எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

திங்கள், ஆகஸ்ட் 17, 2009

சுலபமான வழிகள்

சுலபமான வழிகள்



  • வெங்காயத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் அதனை நறுக்கும் பொழுது கண்ணீர் வராமல் சுலபமாக நறுக்கலாம்.

  • சாமான்கள் வாங்கும் பொழுது நிறைய ரப்பர் பேண்ட் போட்டு வரும் அதனை சேர்த்து வைத்தால ஏதாவது அவசர தேவைக்கு உதவும். நீண்ட நாட்கள் ஆகும் பொழுது ஒன்றுடன் ஒன்று ஓட்டிக்கொள்ளும் அதற்க்கு சுலபமான வழி ரப்பர் பேண்ட் போட்டு வைக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரை போட்டு வைத்தால் ஒன்றுடன் ஒன்று ஓட்டாது. அல்லது கதவு கைபிடியில் மாட்டி வைக்கலாம்.

    விருந்தினர் வருகையின பொழுது வீட்டில் தலையினை குறைவாக இருந்தால் மெலிதான பெட் ஷீட் அல்லது மெலிதான மெத்தையினை நீளமாக மடித்து தலையணை போல் பயன்படுத்தலாம்.

  • சிறிய முள் கால்களில் குத்திவிட்டால் அந்த இடத்தின் மீது சிறிது பெவிகால் தடவிவிட்டு சிறுது நேரம் கழித்து உரித்து எடுத்தால் அதனுடன் சுலபமாக முள்ளும் வந்துவிடும்..

  • கிரைண்டரில் அரிசி சிக்காமல் அரைக்க ஒரு கைபிடி உளுந்து சேர்த்து அரைத்தால் அரிசி அரைக்க சுலபமாக இருக்கும்.

  • வீட்டுக்கு தேவையான பொருட்களை ஞாபகம் வரும் பொழுதே நோட்டில் அல்லது பேப்பரில் எழுதி வைக்கவும். பொருட்கள் வாங்க கடைக்கு போனால் சுலபமாக வாங்க முடியும்.

  • தையல் சாமான்கள் வைக்கும் டப்பாவில் காந்தம் போட்டு வைக்கவும்.
    ஏதாவது ஊசி, ஊக்கு, போன்ற பொருட்கள் கீழே விழுந்தால் சுலபமாக எடுக்கலாம்
நன்றி: என் இனிய இல்லம்
ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக