ரியாதில் நடைபெற்ற நாகை மாவட்டக் கூட்டமைப்பின் பொதுக்குழுக்கூட்டம்!
ரியாத் மண்டல பொருளாளர் சகோதரர்தொண்டி சிராஜ் அவர்கள் சுமார் 30 நிமிடங்கள் உரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்புரையாளராக தாயகத்திலிருந்து சகோதரர்எம். எஸ் சுலைமான்(உயர்நிலைக்குழு உறுப்பினர், தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்) அவர்கள் “தவ்ஹீதா! தற்பெருமையா!” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இதன் சாரம்சம் ஆனது, நிர்வாகிகளுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் மற்றும் இருக்கக்கூடாத பண்புகளைப்பற்றி கீழ்கண்டவாறு தெளிவாக விளக்கினார்கள். 1. எது செய்தாலும் அது அல்லாஹ்விற்காக (இக்லாஸ்) என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும் எனவும், 2. பிறர் புகழ வேண்டும் என்பதற்காக முகஸ்துதி மற்றும் தற்பெருமை கொள்ளாமல் செயலாற்ற வேண்டும் எனவும் சிறப்புரையாற்றினார்கள்.
இதனைத் தொடர்ந்து தேர்தல் பொறுப்பாளரர் சகோதரர் தொண்டி சிராஜ் அவர்கள் தேர்தல் விதிமுறைகளை விளக்கி தேர்தலை ஆரம்பித்தார்கள். சகோதரர் சிராஜ் அவர்களுக்கு துணையாக ரியாத் மண்டல பொதுச் செயலாளர் சகோதரர் பெய்சல்அவர்களும் கலந்துக் கொண்டார்கள்.
இந்தத் தேர்தலில் நாகை மாவட்ட தவ்ஹீது கூட்டமைப்பு – ரியாத் மண்டலத்திற்கு தேர்வுபெற்ற நிர்வாகிகள்.
தலைவர்: அரசூர் பாருக் போன் : 0502816906
பொதுச் செயலாளர்: அறங்கை ஹபிபுல்லா போன் : 0505371674
பொருளாளர்: மயிலாடு துறை ஷாகுல் ஹமீது, போன் : 0502154196
துணைத்தலைவர்: பெரிய கூத்தூர் ஹாஜா அலாவுதீன், போன் :0547403064
கோப்பு காப்பாளர் : ஏனங்குடி சேக் அலாவுதீன், போன் : 0560037294.
தணிக்கையாளர் : நாகூர் இத்ரீஸ், போன் : 0505296881.
கடன்திட்ட நிர்வாகிகள் : எலந்தங்குடி பரித், நாகை ஷரிப், ஏனங்குடி சேக் அலாவுதீன்.
மேற்கண்டவாறு நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர், அல்லாஹூ அக்பர்.
இதன் பிறகு ரியாத் மண்டல பொதுச் செயலாளர் சகோதரர் பெய்சல் அவர்கள் உரையாற்றினார்கள். அதன் சாரம்சமானது பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்புகளை உணர்ந்து சரியாக செயல்படவேண்டும் எனவும், அனைவரது கருத்துக்களையும் பொறுமையாக கேட்டு விருப்பு, வெறுப்பு ஏதுமின்றி பாரபட்சம் பார்க்காமல் செயல்படவேண்டும் என அறிவுருத்தினார்கள்.
மதிய உணவிற்குப் பிறகு துவாவுடன் கூட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக