிப்பது பழக்கமே!

ஒரு பழக்கத்தை பழகி விட்டால் அதனை விட முயல்வது எவ்வளவு சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும்.

நாம் ஒரு செயலை செய்து முடித்தவுடன் அந்த செயல் வேண்டுமானால் முடிந்து விடலாம்.

ஆனால் அந்த செயலின் பதிவு ஒரு ஆற்றலாக நமது மூளையில் சேமிக்கப் பட்டு விடுகிறது.

அந்த செயலை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக செய்கிறோமோ அந்த அளவுக்கு அந்த ஆற்றலின் அளவு கூடுகிறது.

நாம் இப்போது கொண்டிருக்கும் சுபாவம், பாவனை அனைத்தும் இவ்வாறு ஏற்பட்டவையே.

எந்த செயலையும் தொடர்ந்து செய்யும் போது நமது மூளையில் உடல் செல்களில் பதிவாகும் அந்த செயல் மீண்டும் மீண்டும் நம்மை அந்த செயலை செய்ய தூண்டுகிறது.

நகம் கடிப்பது, புகை பிடிப்பது போன்றவை பழக்கதின் ஆற்றலை பறை சாற்றுகின்றன.

ஆகவே தான் நல்ல செயல்களையும் நல்ல எண்ணங்களையும் நாமே விரும்பி செய்து பழக்கி கொள்வதும்; தீய செயல்களையும் எண்ணங்களையும் தவிர்ப்பதும் இன்றியமையாததாகிறது.

பழக்கத்தின் ஆற்றலை அறிய நம் அன்றாட வாழ்க்கையிலேயே நிறைய உதாரணங்களை காண முடியும்.

தேர்வுக்கு சிரமப்பட்டு தொடர்ந்து படிப்பவர்கள் ஒரு விஷயத்தை உணர்வார்கள் - தேர்வுகள் முடிந்த பின்பும் படிக்க வேண்டும் போல் ஒரு உணர்வு ஏற்படும்.

தொடர்வண்டியில் நீண்ட பயணம் செய்து விட்டு வருபவர்கள் வீட்டுக்கு வந்தும் அதில் பயணிப்பது போல் உணர்வார்கள்.

சில பேர் எப்போதும் எங்கு செல்வதென்றாலும் தாமதமாகவே, கடைசி நிமிடத்தில் பரபரப்பாகவே செல்வர். யார் எவ்வளவு முறை சொன்னாலும், ஏன் அவர்களே நினைத்தாலும் அதனை மாற்றுவது மிகுந்த சிரமமாக இருக்கும். ஏனென்றால அப்படிப் பட்டோர் நிறைய முறை இதே போல் தாமதமாக சென்று சென்று அந்த பழக்கத்தின் ஆற்றல் அவரிடத்தில் தங்கி விடுகிறது.

ஆகவே அதனை மாற்றுவது கடினமாக உள்ளது.

இருந்தாலும் பழக்கத்தை மாற்றுவது சாத்தியமே! கொஞ்சம் மன உறுதி மட்டும் வேண்டும் பாஸ்! மீண்டும் சந்திப்போம்!

அபு ஹிஸ்ஸாம்.

பன்றிக்காய்ச்சல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

பன்றிக்காய்ச்சல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை

பன்றிக் காய்ச்சல் எனப்படும் Swine Flu எனும் நோய் உலகெங்கும் வெகு வேகமாக பரவி வருகின்றது. H1N1 என்ற வைரஸால் உண்டாகும் இந்த நோய், கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவில் தான் முதலில் உண்டானது. அதன் பிறகு, மெக்ஸிகோ, கனடா நாடுகளுக்கு பரவி, தற்போது உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கடந்த 10.ஆக.2009 வரை, சவூதி அரேபியாவில் 9 பேர் இந்த நோய்க்கு பலியாகி உள்ளனர். இவர்களுள் இருவர் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள்; ஏழு பேர் சவூதிகள். பன்றியின் சுவாச பையில் இருக்கும் H1N1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.

சாதாரண ஃபுளூ காய்ச்சலுக்கு ஒருவரிடமிருந்து எவ்வாறு பிறருக்குப் பரவுகின்றதோ, அதே போலவே இந்த பன்றிக்காய்ச்சலும் பரவுகின்றது. மேலும், சாதாரண ஃபுளூ காய்ச்சலுக்கான அறிகுறிகளே இதற்கும் அறிகுறிகள். இந்நோய் கிருமியால் பாதிக்கப்பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார்.

பன்றிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள்:

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

* பன்றிக் காய்ச்சலுக்கு, காய்ச்சல் தான் முதல் அறிகுறி. அத்துடன் மூக்கிலிருந்து நீர் வடியும்.

* இருமல் தொடரும். தொண்டை வலிக்கும். மூச்சு விடுவதில் சிரமம் இருக்கலாம்.

* பசி எடுக்காது. சாப்பிட்டாலும் வாந்தி வரும். * வயிற்றுப் போக்கு இருக்கும். களைப்பு ஏற்படும்.

* அதிக உடல் வெப்பம், தசை வலி, வேலை செய்ய முடியாத நிலை.

* அடிக்கடி கோபம், எரிச்சல், உளைச்சல் ஆகியன ஏற்படும். * தண்ணீர் குடிக்க முடியாத நிலை.

* குழந்தைகளுக்கு நீலம் மற்றும் சாம்பல் நிறமாக தோல் காட்சியளிக்கலாம். தோல் எரிச்சல் ஏற்படும்.

* மிக மோசமான நிலையில், நிமோனியா ஏற்படலாம்; உயிரிழப்பும் ஏற்படலாம்

எப்படிப் பரவுகின்றது?

* இருமல் மூலம் வைரஸ்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு காற்று வழியாக பரவும்.

* வைரஸ் உள்ள இடங்களை தொட்டு, பின்னர் வாய் மற்றும் மூக்குப் பகுதியை தொடும் போது நமக்கும் வைரஸ் பரவி விடும். (அந்த வைரஸ், மனித உடலிலிருந்து வெளியேறிய பிறகும் சுமார் 2-8 மணி நேரம் மனிதர்களை பாதிக்கும் சக்தி பெற்றதாக உள்ளது.)

* நோயாளிகளிடமிருந்து மருத்துவ ஊழியர்களுக்கு.

தடுப்பு முறைகள்

* இதுவரை இந்த வைரஸுக்கான தடுப்பு ஊசி மருந்து (Vaccine) கண்டுபிடிக்கப்பட வில்லை.

* உங்களுடைய கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி கை கழுவிக் கொள்ளுங்கள்.

* மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு "சர்ஜிகல் மாஸ்க்' இல்லாமல் போக வேண்டாம்.

* பன்றிக்காய்ச்சல் இருக்குமோ என்று யாரையாவது சந்தேகப்பட்டீர்களேயானால் சற்று தள்ளி இருங்கள்.

* நன்றாக தூங்க வேண்டும். காற்று வரும் இடத்தில் இருக்க வேண்டும்.

* நிறைய தண்ணீர்குடிக்க வேண்டும்.

செய்யக் கூடாதவை

* அறிமுகம் இல்லாத நபரிடம் கை குலுக்குதல், தொட்டுப் பேசுதல். * பொது இடங்களில் துப்புதல்.

* மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து எடுத்துக் கொள்ளுதல்

* சுயமாக வேறு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுதல்.

* பன்றிக்காய்ச்சல் மருந்தான, டாமி ப்ளூ மருந்தை நாமாக எடுக்கக்கூடாது. இது அறிகுறியை மறைத்து, பின்னர் விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும். நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடும்.

உங்களுக்கு உடல் நலக் குறைவா?

* உடனடியாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

* பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள். * நிறைய தண்ணீர் குடியுங்கள்.

* தும்மல், இருமல் ஏற்படும் போது, முகத்தை டிஷ்யூ பேப்பரால் மூடிக்கொள்ளுங்கள்

* அடிக்கடி புதிய முகக்கவசம் போட்டுக் கொள்ளுங்கள். பழைய கவசத்தை பாலிதீன் கவரில் இட்டு குப்பைத் தொட்டியில் போடுங்கள்.

பன்றிக்காய்ச்சல் இருந்தால்

* பயணத்தை தவிர்க்கவும். * வீடுகளிலும் தனியாக இருங்கள்.

* பணிபுரியும் இடம் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டாம்.

குழந்தைகள் கவனம்

* குழந்தைகளின் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

* முகம் மற்றும் வாய்ப் பகுதியை தொடக்கூடாது. * சுடுநீர் குடிக்கவும்

* மக்கள் கூடும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம்.

* குழந்தைக்கு காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள்.

* காய்ச்சல் மாணவர்களை அடையாளம் கண்டு, பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

நன்றி: சகோ. பைசல் – ரியாத்

ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்


ரமலானுக்கு நீங்க ரெடியா?

ரமலானுக்கு நீங்க ரெடியா?

ம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் - 2:183)

ரமலான் நம்மை வேகமாக நெருங்கி வரும் இவ்வேளையில், இந்த அற்புதமான மாதத்திற்காக நாம் விரைந்து தயாராகிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். நாம் ஒரு முக்கியமான நபரை சந்திக்க வேண்டி இருந்தாலோ அல்லது முக்கியமான வேலையைச் செய்ய வேண்டி இருந்தாலோ எவ்வாறு அதற்கு நேரத்தையும், காலத்தையும் திட்டமிட்டு அதற்குத் தேவையான பொருட்கள் / ஆவணங்களை சேகரிக்கின்றோமோ, அதை விடவும் மிக அதிகமான அர்ப்பணிப்புடன் நாம் ரமலானுக்காக தயாராக வேண்டும்.

ரமலானின் ஆரம்பத்தில் அதிகமான நன்மைகளை பெறுவதற்காக தொழுகை - தர்மம், இன்னபிற அமல்களை அதிகம் செய்ய ஆரம்பிக்கும் நாம், படிப்படியாக குறைந்து, ரமலானின் பாதியிலேயே அமல்களை விட்டவர்களாக ஆகின்றோம். ரமலானில் செய்யக்கூடிய அமல்களுக்காக சரியான அடித்தளத்தை அமைத்துக் கொள்ளாததே இதற்கு மிக முக்கிய காரணம். ரமலானை அடைவதென்பது, அல்லாஹ் நமக்கு அவனுடைய அளப்பெருங்கருணையின் மூலம் வழங்கிய அருட்கொடை என்பதை நாம் உணர வேண்டும். சென்ற வருட ரமலானுக்கு இருந்தவர்களில் எத்தனையோ பேர், இன்று நம்மிடையே இல்லை என்பதை நாம் எண்ணிப் பார்த்தோமேயானால், இந்த ரமலானில், நல்லமல்களைச் செய்வதும், அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுவதும் எவ்வளவு பெரிய அருள் மழை என்பதை நாம் சிந்தித்து தெளிவு பெற முடியும்.

யார் ரமலான் மாதத்தில் நம்பிக்கையுடன், மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் இதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

தக்வா - இறையச்சம் உடையவர்களாக நீங்கள் ஆவதற்காகவே, நோன்பை தான் கடமையாக்கியுள்ளேன் என அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான். இறையச்சம் என்பது இறைவனின் தண்டனைக்குப் பயந்து பாவங்களில் இருந்து விலகிக் கொள்வதும், இறைவனின் பரிசுக்காக நன்மையான அமல்களில் ஈடுபடுதலுமேயாகும். எண்ணிப் பாருங்கள்! நாம் அவ்வாறாக ரமலானின் இறுதியில் ஆகின்றோமா? அல்லது அந்நிலைக்கு சற்று அருகிலாவது செல்கின்றோமா? நமது பதில் "ஆம்!" என்று இருக்குமானால், அல்ஹம்துலில்லாஹ்... ரமலானில் நோன்பு நோற்றதனால், நாம் பயனடைந்துள்ளோம். நமது பதில் "இல்லை!" என்றிருக்குமானால், நோன்பு நோற்றதின் நோக்கம் நிறைவேறவில்லை என்பதே பொருள்.

இந்த கசப்பான உண்மைக்கு மிக முக்கிய காரணம் - நாம் ரமலான் ஆரம்பிக்கும்போது அதனை எதிர்கொள்ள நாம் சரியான முறையில் தயாராகவில்லை என்பதே! நமது ஃப்ரிட்ஜில் சஹருக்கும், இஃப்தாருக்குமான உணவை சேகரித்து வைப்பதென்பது, ரமலானுக்காக தயாராவது அல்ல; மாறாக, நோன்பு என்பது இறைதிருப்தியை நாடி, இறைவனுக்கு அஞ்சி, அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி, நேர்வழியை நோக்கி பயணித்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெறுவது எனும் எண்ணத்தை மனதில் கொண்டு வருவதே ரமலானுக்கு நாம் சரியான முறையில் தயாராகிறோம் என்று பொருள்.

அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (சல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடையானது, அல்லாஹ்வினிடத்தில் கஸ்தூரியின் மணத்தை விடச் சிறந்தது. (அல்லாஹ் கூறுகிறான்) அடியான் எனக்காகவே (அல்லாஹ்வுக்காகவே) உண்ணுவதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் விலகி இருந்தான்; நோன்பு எனக்கானதாகும்; நானே அவனுக்கு (நோன்பாளிக்கு) கூலியை வழங்குவேன். (புஹாரி)

நன்றி: சகோ. பைசல் – ரியாத்

ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்

மயிலாடுதுறை ஜவுளி கடையில் தீ விபத்து: ரூ. 10 லட்சம் சேதம்

மயிலாடுதுறை ஜவுளி கடையில் தீ விபத்து: ரூ. 10 லட்சம் சேதம்

நன்றி: தினமனி நாளேடு
ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்

மயிலாடுதுறை, ஆக. 17: நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள ஜவுளி கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.
மயிலாடுதுறை வட்டம், நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ. சாதிக். இவர் மயிலாடுதுறை பட்டமங்கலத் தெரு மணிக்கூண்டு அருகே ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கூட்டம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை கடையில் விற்பனை நடைபெற்றது.
பின்னர், வழக்கம்போலக் கடையைப் பூட்டிவிட்டு சாதிக் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதைதொடர்ந்து, இரவு சுமார் 11 மணி அளவில் சாதிக்கின் ஜவுளி கடையில் இருந்து புகை வந்ததால், அருகிலிருந்த கடைக்காரர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸôர், கடையில் தீப்பிடித்து இருப்பதை உறுதி செய்து கொண்டு, மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
மயிலாடுதுறை, பூம்புகார், குத்தாலம் ஆகிய இடங்களிலுள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
இந்தத் தீ விபத்தில் ஜவுளி கடையில் வைக்கப்பட்டருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.
மயிலாடுதுறையில் நள்ளிரவில் பிரதான வீதியில் தீவிபத்து ஏற்பட்டதால், நகர் முழுவதும் பதற்றம் நிலவியது. மின் கசிவால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நன்றி: தினமனி நாளேடு
ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்