எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

திங்கள், ஆகஸ்ட் 17, 2009

சமையல் டிப்ஸ்....

கேரட்டை துருவும் முன்பு 5 நிமிடம் தண்ணீரில் போட்டு துருவினால் கேரட் கெட்டியாகவும் துருவ ஈசியாகவும் இருக்கும்.

பெருங்காயம் தாளிக்கும் பொழுது சிறிது நெய் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.

கத்திரிக்கயை ஹாட்பேக்கில் போட்டு வைத்தால் 5 நாட்களுக்கு ஃபிரெஷ்ஷாக இருக்கும்.

பிரியாணி செய்யும் பொழுது அடிபிடிக்காமல் இருக்க பாத்திரத்தின் கீழே வட்டமாக நறுக்கிய உருளைகிழங்கு போட்டு அதன் மீது பிரியாணியினை தம்மில் போடவும்.

பிரியாணி புலாவ் செய்யும் பொழுது பாதி தண்ணீரும், மீதி தேங்காய்பாலும் சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும்.

இட்லி மாவு புளிப்பு அதிகமாக இருந்தால் அதில் சிறிது சர்க்கரை சேர்த்தால் பாதி புளிப்பு குறையும்.

காய்கறி கூட்டு செய்யும் பொழுது தேங்காய் பூக்கு பதிலாக பொட்டுகடலைத்தூள் சேர்த்து இறக்கவும்

குலாப் ஜாமூன் செய்யும் பொழுது அதில் பால் சேர்த்து பிசைந்தால் சுவை நன்றாக இருக்கும்.

சப்பாத்தி பிசையும் பொழுது பால் சேர்த்து பிசைந்தால் சுவை அதிகமிருக்கும்.

டிபன் பாக்சில் இட்லி எடுத்து போகும் பொழுது அதன் மீது நெய் தடவியிருந்தால் வறண்டு போகாமல் இருக்கும்.
துருவும் முன்பு 5 நிமிடம் தண்ணீரில் போட்டு துருவினால் கேரட் கெட்டியாகவும் துருவ ஈசியாகவும் இருக்கும்.

ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக