எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

செவ்வாய், ஆகஸ்ட் 18, 2009

ரமலானுக்கு நீங்க ரெடியா?

ரமலானுக்கு நீங்க ரெடியா?

ம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் - 2:183)

ரமலான் நம்மை வேகமாக நெருங்கி வரும் இவ்வேளையில், இந்த அற்புதமான மாதத்திற்காக நாம் விரைந்து தயாராகிக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம். நாம் ஒரு முக்கியமான நபரை சந்திக்க வேண்டி இருந்தாலோ அல்லது முக்கியமான வேலையைச் செய்ய வேண்டி இருந்தாலோ எவ்வாறு அதற்கு நேரத்தையும், காலத்தையும் திட்டமிட்டு அதற்குத் தேவையான பொருட்கள் / ஆவணங்களை சேகரிக்கின்றோமோ, அதை விடவும் மிக அதிகமான அர்ப்பணிப்புடன் நாம் ரமலானுக்காக தயாராக வேண்டும்.

ரமலானின் ஆரம்பத்தில் அதிகமான நன்மைகளை பெறுவதற்காக தொழுகை - தர்மம், இன்னபிற அமல்களை அதிகம் செய்ய ஆரம்பிக்கும் நாம், படிப்படியாக குறைந்து, ரமலானின் பாதியிலேயே அமல்களை விட்டவர்களாக ஆகின்றோம். ரமலானில் செய்யக்கூடிய அமல்களுக்காக சரியான அடித்தளத்தை அமைத்துக் கொள்ளாததே இதற்கு மிக முக்கிய காரணம். ரமலானை அடைவதென்பது, அல்லாஹ் நமக்கு அவனுடைய அளப்பெருங்கருணையின் மூலம் வழங்கிய அருட்கொடை என்பதை நாம் உணர வேண்டும். சென்ற வருட ரமலானுக்கு இருந்தவர்களில் எத்தனையோ பேர், இன்று நம்மிடையே இல்லை என்பதை நாம் எண்ணிப் பார்த்தோமேயானால், இந்த ரமலானில், நல்லமல்களைச் செய்வதும், அல்லாஹ்விடம் பிழை பொறுக்கத் தேடுவதும் எவ்வளவு பெரிய அருள் மழை என்பதை நாம் சிந்தித்து தெளிவு பெற முடியும்.

யார் ரமலான் மாதத்தில் நம்பிக்கையுடன், மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர் இதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)

தக்வா - இறையச்சம் உடையவர்களாக நீங்கள் ஆவதற்காகவே, நோன்பை தான் கடமையாக்கியுள்ளேன் என அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான். இறையச்சம் என்பது இறைவனின் தண்டனைக்குப் பயந்து பாவங்களில் இருந்து விலகிக் கொள்வதும், இறைவனின் பரிசுக்காக நன்மையான அமல்களில் ஈடுபடுதலுமேயாகும். எண்ணிப் பாருங்கள்! நாம் அவ்வாறாக ரமலானின் இறுதியில் ஆகின்றோமா? அல்லது அந்நிலைக்கு சற்று அருகிலாவது செல்கின்றோமா? நமது பதில் "ஆம்!" என்று இருக்குமானால், அல்ஹம்துலில்லாஹ்... ரமலானில் நோன்பு நோற்றதனால், நாம் பயனடைந்துள்ளோம். நமது பதில் "இல்லை!" என்றிருக்குமானால், நோன்பு நோற்றதின் நோக்கம் நிறைவேறவில்லை என்பதே பொருள்.

இந்த கசப்பான உண்மைக்கு மிக முக்கிய காரணம் - நாம் ரமலான் ஆரம்பிக்கும்போது அதனை எதிர்கொள்ள நாம் சரியான முறையில் தயாராகவில்லை என்பதே! நமது ஃப்ரிட்ஜில் சஹருக்கும், இஃப்தாருக்குமான உணவை சேகரித்து வைப்பதென்பது, ரமலானுக்காக தயாராவது அல்ல; மாறாக, நோன்பு என்பது இறைதிருப்தியை நாடி, இறைவனுக்கு அஞ்சி, அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி, நேர்வழியை நோக்கி பயணித்து அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெறுவது எனும் எண்ணத்தை மனதில் கொண்டு வருவதே ரமலானுக்கு நாம் சரியான முறையில் தயாராகிறோம் என்று பொருள்.

அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது (சல்) அவர்கள் கூறினார்கள்: என்னுடைய உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடையானது, அல்லாஹ்வினிடத்தில் கஸ்தூரியின் மணத்தை விடச் சிறந்தது. (அல்லாஹ் கூறுகிறான்) அடியான் எனக்காகவே (அல்லாஹ்வுக்காகவே) உண்ணுவதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் விலகி இருந்தான்; நோன்பு எனக்கானதாகும்; நானே அவனுக்கு (நோன்பாளிக்கு) கூலியை வழங்குவேன். (புஹாரி)

நன்றி: சகோ. பைசல் – ரியாத்

ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக