எனது நண்பர் எனக்கனுப்பிய மின்னஞ்சலிலிருந்து அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏனென்றால் இந்த பய்னுள்ள செய்தியை எல்லோரும் தெரிந்து வைத்துக்கொள்வது நல்லதல்லவா..
ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்
“108” – E M R I ஆம்புலன்ஸின் அற்புத அதிவேக சேவை
எனது சொந்த அனுபவத்தில் கண்ட “108”(EMRI) Emergency Management & Research Institute எனும் விரைவான இலவச சேவையை பற்றி தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் கடந்த (02.08.2009) ஞாயிற்றுக்கிழமையன்று பாண்டிச்சேரியிலிருந்து கோயமுத்தூருக்கு பேருந்தில் பயணித்தபோது தேசிய நெடுஞ்சாலையில், ஆத்தூரில் உள்ள பாவேந்தர் ஆர்ட்ஸ் அண்டு சைன்ஸ் கல்லூரிக்கு அருகில் நான் பயணித்த பஸ் எதிரே வந்த ஒரு சுமையுந்துடன் விபத்துக்குள்ளானது.
என்னுடன் பயணித்த இரண்டு சக பயணிகள் இதில் விபத்துக்குள்ளாகினர்.
அவர்களில், ஒரு பெண்ணும், அப் பெண்மணியுடைய 1 1/2 வயது நிறம்பிய பெண் குழந்தையுமாவர்.
அந்தப் பெண்ணுக்கு தன் கையில் பலமான அடியும், குழந்தையோ பேச்சு மூச்சற்றும் காணப்பட்டனர். நாங்கள் பயணித்த பேருந்தில் முதலுதவிப் பெட்டி வசதி கூட வைத்திருக்கவில்லை.
விபத்து நடந்திருந்த நேரம் சரியாக நடு இரவு 12:57 மணியாகும்.
அந்தப் பெண்ணுடைய மற்றும் அவர் குழந்தையின் நிலையைப் பார்த்து நான் உடனடியாக 108 என்ற எண்ணுக்கு சரியாக நடுநிசி இரவு 12:59 மணிக்கு போன் செய்து விபத்துக்குள்ளான நிலைமையையும், கிராமத்துப் பெயர் மற்றும் எந்த தாலுகா இன்னும் மாவட்டப் பெயரையும் (உள்ளுர்வாசியின் துணையுடன்) விளக்கினேன். இத் தகவலை நான் அறிவிக்க 3 நிமிடங்கள் ஆனது.
சரியாக 1:03 இரவு (அடுத்த ஒரு நிமிடத்தில்) நான் 108 லிருந்து கான்ஃபிரன்ஸ் அழைப்பு வாயிலாக மாவட்ட மட்டத்திற்குட்பட்ட சென்டரிலிருந்து என் அலைபேசிக்கு அழைப்பு பெற்று சரியான இடத்தையும், விபத்து பற்றியும் விளக்கினேன். இதற்கும் ஒரு 3 நிமிடங்களே ஆனது.
அடுத்து சரியாக 1:08 மணி இரவு மீண்டும் ஒரு அழைப்பு ஆம்புலன்ஸிருந்து வந்தது, விபத்துக்குள்ளான இடத்தை நோக்கி ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருப்பதாக.
மிக ஆச்சரியமாக, ஆம்புலன்ஸ் சரியாக 1:17 க்கு விபத்துக்குள்ளான இடத்தை வந்தடைந்து மருத்துவ உதவியையும் தொடங்கியது.
இதன் பிறகு பேச்சு மூச்சற்று இருந்த குழந்தை பழைய நிலைமைக்கு திரும்பியது (இது சரியான நேரத்தில் 108 EMRI யின் அவசர உதவி வந்தமையாலே), மேலும் கையில் அடிபட்ட அந்தக் குழந்தையின் தாயிற்கும் தேவையான மருத்துவ உதவி அளிக்கப்பட்டு இறுதியில் இருவரும் நல்ல நிலைமையை அடைந்தார்கள்.
இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயம் EMRI 108 ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு, அவர்களுக்கு தகவல் கொடுத்த 15 நிடங்களில் வந்து சேர்ந்தமையால் கிடைத்த ஒரு பேருதவி என்றே சொல்ல வேண்டும்.
இங்கே இன்னொன்றையும் குறிப்பிட்ட விரும்புகிறேன், என்னைத் தவிர இந்த வாகனத்தில் என்னுடன் பயணித்த எந்ததொரு சக பயணிக்கும் 108 ல் இப்படி ஒரு சேவை இருப்பதை அறிந்திருக்கவில்லை
நான் 108 எனும் சேவையை EMERGENCY EVACUATION DRILL என்ற பெயரில் கடந்த ஜுன் 2009 ல் நடைபெற்ற பயிற்சியின் வாயிலாக அறிந்திருந்தமையால், இங்கே என்னுடன் பயணித்த சக பயணிக்கு உதவ முடிந்தது.
இத் தகவலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தில் உள்ள EMRI – “108” என்ற சிறந்த சேவையின் வாயிலாக ஆபத்தில் உழலும் மக்கள் ஒரு சிறந்த சேவையைப் பெற்று நலன் பெறவேண்டி.
குறிப்பு- இச்சேவை சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கு இலவசமாக உதவவும், அழைக்க வேண்டிய 108 என்ற எண்ணிற்கும் எவ்வித தொலைபேசிக் கட்டணமும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் 108 க்கு போன் செய்த 20 நிமிடங்களுக்குள் விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்சோ அல்லது தீயணைப்பு வாகனமோ அல்லது காவல்துறை வாகனமோ தேவைக்கேற்ப வந்து சேறும் வசதியை மிக துரிதமாக நீங்கள் போன் செய்த அடுத்த நிமிடத்தில் Emergency Response Centre (ERC) உங்களிடமிருந்து தகவல்களை அறிந்து அனுப்பி வைக்கும்.
மேலும் இச் சேவை தற்பொழுது 1900 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வசதிகளைக் கொண்டு இந்தியா முழுவதும் ஆந்திரபிரதேஷம், குஜராத், உத்தரகான்ட், கோவா, சென்னை, ராஜஸ்தான், கார்நாடகா, அஸ்ஸாம் மேகலாயா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் 2011 க்குள் ஏறத்தாள 10000 (பத்தாயிரம்) ஆம்புலன்ஸ்களைக் கொண்டு ஒரு பில்லியன் மக்கள் பயன்பெறுமளவுக்கு இந்த இலவச சேவை மையத்தை இந்தியா முழுவதும் தொடங்கவுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக