முந்திரிப்பருப்பு:
முந்திரி டப்பாவில் சிறிது கிராம்பு போட்டு வைத்தால் எறும்புகள் வராது.
மிளாய்த்தூள்:
இதனுடன் கொஞ்சம் கல் உப்பு போட்டுவைக்கவும்
தக்காளி:
உப்பு தண்ணீரில் போட்டு வைக்கவும். 1வாரம் வரை வீண்ணாகாது. தினமும் தண்ணீர் மாற்றவும்.
சிறிய வெங்காயம்:
இளம் வெயிலில் சிறிது நேரம் கொட்டிவையுங்கள். பிறகு காற்றோட்டம் படும்படியான பெட்டியில் வைக்கவும்
கறிவேப்பிலை:
நிறைய கிடைக்கும் சமையங்களில் முதலில் கழுவி காயவையுங்கள்। பின்பு பாட்டிலில்களில் போட்டு வைக்கவும். சமையலுக்கு பயன்படுத்தும் பொழுது தண்ணீரில் போட்டு எடுத்து பயன்படுத்தவும்.
காலிபிளவர், முள்ளங்கி, ,முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை சில நாட்கள் கழித்து சமைத்தால் ஒரு வகை வாடை வரும். இதனை போக்க இதனுடன் சிறிது எலுமிச்சைசாறு கலந்து சேர்த்தால் சுவையாக இருக்கு
குறிப்பு:
பச்சை காய்கறிகளைப் பொருத்தவரையில் மொத்தமாக வாங்கி அதிக நாட்கள் வைத்து பயன்படுத்துவது நல்லதல்ல.
காய்கறிகள் அனைத்தையும் தனி தனி கவரில் வைத்து பயனடுத்தவும்.
நன்றி: என் இனிய இல்லம்
ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக