மயிலாடுதுறை ஜவுளி கடையில் தீ விபத்து: ரூ. 10 லட்சம் சேதம்
நன்றி: தினமனி நாளேடு
ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்
மயிலாடுதுறை, ஆக. 17: நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள ஜவுளி கடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.
மயிலாடுதுறை வட்டம், நீடூர் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ. சாதிக். இவர் மயிலாடுதுறை பட்டமங்கலத் தெரு மணிக்கூண்டு அருகே ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கூட்டம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி வரை கடையில் விற்பனை நடைபெற்றது.
பின்னர், வழக்கம்போலக் கடையைப் பூட்டிவிட்டு சாதிக் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதைதொடர்ந்து, இரவு சுமார் 11 மணி அளவில் சாதிக்கின் ஜவுளி கடையில் இருந்து புகை வந்ததால், அருகிலிருந்த கடைக்காரர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸôர், கடையில் தீப்பிடித்து இருப்பதை உறுதி செய்து கொண்டு, மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
மயிலாடுதுறை, பூம்புகார், குத்தாலம் ஆகிய இடங்களிலுள்ள தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.
இந்தத் தீ விபத்தில் ஜவுளி கடையில் வைக்கப்பட்டருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமாகின.
மயிலாடுதுறையில் நள்ளிரவில் பிரதான வீதியில் தீவிபத்து ஏற்பட்டதால், நகர் முழுவதும் பதற்றம் நிலவியது. மின் கசிவால் இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நன்றி: தினமனி நாளேடு
ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக