எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

புதன், ஆகஸ்ட் 12, 2009

செல்போன் திருடர்கள் - உஷார்!

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய செல்போன் சர்வீஸ் நிறுவனமான STC, செல்போன்கள் திருட்டைத் தடுக்க புதிய வழியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உங்களது செல்போன் திருட்டுப் போனால், உடன் அதனை செயலிழக்கச் செய்ய முடியும்.
ஒவ்வொரு செல்போனுக்கும் “சர்வதேச அலைபேசிக் கருவி அடையாள எண் - International Mobile Equipment Identity (IMEI) number” உள்ளது. தங்களது செல்போனில் *#06# என்ற எண்களை அழுத்தி, அந்த எண்ணை கண்டுபிடித்து தனியாக குறித்து வைத்துக்கொள்ளலாம். இது 15 எண்களைக் கொண்ட அடையாள குறியீடு ஆகும். இந்த எண்ணையும், செல்போன் நம்முடையது தான் என்பதற்கான ஆவணத்தையும், ஏதேனும் அருகில் உள்ள STC அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தங்களது செல்போன் தொலைந்து விட்டால், உடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு STCக்கு தகவல் தெரிவித்தால், உடன் அவர்கள் நமது திருடப்பட்ட செல்போனை செயலிழக்கச் செய்து விடுவார்கள். திருடியவர்கள் செல்போனை உபயோகப்படுத்த முடியாது.
இது STC வழங்கும் இலவச சேவை ஆகும். தவறுதலாக, நாம் நம் செல்போன் தொலைந்ததாக நினைத்துக் கொண்டு, செயலிழக்கச் செய்து விட்டாலும், மீண்டும் ஒரு முறை தொடர்பு கொண்டால், மீண்டும் செல்போன் செயலிழப்பை சரி செய்து கொள்ளலாம் என அரப்நியூஸ் செய்திப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
தெருக்களில் செல்போனில் பேசிக்கொண்டே செல்வது, செல்போனை வெளியே தெரிவது போல் வைத்துக் கொள்வது முதலியவற்றை தவிர்த்து இரவு நேரங்களில் பாதுகாப்புடன் செல்வது முதலான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்வதே சாலச் சிறந்தது.
மேலதிக விபரத்திற்கு:
http://www.arabnews.com/?page=1&section=0&article=119042&d=10&m=2&y=2009

நன்றி: http://www.tntj.net/ &
சகோ. பைசல் (ரியாத்)


ரியாத்திலிருந்து அபூ தஜ்மீல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக