உறவுகள்... இதில்தான் எத்தனை வகை..?
தாய், தந்தை, தாத்தா,பாட்டி, கணவன், மனைவி, மகன், மகள் போன்ற குடும்ப உறவுகள்; வெளியே நண்பர்கள் என சமூக உறவுகள்...
நம் வாழ்க்கைத் தரத்தை தீர்மானிப்பதில், உறவுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. உண்மையில் ஒருவருக்கு உதவிகள்தேவைப்படும்போதுதான் உறவுகளின் ஞாபகம் வருகிறது. ஆனால்,எதிப்பார்ப்புகள் நிறைவேறாத போது உறவில் விரிசல் ஏற்படுகிறது.
நம் உறவுகள் நம்மை விட்டு விலக, நம் கோபமும் காரணமாகிவிடுகிறது!
நம் கருத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் போதுதான் கோபம் ஏற்படுகிறது. உறவுகள் நமக்குப் பிடிக்காத காரியம் செய்யும்போது கோபம் வருகிறது. நமக்கு கோபம் வருவது போல உறவினருக்கும் கோபம் வரும் என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.
சற்றே யோசனை செய்தால் இவை புரியும்!
நம் வீட்டில் வேலை செய்யும் நபர்கள் கூட, தன் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துவதை விரும்புவதில்லை. அதனால் அவர்களையும் நமக்குச் சமமாக, நம்மில் ஒருவராக எண்ணிப் பழகினால் எதிர்ப்பார்த்ததற்கு மேல் பலன்கள் கிட்டும்.
உறவுகள் தொடர... யாரையும் நிர்வகிக்க முயற்சி செய்யாதீர்கள்.
உறவுக்கு ஆதாரம் அன்புதான்.
ஆகவே அனைவரிடமும் அன்பு செலுத்துவோம்... வெறுப்பை வெறுத்து ஒதுக்குவோம்.
உறவுப்பூக்கள் மலரும்!
நன்றி: ஜெய்லானி
ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக