எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

சனி, ஆகஸ்ட் 22, 2009

நோன்பு கால ச‌மைய‌ல் டிப்ஸ்....





நோன்பு கால ச‌மைய‌ல் டிப்ஸ்


ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்.



1. நோன்பு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது நோன்பு கஞ்சி தான்.

இதற்கு தேவையான அரிசி, பாசி பருப்பு, வெந்தயம் போன்றவற்றை முதலே திரித்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.
மொத்தமாக சிக்கன் (அ) மட்டன் கீமாவை அரை கிலோ அளவிற்கு தாளித்து வைத்து கொள்ளுங்கள்.
தினம் தாளித்த கீமாவை தேவைக்கு போட்டு கொதிக்க விட்டு கலந்து வைத்துள்ள அரிசியை தேவைக்கு ஊறவைத்து செய்து கொள்ளலாம்.
இல்லை கஞ்சி மொத்தமாக முன்று நாளைக்கு ஒரு முறை தயாரித்து வைத்து கொள்ளலாம்.


2. எண்ணையில் பொரிக்கும் அயிட்டத்தை கடைசி நேரத்தில் பொரிக்காதீர்கள்.

அது அவசரத்தில் கடைசி நேரத்தில் பொரிக்காதீர்கள்.பொரித்த எண்ணையை மறுநாள் சுடும் போது அதில் தண்ணீர் படாமல் முடிவைகக்வும். மறு நாள் பொரிக்கும் போது அதை வடி கட்டி கொள்ளுங்கள்.லேசாக தண்ணீர் பட்டாலும் அது உங்கள் முகத்தில் தான் தெரிக்கும்.
(ஒவ்வொரு முறையும் புது எண்ணையை உபயோகிப்பது உடல் நலத்துக்கு நல்லது) இப்படி ஒருவருக்கு முன்பு ஆகி இருக்கு கடைசி நேரத்தில் அவசரமா பொரிக்கும் போது மேலே தெரித்து உடனே அந்த நேரத்தில் ஹாஸ்பிட்டல் போய் இருக்கிறார்கள். குழந்தையை வைத்து கொண்டு செய்பவர்கள் ரொம்ப உஷாராக இருக்கவும்.நோன்பு நேரத்தில் இந்த டென்ஷன் வேறு தேவையா?

3. வடைக்கு மொத்தமாக முன்று நாளைக்கு சேர்த்து அரைத்து கை படாமல் எடுத்து முன்று பாகமாக பிரித்து வையுங்கள்.

4. சுண்டல் வகைகள் நிறைய செய்யலாம். அதையும் அரை கிலோ அளவில் ஊறவைத்து வேக வைத்து வைத்து கொண்டால் தேவைக்கு அன்றாடம் தாளித்து கொள்ளலாம்.

5. பாசி பருப்பு இனிப்பு சுண்டர். கொண்டைகடலை கருப்பு மற்றும் வெள்ளை சுண்டல், வேர்கடலை அவித்தும் சாப்பிடலாம்.


6. சோமாஸ், க‌ட்லெட் ச‌மோசா வ‌கைக‌ளை முன்பே த‌யாரித்து பிரீஜ் செய்து வைத்து கொள்ள‌லாம்.

7. ஜூஸையும் இர‌ண்டு நாட்க‌ளுக்கு சேர்த்து க‌ரைத்து வைத்து கொள்ள‌லாம்.
இத‌னால் நேர‌த்தை மிச்ச‌ ப‌டுத்தி கொள்ளலாம்.

8. கடல் பாசி ஒரே வகையில் செய்யாமல் நல்ல கலர் புல்லாக செய்து வைத்தால் பிள்ளைகளுக்கு நோன்பு நேரம் ரொம்ப பிடிக்கும், அதை செய்து அவர்களை கட் பண்ண்ண சொல்லுங்கள்.



9. வ‌யிறு கேஸ் பிராப்ள‌ம், அல்ச‌ர் உள்ள‌வ‌ர்க‌ள். வெள்ளை க‌ஞ்சி பூண்டு , தேங்காய் பால் சேர்த்து செய்து குடிக்க‌வும்.

10. தின‌ம் ஜ‌வ்வ‌ரிசி பாயாச‌ம், க‌ஞ்சி செய்து குடித்தால் அல்ச‌ர், வ‌யிறு பிராப்ள‌ம் உள்ள‌வ‌ர்க‌ளுக்கு ரொம்ப‌ இதமாக‌ இருக்கும், குளிர்ச்சியாகவும் இருக்கும்.
இல்லை ஜ‌வ்வ‌ரிசியை ஊற‌வைத்து வேக‌ வைத்து தின‌ம் பாலில் சேர்த்தும் குடிக்க‌லாம்.


11. பிரெஷ் பழ ஜூஸ்கள் தயாரித்து குடித்தால் உடல் தெம்பாக இருக்கும், புருட் சேல‌டும் கூட‌ அடிக்க‌டி செய்து சாப்பிட‌லாம்.

12. நோன்பு க‌ஞ்சியும் ஒரே மாதிரியாக‌ செய்யாம‌ல் சிக்க‌ன் க‌ஞ்சி, ம‌ட்ட‌ன் க‌ஞ்சி, வெள்ளை க‌ஞ்சி, ஸ்வீட் கார்ன் சிக்க‌ன் சூப், த‌க‌காளி சூப், பால‌க் சூப், ஓட்ஸ் சூப் என்று ப‌ல‌ வ‌கையாக‌ செய்து குடிக்க‌லாம்.

13. ப‌ஜ்ஜிக்கு காய் க‌ளை முத‌லே அரிந்து பிரிட்ஜில் வைத்து கொள்ள‌வும். இது சுடும் போது ரொம்ப‌ வ‌ச‌தியாக‌ இருக்கும். ப‌ஜ்ஜி யில் ப‌ல‌ வித‌மாய் சிக்க‌ன் ப‌ஜ்ஜி, வெங்காய‌ம், த‌க்காளி வெள்ள‌ரி, வாழக்காய், பேபி கார்ன் , க‌த்திரிக்காய் என்று ப‌ல‌ வித‌மாக‌ ப‌ஜ்ஜி செய்து சாப்பிட‌லாம்.


14. ப‌கோடா செய்யும் போது அதில் காய் க‌றிக‌ள் ம‌ற்றும் இஞ்சி சேர்த்து கொள்ளுங்க‌ள்.இது நெஞ்சி கரிக்காமல் இருக்கும், வழக்கம் போல் பூண்டும் தட்டி போட்டு கொள்ளுங்கள்


15.அப்பளம் , வத்தல் கூட கொஞ்சம் அதிகமா பொரித்து எண்ணை வடிந்ததும் அதை ஒரு கவரில் வைத்து பிரிட்ஜில் வைக்கலாம்.


16. லோ பிரெஷர் உள்ளவர்கள் பிரெஷ் ஆரஞ்ச் ஜூஸில், உபபு ஒரு சிட்டிக்கை, குளுக்கோஸ் சேர்த்து குடிக்கவும், அதே போல் லெமன் ஜூஸிலும். இது நல்ல எனர்ஜியை கொடுக்கும். அடிக்கடி மயக்கம் வருவதை த‌டுக்கும்.


17 .ஆள்வள்ளி கிழங்கு (மரவள்ளி) , சர்க்கரை வள்ளி கிழங்கு அவித்து சாப்பிடலாம் அதில் சர்க்கரை , நெய், தேங்காய் சேர்த்து உருண்டை பிடித்தும் சாப்பிடலாம்

18. வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை மாவு கலவையில் முக்கியதும் பிஞ்சி போகும் அதற்கு வெங்காயத்தை முதலே வட்ட வடிவமாக அரிந்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மாலை பொரிக்கும் போது நல்ல கிரிப்பாக இருக்கும், இதே போல் வாழக்காய், மற்றும் உருளையையும் செய்யலாம். பஜ்ஜியில் கண்டிப்பாக பூண்டு பொடி (அ) இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) பெருங்காயப்பொடி சேர்த்து செய்யவும். வயிறு உப்புசம் ஆகாது


ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்.
நன்றி: ஆல் இன் ஆல் ஜலீலா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக