ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்..
சுத்தமும் சுகாதாரமும் அற்ற குடியிருப்புப் பகுதி கள், பலதரப்பட்ட மக்கள் நெருக்கமாகக் கூடும் இடங் கள், சுகாதாரக் கேடு, பராமரிப்பு இல்லாத சுத்தமற்ற கழிவறைகள், நீண்ட நாள் மாசு பட்ட நீர்த் தேக்கம் போன்றவை வைரஸ் கிருமிகள் பரவும் இடங்களாகும்.
எலி வாய்வைத்த உணவுப் பொருட்களைத் தவறுதலாக மனிதர்கள் சாப்பிட்டாலோ, எலிகள் கலக்கிய நீரை மனிதர்கள் குடித்தாலோ எலிக் காய்ச்சல் ஏற்படும். இதுவும் வைரஸ் காய்ச்சல் வகை என்பதால் எளிதில் பரவக் கூடியதாகும்.
மூளைக் காய்ச்சல்கூட காற்றின் மூலம் பரவும் ஒரு வகை வைரஸ் பாதிப்புதான்.
வைரஸ் தொற்றுநோய் பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கூடுதல் கவனத்துடன் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம்.
வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் தற்காலிகமாக மூக்குக் கவசம் அணிவது எல்லோருக்குமே நல்லது. அவர்கள் இருமும்போது கைக்குட்டையால் வாயை மூடிக்கொண்டு தும்ம வேண்டும்.
வைரஸ் பாதிப்புக்கு ஆளானவர்கள் உப்பு கலந்த வெந்நீரால் வாய் மற்றும் தொண்டைப் பகுதியை அடிக்கடி கொப்பளித்தால் வைரஸ் கிருமி மற்றவர் களுக்குப் பரவாது.
வைரஸ் கிருமி பெரும்பாலும் காற்று மற்றும் குடிநீர் மூலம் எளிதில் பரவும். குடிநீரைக் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் பிரச்னை இல்லை. பாக்கெட் குடிநீரைத் தவிர்ப்பது நல்லது.
சுகாதாரமற்ற சாலையோர கையேந்தி பவன்கள், தள்ளுவண்டி குளிர்பானங்கள், கலர் ஐஸ்கள் எல்லாம் வைரஸின் வரவேற்பறைகளாகும்.
தொற்றுநோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர் களைக் குணப்படுத்த தமிழக அரசு பல ஊர்களில் நவீன வசதிகள்கொண்ட சுகாதார மையங்களைத் திறந்துவைத்துள்ளது. இங்கே தொற்றுநோய்க் கிருமிகள் பரவாமல் இருக்க தடுப்பு ஊசிகள் மற்றும் ஆலோசனை கள் வழங்கப்படுகின்றன. இவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தொற்றுக் கிருமிகள் நம்மை நெருங்காமல் இருக்க தினம் இருமுறை பல் துலக்க வேண்டும். சுத்தமான குளியலும் ஆடைகளும் கிருமிகளுக்கு எதிரிகளாகும். நகங்கள் கிருமிகளின் கிடங்காக இருக்கக் கூடாது. சாப்பிடுவதற்கு முன் கையைச் சுத்தப்படுத்திக்கொள்வது நல்லது. எப்போதும் உணவில் சத்துள்ள காய்கள், கீரை வகைகள், பருப்பு போன்றவற்றைச் சேர்த்து வந்தால் வைரஸ் வில்லனிடமிருந்து ஓரளவாவது தப்பிக்கலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக