எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

திங்கள், ஆகஸ்ட் 17, 2009

எளிதில் வேலை கிடைக்க?

எளிதில் வேலை கிடைக்க?

sdudent_4எளிதில் வேலை கிடைக்க?

நீங்கள் எந்த துறையில் பயின்றவறாக இருந்தாலும் Interview செல்லுவதற்கு முன் கவனிக்க வேண்டியவை.

RESUME OR CURRICULAM VITAE (CV)

CVஎன்பது உங்களை பற்றிய ஒரு கண்ணோட்டம், அதில் உங்களுடைய முழு விபரம் மற்றும் கல்வி தகுதி குறிப்பிட்டு இருத்தல் அவசியம், நீங்கள் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்கினால் அதையும் குறிப்பிடலாம், உதாரணமாக நீங்கள் விளையாட்டு துறையில் அல்லது பொது அறிவு துறையில் அல்லExtra Curricular Activities ஈடுபாடு கொண்டிருந்தால் அதையும் குறிப்பிடலாம். உங்கள் Resume இரண்டு பக்கத்திற்கு மிகாமல் இருத்தல் அவசியம். நீங்கள் குறிப்பிடும் அனைத்து செய்திகளும் ஒரே சீரான எழுத்தாக (ச்ர்ய்ற்ள்) இருத்தல் வேண்டும்.

ஆங்கில உரையாடல்(ENGLISH CONVERSATION)

பொதுவாக எல்லா Company களும் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். ஆகவே நாம் ஆங்கில மொழியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய ஆங்கிலமொழி கீழ்கானும் வழிமுறையில் அமைந்துள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுதல் அவசியம்.

சரிபார்த்தல் (Develop your voice)

நீங்கள் பேசுவதற்கு முன் உங்கள் ஒ லி யை சரிபாத்துக் கொள்ளுதல் மிகவும் அவசியம் உதாரணமாக நீங்கள் நேர்காண ல் ஈடுபடும் போது பொரும்பாலும் ஒரு நபரிடமே பேசும் வாய்ப்பு ஏற்படும் அப்போது நாம் ஒ யை சிறிது குறைத்தல் வேண்டும் அதுவே ஒன்றுக்கு மேற்பட்ட நபரிடம் பேசும் வாய்ப்பு ஏற்பட்டால் ஒ யை சிறிது உயர்த்துதல் வேண்டும்.

தெளிவாக பேசுதல்(Animate your voice)
நம்முடைய கருத்தை முன் வைப்பதற்கு முத ல் நாம் தெளிவாக பேசுதல் அவசியம். நாம் எதை கூற விரும்பினாலும் அதை கேட்பவர் புரிந்து கொள்ளும் விதமாக அமைத்தல் மிகவும் அவசியம்.

வார்த்தை பயன்பாடு (Enunciate your words)
நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை உங்களுக்கு அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டும். அர்த்தம் தெரியாத வார்த்தையை உபயோகம் செய்தல் கூடாது, தினமும் ஒரு புதிய வார்த்தையை அறிந்து கொள்ளுதல் உங்களுக்கு உதவும். கண் அமைப்பு (Make eye contact)
நாம் யாரை நோக்கி உரையாடல் நடத்தினாலும் அவருடைய கண்களை நோக்கி பேசுதல் மிகவும் அவசியம், அப்படி செய்தால் கவனம் சிதையாமல் இருக்கும். பேசும் வாய்ப்பு நம்மிடைய ஆங்கிலம் பேசும் வாய்ப்பை நாம் அதிகரித்து கொள்ள வேண்டும், தினமும் ஆங்கில இதழ்களை படிக்க வேண்டும். பின்னர் நமக்கு தெரியாத வார்த்தைகளின் அர்த்தங்களை தெளிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் நம்முடைய பேசும் திறன் மேலும் வளரும்.

எமோஷனல் கோசன்ட்

முன்பெல்லாம் ஒண எனப்படும் ஒருவரின் அறிவுத் திறன்தான் அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இப்போதோ எமோஷனல் கோசன்ட் எனப்படும் திறனும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது, அதாவது உணர்வுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறனானது மிகவும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது.

குழு விவாதம்

குழு விவாதங்களின் போது தனி நபரின், உணர்ச்சி வசப்படும் தன்மையையும், எந்த பிரச்சனையையும், அவரால் பாகுபாடின்றி அறிவு பூர்வமாக யோசித்து பேச தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாமா? இந்திய கிரிக்கெட்டில் விளையாடும் பணம், போன்ற தலைப்புகள் தரப்படுகின்றன, நடுநிலையோடும் நிதானத்தோடும் உணர்ச்சிவசப்படாமல் பேச பழக வேண்டும். மேலும் குழுவில் உள்ள மற்றவர்களுக்கு வாய்ப்பு அளித்தல் அவசியம்.

ஒழுக்கத்தில் நம்மை அறிதல் மேற்கூறப்பட்ட தகவல் அனைத்தையும் சீறாக பேச ஒழுக்கம் மிகவும் அவசியம் மாணவப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் ஒழுக்கம் பிற்காலம் வரை அவர்களுக்கு தொடரும், நேரம் தவறாமை, பிறரை மதித்துப் பேசுதல், பிறருக்கு தீங்கு செய்யாமல் இருத்தல், பிறருடைய பொருளை திருட நினைக்காமல் இருப்பது, (புகை பிடித்தல், மது, பெண்களை கே செய்தல் உள்ளிட்ட ஏராளமான தவறான பழக்கங்கள்) ஆகியவற்றிக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும்.

ஆங்கிலம் மொழி தொடர்பு

நமக்குத் தேவையான மற்றொரு மொழியான ஆங்கிலத்தை படிக்க, எழுத புரிந்து கொள்ள மற்றும் பேசுவதற்கு ஆற்றல் இருக்கிறதா என்பதை அறிய வேண்டும். மொழிகளில் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு சென்று ஒருமாத அல்லது இருமாத முழுநேர பயிற்சியில் சேர்வது நல்ல பலன் அளிக்கும் இந்திய தேசிய மொழியான இந்தியும் ஒரு வெளிநாட்டு மொழியும் உங்ககளுக்கு தெரிந்திருப்பது நீங்கள் வேலைக்கு செல்வதை எளிதாக்கும். ஆகவே தாய்மொழி, ஆங்கிலம் தவிர தேசிய மொழி மற்றும் வெளிநாட்டு மொழி ஆக நான்கு மொழிகள் தெரிந்திருப்பது உங்களை நீங்களே உயர்த்திக் கொள்ள உதவும். வெளிநாட்டு மொழிகளைப் பொறுத்தவரை பிரெஞ்சு, ஜப்பானிஷ், ஜெர்மன், சீனம் போன்ற மொழிகள் தெரிந்திருப்பது அந்தந்த நாடுகளுக்கோ அல்லது அந்நாடுகளின் இந்திய கிளைகளிலோ பணிபுரிவதற்கு மிக எளிதாக இருக்கும்.

அறிவும் ஒழுக்கமும்

அறிவையும் ஒழுக்கத்தையும் வளர்த்துக் கொள்வதுதான் மாணவப்பருவம், அந்த பருவத்தில் அதற்கு அப்பாற்பட்ட எந்த விஷயத்தையும் ஒதுக்குவதே சிறந்தது டி.வி நிகழ்ச்சிகளில் மிகவும் தேர்வு செய்து பார்க்க வேண்டும். செய்திகள், அறிவு வளர்க்கும் விஷயங்கள் இடம்பெறும் காட்சிகளை மட்டுமே பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் படிக்கும் பாடத்தைவிட மற்ற நிகழ்ச்சிகள் மனதில் முக்கியமானதாகப் படத் தொடங்கிவிடும். பெற்றோர்கள் மற்றும் அசிரியர்கள் சொல்லும் நல்ல விஷயங்களை கேட்க மற்றும் கடைபிடிக்க மிகவும் கஷ்டமாகத் தோன்றும், எப்போதும் அறிவுரை கூறிக்கொண்டிருக்கிறார்களே என்று அவர்கள் மீது கோபமும் எரிச்சலும் கொள்ளக்கூடாது. நல்ல விஷயங்களை யார் சொன்னாலும் அதை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இவ்வாறு பழகும் போதுதான் மனதில் எப்போதும் நேர்மையான சிந்தனைகள் உருவாகும், நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்படும் சமுதாயத்தில் பொறுப்புள்ளவராகவும் உயர்ந்தவராகவும் ஆக்கும்.

நன்றி: www.tntj.net

ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக